Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

தண்டோரா

இலவசப் பயிற்சிகள்

தேனீ வளர்ப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜூன் 27-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள்’, 28-ம் தேதி, ‘சிப்பி மற்றும் பால்காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள்’, 29-ம் தேதி ‘இயற்கை விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

கோழி வளர்ப்பு

புதுக்கோட்டை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில், ஜூன் 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ‘கோழி, நாட்டுகோழி, காடை வளர்ப்புப் பயிற்சிகள்’ நடைபெற உள்ளன. அனுமதி இலவசம்.

தொடர்புக்கு, செல்போன்: 70109 57772.


ஆடு வளர்ப்பு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 21-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 22-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452 2483903.


ஆடு வளர்ப்பு


கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 13-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 27-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

ஊட்டச்சத்து மேலாண்மை

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் ஜூன் 13-ம் தேதி, ‘மண்ணில்லாமல் பசுந்தீவன உற்பத்தி’, 19-ம் தேதி, ‘மீன் உணவு தொழில்நுட்பங்கள்’, 20-ம் தேதி ‘மா, பருத்தி, பயறு வகைகள் மற்றும் பாக்குச் சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

பசுப் பொருள்கள்


சென்னை, கொளப்பாக்கத்தில் ஜூன் 24-ம் தேதி, ‘நாட்டுப் பசுஞ்சாணம் மற்றும் சிறுநீரிலிருந்து மதிப்புக்கூட்டும் பொருள்கள் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 97891 86868

தண்டோரா

கட்டணப் பயிற்சிகள்

நெல் திருவிழா

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஏ.ஆர்.வி தனலட்சுமி திருமண அரங்கத்தில் ஜூன் 17 மற்றும் 18-ம் தேதிகளில், ‘தேசிய பாரம்பர்ய நெல் திருவிழா’ நடைபெற உள்ளது.

விழாவில் இயற்கை வேளாண் வல்லுநர்கள், கருத்துரையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். பங்கேற்பவர்களுக்குப் பாரம்பர்ய விதைநெல் இரண்டு கிலோ, இயற்கை வேளாண் கையேடு, துணி பை, குறிப்பேடு மற்றும் பேனா ஆகியவை வழங்கப்படும். கட்டணம் ரூ100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: தொலைபேசி: 04369 220954, செல்போன்: 98426 07609.


மாடித்தோட்டம்


கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், ஜூன் 24-ம் தேதி, ‘மாடித்தோட்டம் வளர்த்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு தொலைபேசி: 04652 246296.

நாட்டுக்கோழி வளர்ப்பு

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில், ஜூன் 21-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும். பயிற்சி கட்டணம்: ரூ.100.

தொடர்புக்கு, செல்போன்: 96559 26547

கால்நடை தீவன உற்பத்தி

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் ஜூன் 14-ம் தேதி, ‘கால்நடைத் தீவன உற்பத்தி தொழில்நுட்பங்கள், 19-ம் தேதி ‘திலேப்பியா கெண்டை மீன் வளர்ப்பு’, 22-ம் தேதி ‘உளுந்து, துவரை மற்றும் பச்சைப்பயற்றில் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்’, 23-ம் தேதி ‘சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டும் பொருள்கள் தயாரித்தல்’, 28-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள்’, 29-ம் தேதி ‘பயிர் மற்றும் மண் மேலாண்மை முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். கட்டணம் ரூ100. 

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.