Published:Updated:

பயிர்களின் பாதுகாப்புப் படை! - உதவிக்கு வரும் உயிரியல் - 8

பயிர்களின் பாதுகாப்புப் படை! - உதவிக்கு வரும் உயிரியல் - 8
பிரீமியம் ஸ்டோரி
பயிர்களின் பாதுகாப்புப் படை! - உதவிக்கு வரும் உயிரியல் - 8

நோய்க் காரணிகளை அழிக்கும் நுண்ணுயிர்கள்சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! இடுபொருள்முனைவர் அ.உதயகுமார் - தொகுப்பு: ரா.கு.கனல்அரசு - படங்கள்: வீ.சிவக்குமார்

பயிர்களின் பாதுகாப்புப் படை! - உதவிக்கு வரும் உயிரியல் - 8

நோய்க் காரணிகளை அழிக்கும் நுண்ணுயிர்கள்சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! இடுபொருள்முனைவர் அ.உதயகுமார் - தொகுப்பு: ரா.கு.கனல்அரசு - படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:
பயிர்களின் பாதுகாப்புப் படை! - உதவிக்கு வரும் உயிரியல் - 8
பிரீமியம் ஸ்டோரி
பயிர்களின் பாதுகாப்புப் படை! - உதவிக்கு வரும் உயிரியல் - 8
பயிர்களின் பாதுகாப்புப் படை! - உதவிக்கு வரும் உயிரியல் - 8

யற்கை உர பற்றாக்குறை மற்றும் சூழல் காரணமாக மண்ணை வளமாக்கும் நுண்ணுயிர்கள் அழிந்துகொண்டே வருகின்றன. எதிர் உயிர் பூஞ்சணம் என அழைக்கப்படும் இந்த நுண்ணுயிர்கள், பயிர்களின் வேர்களில் வளர்ந்து, தீமை செய்யும் பூஞ்சணங்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. சில நுண்ணுயிர்கள், காற்றிலுள்ள தழைச்சத்தைக் (நைட்ரஜன்) கிரகித்து மண்ணில் நிலைநிறுத்தும் பணியையும், சில நுண்ணுயிர்கள், மண்ணில் இடும் பொட்டாஷ் சத்துகளைப் பயிர் எடுத்துக்கொள்ளும் வகையில் உடைத்துத் தரும் பணியையும் செய்கின்றன. அதுபோன்ற மண்ணை வளப்படுத்தும் சில நுண்ணுயிர் உரங்கள் பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். தொடர்ந்து, நோய் எதிர்ப்புக் காரணிகளை உருவாக்கும் சில உயிர் உரங்கள் பற்றிப் பார்ப்போம்.

பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பொருள்களைப் பயன்படுத்தும்போது, சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. விளைபொருள் விஷமாகிறது. பூச்சி மற்றும் நோய்களில் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிவிடுகிறது. நன்மை செய்யும் பூச்சிகள் இறந்துவிடுகின்றன. இவ்வளவு சூழலியல் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், ‘நோய்த் தாக்குதலிலிருந்து பயிர்களைக் காப்பாற்றுவதற்காக வேறு வழியில்லாமல்தான் இவற்றைத் தெளிக்கிறோம்’ என விவசாயிகள் சொல்கிறார்கள். ஆனால், இயற்கை முறையில் இதற்கான தீர்வு சின்னச் சின்ன நுண்ணுயிர்களிடம் இருக்கிறது. சில நுண்ணுயிர்கள், பயிருக்குப் பாதுகாப்பாக இருப்பதுடன், நோயை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன. இதனால் பயிரின் வளர்ச்சி அதிகமாவதுடன், நோயில் இருந்தும் பாதுகாக்கப்படுகிறது. அப்படிப்பட்ட நுண்ணுயிர்களில் ஒன்றுதான் சூடோமோனஸ்.

பயிர்களின் பாதுகாப்புப் படை! - உதவிக்கு வரும் உயிரியல் - 8

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதை விதை நேர்த்தி, அடியுரம், இலைவழித் தெளிப்பு என மூன்று வகைகளில் பயன்படுத்தலாம். விதைகள் மற்றும் மண்ணால் உருவாகும் தாவர நோய்களை சூடோமோனஸ் கட்டுப்படுத்துகிறது.

