Published:Updated:

செல்போனில் இயற்கை விவசாயம்... இளைஞருக்கு விருது!

செல்போனில்  இயற்கை விவசாயம்... இளைஞருக்கு விருது!
பிரீமியம் ஸ்டோரி
செல்போனில் இயற்கை விவசாயம்... இளைஞருக்கு விருது!

தொழில்நுட்பம்துரை.நாகராஜன், ஜெ.சாய்ராம்

செல்போனில் இயற்கை விவசாயம்... இளைஞருக்கு விருது!

தொழில்நுட்பம்துரை.நாகராஜன், ஜெ.சாய்ராம்

Published:Updated:
செல்போனில்  இயற்கை விவசாயம்... இளைஞருக்கு விருது!
பிரீமியம் ஸ்டோரி
செல்போனில் இயற்கை விவசாயம்... இளைஞருக்கு விருது!

ணினி வழியில் தமிழ் மொழியை உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்குபவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது வழங்கி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரைச் சேர்ந்த இளைஞர் செல்வமுரளிக்கு 2015-ம் ஆண்டுக்கான ‘முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

செல்போனில்  இயற்கை விவசாயம்... இளைஞருக்கு விருது!

விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் செல்வமுரளி உருவாக்கியுள்ள செல்போன் செயலி(ஆப்ஸ்)க்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

செல்வமுரளிக்கு ‘பசுமை விகடன்’ சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, அவர் உருவாக்கிய செயலி குறித்துப் பேசினோம். “கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சுட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் ‘விஷுவல் மீடியா டெக்னாலஜிஸ்’ங்கிற சாஃப்ட்வேர் கம்பெனியை நடத்திட்டு இருக்கேன். இதுவரை என் கம்பெனி பத்தி பக்கத்துல இருக்கிறவங்களுக்குக்கூட தெரியாது. இந்த விருது கிடைச்சதுக்கப்புறம்தான் இது சாஃப்ட்வேர் கம்பெனின்னே நிறைய பேருக்குத் தெரிய வந்திருக்கு. குடும்பச் சூழ்நிலை காரணமா, நான் வேலை செஞ்சுட்டேதான் கல்லூரிப் படிப்பை முடிச்சேன். அப்போதிருந்தே நாம ஒரு கம்பெனி ஆரம்பிச்சு, பலபேருக்கு வேலை கொடுக்கணும்னு முடிவு பண்ணி லட்சியத்தோட படிச்சேன். இப்போ அமெரிக்கா, சிங்கப்பூர்னு எங்க கம்பெனியை விரிவுபடுத்தியிருக்கேன்” என்ற செல்வமுரளி தொடர்ந்தார். “விவசாயத்தில் இருக்கும் பிரச்னைகளைப் பாரம்பர்ய வழிமுறைகள் மூலம்தான் தீர்க்க முடியும். அதனால, பாரம்பர்ய விவசாயத்தோட அவசியம், அதோட தொழில்நுட்பம், விவசாயம் சார்ந்த செய்திகள் எல்லாத்தையும் எல்லார்கிட்டேயும் சேர்க்கிறதுக்காகத்தான் இந்த செயலியை உருவாக்கினேன். இது தமிழ்மொழியில் இயங்குற செயலி. ‘விவசாயம் இன் தமிழ்’ (Vivasayam in Tamil)-ங்கிறதுதான் செயலியோட பெயர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செல்போனில்  இயற்கை விவசாயம்... இளைஞருக்கு விருது!

இதை நான் உருவாக்குறதுக்குக் காரணமானவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யாதான். ஒரு தடவை அவர்கிட்ட பேசுற வாய்ப்பு கிடைச்சப்போ, ‘இளைஞர்கள்தான் பாரம்பர்ய விவசாயத்தைக் கையில் எடுத்து, அதை எல்லார்கிட்டயும் கொண்டு சேர்க்கிற வேலைகளைச் செய்யணும். அப்போதான், விவசாயிகள் பிரச்னைகளைச் சரி செய்ய முடியும்’னு சொன்னார். அதுக்கப்புறம்தான் நம்மாலான முயற்சிகளை எடுக்கணும்னு இந்தச் செயலியை உருவாக்கினேன். இந்த இயற்கை விவசாய செயலியை வடிவமைக்கிறதுக்கு வழிகாட்டியது ‘பசுமை விகடன்’தான். அதுல பிரசுரமாகிற இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களைச் செயலி மூலமாகக் கொடுத்திருக்கோம். அதனாலதான், இந்த விருது நம்மாழ்வார் அய்யாவுக்கும் பசுமை விகடன் இதழுக்கும் சமர்ப்பணம் செய்றேன்” என்ற செல்வமுரளி நிறைவாக,

செல்போனில்  இயற்கை விவசாயம்... இளைஞருக்கு விருது!

“இதில்லாம, வணிகர்கள் பயன்படுத்தக்கூடிய தமிழ் சாஃப்ட்வேர், விவசாயத்தின் நவீன தொழில்நுட்பங்கள், நிலத்தடி நீர் குறித்த செயலினு நூற்றுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள், செயலிகளை உருவாக்கி இருக்கோம். இப்போ, விவசாயிகளுக்கான கூட்டுறவு அமைப்பைத் தொடங்குற முயற்சியில் ஈடுபட்டிருக்கோம். விவசாயிகளுக்குத் தேவையான நிதி, தொழில்நுட்ப ஆலோசனை எல்லாத்தையும் கொடுத்து, அவங்க விளைவிக்கிற விளைபொருள்களையும் இந்த அமைப்பு மூலமாவே வாங்குறதுக்கான ஏற்பாடுகளைச் செஞ்சுட்டு இருக்கோம்” என்றார்.

அவரின் முயற்சி வெற்றி பெற மீண்டும் வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism