
‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.
- ஆசிரியர்
இலவசப் பயிற்சிகள்
பசுந்தீவன உற்பத்தி
நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் மே 30-ம் தேதி ‘எண்ணெய்வித்துப் பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை’, ஜீன் 5-ம் தேதி ‘நிலக்கடலை மற்றும் ஆமணக்கு தொழில்நுட்பங்கள்’, 12-ம் தேதி, ‘குழித்தட்டு முறையில் நாற்று உற்பத்தி மற்றும் தக்காளி சாகுபடித் தொழில்நுட்பங்கள்’, 13-ம் தேதி, ‘மண்ணில்லாமல் பசுந்தீவனம் உற்பத்தி’, 19-ம் தேதி, ‘மீன் உணவு தொழில்நுட்பங்கள்’, 20-ம் தேதி ‘பருத்தி, பயறு வகைகள், மா மற்றும் பாக்குச் சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.
கால்நடைப் பண்ணை
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், மே 30-ம் தேதி ‘ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணைகள் அமைத்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது.
தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.
ஜப்பானிய காடை
கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 30-ம் தேதி ‘ஜப்பானிய காடை வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கட்டணப் பயிற்சிகள்
நாட்டுக்கோழி வளர்ப்பு
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் ஜூன் 19-ம்தேதி ‘திலேப்பியா கெண்டை மீன் வளர்ப்பு’, 22-ம் தேதி ‘உளுந்து, துவரை மற்றும் பச்சைப்பயறில் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்’, 23-ம் தேதி ‘சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரித்தல்’, 28-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 29-ம் தேதி, ‘பயிர் மற்றும் மண் மேலாண்மை முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.100.
தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.
மாடித்தோட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், ஜூன் 3-ம் தேதி ‘அங்கக உரம் தயாரித்தல்’ மற்றும் ஜூன் 24-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.
தொலைபேசி: 04652 246296
பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு, பாரத் விதை விடுதலை குழு, ஆஷா
இணைந்து நடத்தும்
தேசிய பாரம்பர்ய விதைத் திருவிழா!
* சமூக விதை வங்கிகள்
* விதை சேகரிப்பாளர்கள்
* பாரம்பர்ய விதைத் தொழில்நுட்பங்கள்
* 100 விதை வித்தகர்கள்
* 3000 பாரம்பர்ய விதைகள் கண்காட்சி
* விதை பன்மயம்
நாள்: ஜூன் 9, 10 மற்றும் 11 (மூன்று நாள்கள்)
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை
இடம்: சி.இ.ஜி அண்ணாப்பல்லைக்கழகம், கிண்டி, சென்னை.
இத்துடன் இயற்கை உணவுகள், இயற்கை பருத்தியில் கைத்தறி ஆடைகள், சிறுவருக்கான அரங்கம், பாரம்பர்ய விளையட்டுக்கள் மற்றும் இசை கருவிகள், மண் பாண்டங்கள், மாடித்தோட்ட வழிமுறைகள், பயிற்சி விதை பரிமாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வேளாண்மை புத்தகங்கள், அனுபவ விவசாயிகள் மற்றும் வல்லுநர்களின் கருத்துரைகள்.
தொடர்புக்கு:
செல்போன்: 94449 26128, 98408 73859.
அனுமதி இலவசம்... அனைவரும் வருக!
அறிவிப்பு
‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.