விதை நேர்த்தி செய்வதற்கு... ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் சூடோமோனஸ் கலந்து, அதில் ஒரு கிலோ விதையைப் போட்டு, 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். வாழை நடவு செய்யும்போது, ஒரு லிட்டர் தண்ணீரில், 10 கிராம் சூடோமோனஸ் கலந்து, அதில் வாழை விதை கரணைகளை 10 நிமிடங்கள் ஊறவைத்து நடவு செய்ய வேண்டும். சூடோமோனஸ்... தானியப் பயிர்களைத் தாக்கும் வேரழுகல் நோய்கள்; எண்ணெய்வித்துப் பயிர்களைத் தாக்கும் வேரழுகல், வாடல் நோய்கள்; நெல் பயிரைத் தாக்கும் குலைநோய், தண்டு அழுகல், இலைக்கருகல் ஆகிய நோய்களுக்கான காரணிகளைக் கட்டுப்படுத்துகிறது. அத்துடன் பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்களான ஆக்ஸின், ஜிப்ரலின் மற்றும் இன்டோல் அசிடிக் அமிலம் ஆகியவற்றைச் சுரந்து பயிர்களின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

நெல், சோளம், கம்பு, உளுந்து, சுண்டல், துவரை, பட்டாணி, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு, சோயா, முள்ளங்கி, காலிஃபிளவர், பீட்ரூட் போன்ற பயிர்களில் சூடோமோனஸைப் பயன்படுத்தலாம். சூடோமோனஸை அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

பயிர்களின் பாதுகாப்புப் படை! - உதவிக்கு வரும் உயிரியல் - 8

சூடோமோனஸைப் போன்ற இன்னொரு நுண்ணுயிரி டிரைக்கோடெர்மா விரிடி. இதுவும் தாவரங்களில் மண்ணால் உருவாகும் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. இது, மற்ற தீமை செய்யும் நுண்ணுயிர்களைவிட, வேகமாக வளரக்கூடியது. இதில் விதைநேர்த்தி செய்து விதைக்கும்போது, விதையின் வேர் பாகத்தைச் சுற்றி வளர்ந்து கவசம்போல் மூடிக்கொள்கிறது. அதனால், மண்ணில் உருவாகும் பூஞ்சணங்கள் வேரைத் தாக்காதவாறு பாதுகாக்கப்படுகிறது. இது உயிர் பூஞ்சணம் என்பதால், பலமடங்கு பெருகி, பயிரின் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்புத் தருகிறது.

மண்ணில் உள்ள மட்காத குப்பைகளை எளிதில் மட்க வைத்து உரமாக்குகிறது, டிரைக்கோடெர்மா விரிடி. இதை அடியுரமாகவும் விதைநேர்த்தி செய்யவும் பயன்படுத்தலாம். 3 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து, ஒரு வாரம் நிழலில் வைத்துத் தினமும்
தண்ணீர் தெளித்து வர வேண்டும். பிறகு இதை அடியுரமாக நிலத்தில் இடலாம். டிரைக்கோடெர்மா விரிடி, பொடியாகவும் திரவ வடிவமாகவும் கிடைக்கிறது.

டிரைக்கோடெர்மா விரிடியில் விதைநேர்த்தி செய்ய, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் டிரைக்கோடெர்மா விரிடியை எடுத்து, 200 மில்லி ஆறிய வடிகஞ்சியில் இட்டு, அதில் விதைகளை அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு, விதைகளை நிழலில் உலர்த்தி
நடவு செய்யலாம். நாற்றுகளாக இருந்தால், 500 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியைக் கலந்து, அதில் நாற்றுகளின் வேர் பாகத்தை நனைத்து நடவு செய்ய வேண்டும். பயறுவகைப் பயிர்கள், எண்ணெய்வித்துப் பயிர்கள், மஞ்சள், வாழை, பருத்தி, இஞ்சி, பழவகைகள், மலைத்தோட்டப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள் போன்றவற்றில் ஏற்படும் வேர் அழுகல், நாற்று அழுகல், கிழங்கு அழுகல் ஆகிய நோய்க்காரணிகளை டிரைக்கோடெர்மா விரிடி கட்டுப்படுத்துகிறது.

- பரவும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism