Published:Updated:

பால் கலப்படம்... அமைச்சர் சொல்வது சரியா?

பால் கலப்படம்...  அமைச்சர் சொல்வது சரியா?
பிரீமியம் ஸ்டோரி
பால் கலப்படம்... அமைச்சர் சொல்வது சரியா?

பிரச்னைதுரை.நாகராஜன்

பால் கலப்படம்... அமைச்சர் சொல்வது சரியா?

பிரச்னைதுரை.நாகராஜன்

Published:Updated:
பால் கலப்படம்...  அமைச்சர் சொல்வது சரியா?
பிரீமியம் ஸ்டோரி
பால் கலப்படம்... அமைச்சர் சொல்வது சரியா?

சில நாள்களுக்கு முன்பு, ‘தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயனத்தைக் கலந்துவிடுகின்றன. அதனால்தான், அந்தப் பால் நீண்ட நாள்கள் கெட்டுப்போகாமல் இருக்கிறது’ எனத் தனியார் பால் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டை முன் வைத்தார், தமிழகப் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  அமைச்சரே இப்படி வெளிப்படையாகப் பேசியது, பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தின. இந்தச் சூழ்நிலையில்... தனியார் பால் நிறுவனங்கள் அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தன. ஆனாலும், ராஜேந்திர பாலாஜி தன் கருத்தைப் பின் வாங்காமல், இன்னும் அழுத்தமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதோடு, ‘தனியார் பாலில் கலப்படம் இருப்பது முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. பால் கெடாமல் இருப்பதற்காக ரசாயனங்கள் கலந்திருப்பதும் அடுத்தடுத்த ஆய்வுகளின் மூலம் வெளிவர உள்ளது. தனியார் நிறுவனங்களின் பாக்கெட் பாலில் கலப்படம் இல்லை என நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயார்’ எனச் சவால் விட்டுள்ளார். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பால் கலப்படம்...  அமைச்சர் சொல்வது சரியா?

இந்நிலையில், ‘தனியார் நிறுவனங்களிடம் பணம் வாங்குவதற்காகவே இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் முன்வைக்கிறார்’ எனத் தமிழகக் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பலராமனிடம் பேசினோம், “பாலில் தண்ணீர் கலப்பது பரவலாக இருந்தாலும், இங்கு யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் ரசாயனம் என்றவுடன், மக்கள் மத்தியில் ஒருவித கலக்கம் ஏற்படுகிறது. கையாள எளிதாக இருப்பதால் நுகர்வோர் பாக்கெட் பாலைத்தான் விரும்புகிறார்கள். அதிலும் ஆவின் பால்தான் நுகர்வோரால் அதிகம் விரும்பப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட பால், கெடாமல் இருக்க சில குறிப்பிட்ட ரசாயனப் பொருள்களைக் கலப்பது வழக்கம். ஆனால், அவற்றை அதிகளவில் கலக்கக்கூடாது. கலப்படத்தைத் தடுக்க சந்தைக்குவரும் பாலை,அரசு அவ்வப்போது சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

பால் கலப்படம்...  அமைச்சர் சொல்வது சரியா?

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமியிடம் பேசியபோது, “அமைச்சரின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. புகார் சொன்னால் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். முதலில் புனே பால் ஆராய்ச்சி நிலையத்துக்குப் பால் மாதிரியைச் சோதனைக்கு அனுப்பியதாக அமைச்சர் சொன்னார்.

ஆனால், புனே பால் ஆராய்ச்சி நிலையம், எங்களுக்கு எந்தவிதமான பால் மாதிரிகளும் தமிழ்நாட்டிலிருந்து வரவில்லை என்று கடிதம் வெளியிட்டுள்ளது. ஓர் அமைச்சருக்கு உரிய பொறுப்பில்லாமல், மூன்றாம் தர அரசியல்வாதிபோல் பேசுகிறார். இவர், தனியார் பால் கம்பெனிகளைக் குற்றம் சாட்டுவதற்கு முன்னர், சுகாதாரத் துறை அதிகாரிகளையும், உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரி களையும் இணைத்துக் கூட்டம்  கூட்டி முறையான நடவடிக்கை எடுத்து, தனியார் நிறுவனங்களைக் கையும் களவுமாகப் பிடித்திருக்க வேண்டும்” என்றார்.

அமைச்சர் ஆதாரங்களுடன் சொன்னாரோ இல்லையோ, அது ஒருபுறம் இருக்கட்டும். அமைச்சர் கொளுத்திப் போட்ட தீயால் பல தனியார் பால் நிறுவனங்கள் கதிகலங்கிக் கிடப்பது மட்டும் உண்மை.