Published:Updated:

கடும் வெயில்... கால்நடைகள் கவனம்!

கடும் வெயில்...  கால்நடைகள் கவனம்!
பிரீமியம் ஸ்டோரி
கடும் வெயில்... கால்நடைகள் கவனம்!

கால்நடைதுரை.நாகராஜன்

கடும் வெயில்... கால்நடைகள் கவனம்!

கால்நடைதுரை.நாகராஜன்

Published:Updated:
கடும் வெயில்...  கால்நடைகள் கவனம்!
பிரீமியம் ஸ்டோரி
கடும் வெயில்... கால்நடைகள் கவனம்!

ழைக்காலத்தைவிட கோடைக்காலத்தில்தான் கால்நடைகள் அதிக பாதிப்புக்குள்ளாகின்றன. ஆண்டு முழுவதும் நமக்காக உழைக்கும் கால்நடைகளுக்குக் கோடைக்காலத்தில் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது நம் கடமை. அந்த வகையில், கோடைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், பராமரிக்கும் முறைகள் குறித்துச் சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார், காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தின் இணைப் பேராசிரியர் நிஷா.

“கோடைக்கால வெயிலின் தாக்கம் கால்நடைகளை அதிகமாகவே  பாதிக்கிறது. இக்காலங்களில் கறவை மாடுகள் சரியாகத் தீவனம் எடுத்துக்கொள்ளாமல், தண்ணீரைத்தான் அதிகமாகக் குடிக்கிறது. அதனால், மாடுகளின் வளர்ச்சி பாதிக்கும். ஊட்டச்சத்துக் குறைவு ஏற்படும். பால் உற்பத்தியும் குறையும். பருவத்துக்கு வருவதிலும் சிக்கல் ஏற்படும். பருவத்துக்கு வந்த மாடுகளுக்குச் சினைபிடித்தலில் சிக்கல் ஏற்படும். இயல்பாகவே வியர்வை நாளங்கள் குறைவாகக் கொண்டுள்ள எருமைகள் கோடையில் அதிக பாதிப்புக்குள்ளாகின்றன. இவற்றின் தோல் கறுப்பாக இருப்பதால், சூரியக் கதிர்வீச்சுகளால் அதிக பாதிப்படைகின்றன.

கடும் வெயில்...  கால்நடைகள் கவனம்!

ஆடுகளிலும் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும். தீவனம் எடுப்பதில் சிக்கல் வரும். கோழிகள் வெப்பத்தால் தாக்கப்பட்டால், உணவு உட்கொள்ளுதல் குறைவதோடு, மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும். வாய் வழியாக மூச்சுவிடும். கோழிகளிலும் முட்டை உற்பத்தி குறையும்.

ஆடு, மாடு, கோழி, பன்றி என எந்தப் பிராணியாக இருந்தாலும், சில அறிகுறிகள் மூலம், அவற்றுக்கு வெப்பத்தால் பாதிப்பு உண்டாகி இருப்பதை அறிந்துகொள்ள முடியும். நிழலான இடங்களைத் தேடுதல், அதிகமாக மூச்சுவிடுதல், மூச்சிரைப்பு, அதிக நீர் குடித்தல், பசியின்மை, சோம்பல் மற்றும் மந்தம், அதிக உமிழ்நீர்ச் சுரப்பு, சிறியளவில் நடுக்கம், உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் வெப்பத்தால் பாதிக்கப் பட்டுள்ளதை அறிந்துகொள்ளலாம்” என்ற நிஷா, பாதுகாக்கும் முறைகள் குறித்துச் சொன்னார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடும் வெயில்...  கால்நடைகள் கவனம்!


“கால்நடைகளுக்குக் கோடைக்காலத்தில் அதிக காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். கொட்டகைக்குள் வெயில் விழாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும். கொட்டகையின் மேற்கூரையை உயரமாக அமைத்தால், கொட்டகைக்குள் வெப்பம் இருக்காது. கொட்டகையின் கூரையைத் தென்னங்கீற்று, பனை ஓலை, வைக்கோல் போன்றவற்றைக் கொண்டு அமைத்தால், கொட்டகையின் உள்ளே வெப்பம் வெகுவாகக் குறையும். ஆஸ்பெஸ்டாஸ், அலுமினியம் ஆகியவற்றால் கொட்டகை அமைத்திருந்தால், அதிக வெயில் நேரங்களில் கூரையின் மீது தண்ணீர் தெளித்து வெப்பத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

வெயில் நேரத்தில் மரநிழலில் கால்நடைகளைக் கட்ட வேண்டும். வெயில் காலங்களில் கால்நடைகளைக் குளிப்பாட்ட வேண்டியது அவசியம். கொட்டகையைச் சுற்றி ஈரச்சாக்குகளைத் தொங்கவிட்டும் வெப்பத்தைக் குறைக்கலாம். குறிப்பாகக் கோழிகளுக்கு இதுபோல் செய்ய வேண்டும்.

கால்நடைகளுக்குக் குடிக்க குளிர்ச்சியான தண்ணீரை, அதிகளவில் கொடுக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றிலும் மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள்... எனப் பசுமையாகப் பராமரிக்க வேண்டும்” என்ற நிஷா நிறைவாக,

“கோடைக்காலத்தில், கால்நடைகளுக்கு அதிக எரிசக்தியும் புரதச்சத்தும் உள்ள உணவைக் கொடுக்க வேண்டும். கால்நடைகளை விடியற்காலையிலும், மாலையிலும் மேய்ச்சலுக்கு அனுப்புவது நல்லது. மதிய வேளைகளில் நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வைக்க வேண்டும். ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை மற்ற கால்நடைகளிலிருந்து தனியாகப் பிரித்துச் சிகிச்சை அளிக்க வேண்டும்” என்றார்.

தொடர்புக்கு,
வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம், தொலைபேசி: 044 27452371.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism