Published:Updated:

எரிவாயு பிரச்னை... ஊரைக் காலிசெய்யும் கிராம மக்கள்!

எரிவாயு பிரச்னை...  ஊரைக் காலிசெய்யும் கிராம மக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
எரிவாயு பிரச்னை... ஊரைக் காலிசெய்யும் கிராம மக்கள்!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன்

எரிவாயு பிரச்னை... ஊரைக் காலிசெய்யும் கிராம மக்கள்!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன்

Published:Updated:
எரிவாயு பிரச்னை...  ஊரைக் காலிசெய்யும் கிராம மக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
எரிவாயு பிரச்னை... ஊரைக் காலிசெய்யும் கிராம மக்கள்!
எரிவாயு பிரச்னை...  ஊரைக் காலிசெய்யும் கிராம மக்கள்!

ஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகேயுள்ள கதிராமங்கலம் கிராமத்தில், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எரிவாயு-எண்ணெய்க் கிணறுகள் செயல்பட்டு வருகிறது. இவற்றைச் சீரமைத்து புதிய குழாய்களைப் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது, ஓ.என்.ஜி.சி நிறுவனம். இதற்காக, இப்பகுதிக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் ராட்சத இயந்திரங்களைக் கண்டு, ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கினர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 2-ம் தேதி, ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பில் எரிவாயு-எண்ணெய்க் கிணறு சீரமைப்புப் பணிகளைத் துவக்கியது ஓ.என்.ஜி.சி. அப்பணிகளைத் தடுப்பதற்காகக் களம் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 11 நபர்களைக் காவல்துறை கைது செய்தது.

எரிவாயு பிரச்னை...  ஊரைக் காலிசெய்யும் கிராம மக்கள்!

அதைத் தொடர்ந்து, கதிராமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி, எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே திமுதிமுவென ஊருக்குள் புகுந்த காவல்துறையினர், வீடுகளில் கட்டப்பட்டிருந்த கறுப்பு கொடிகளைக் கிழித்து எறிந்ததோடு, அத்துமீறி வீடுகளுக்குள் புகுந்து கிராம மக்களை அநாகரிகமான முறையில் மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய இப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், “போலீஸ்காரங்க வீடுகளுக்குள் புகுந்து, ஆம்பிளை, பொம்பிளை வித்தியாசமில்லாம கெட்ட வார்த்தைகள்ல திட்டி மிரட்டுறாங்க. எல்லா தெருக்களையும் தடுப்பு வேலி போட்டு மூடிட்டாங்க.

தெருவை விட்டு வெளிய வர முடியாத அளவுக்கு நெருக்கடி கொடுக்குறாங்க. எரிவாயுத் திட்டத்தை எதிர்த்து பேசுவனங்க மேல, பொய் வழக்கு போட்டுக் கைது பண்ண முயற்சி பண்றாங்க. இப்போ, முக்கால்வாசிப்பேர் ஊரை விட்டு வெளியேறிட்டாங்க. சொந்த மண்ணிலேயே எங்களை அடிமையாக்கிட்டாங்க” என்று வருத்தப்பட்டார்.

மன உளைச்சலிலும் பயத்திலும் இருக்கும் இப்பகுதி மக்களுக்கு நம்பிக்கையூட்டி ஆறுதல் சொல்வதற்காக, பெ.மணியரசன் தலைமையில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் இக்கிராமத்துக்குள் நுழைய முயன்றனர். இவர்களையும் தடுத்து நிறுத்தி கைது செய்தது, காவல்துறை.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெ.மணியரசன், ‘இந்த அச்சுறுத்தல்களுக் கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்.

எரிவாயு பிரச்னை...  ஊரைக் காலிசெய்யும் கிராம மக்கள்!

மக்கள் மீது அடக்குமுறையை ஏவுவது ஆட்சியாளர்களுக்கு ஆரம்பத்தில் சுகமாகவே இருக்கும். பிறகு, அதுவே அவர்களுக்குச் சோகமாக மாறிவிடும். தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தங்களைத் தாங்களே வீழ்த்திக்கொள்ளும் செயல் இது. பிரதமர் நரேந்திரமோடியை மகிழ்விக்க, இங்கு அடக்குமுறையைக் கையாள்கிறார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி” என்றார்.

இந்நிலையில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்குப் பின் ஜாமீனில் வெளியே வந்தார்.  இவர் மீது மேலும் பல வழக்குகளைப் போடுவதற்கு காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். தற்போது, கதிராமங்கலத்தில் காவல்துறையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது.

ஏவிவிடும் அரசியல்வாதிகளும், கைக்கூலிகளாகச் செயல்படும் காவல் துறையினரும் ஏதோ வேற்றுக் கிரகத்தில் பாதுகாப்பாக வசித்துக் கொண்டிருக்கிறோம், என்ற நினைப்பில் இருக்கிறார்கள்போல. சுற்றுச்சூழல் மாசுபட்டு, நிலத்தடி நீர் வற்றிப்போய், தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டால் பாதிக்கப்படபோவது தாங்களும்தான் என்று உணர்ந்தால், இதுபோல இழிசெயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

எரிவாயு பிரச்னை...  ஊரைக் காலிசெய்யும் கிராம மக்கள்!

அனைத்து மாவட்டங்களுக்கும் மாடித்தோட்ட மானியம்!

தோட்டக்கலைத்துறை சார்பில் மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்பு மாநகரங்களில் மட்டும் இருந்த இத்திட்டம், தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, வீட்டுத்தோட்டம் அமைக்க, 522 ரூபாய் மதிப்புள்ள ‘மாடித்தோட்ட உபகரணங்கள்’ வழங்கப்படுகிறது. இதில் 200 ரூபாய் மானியம் போக 322 ரூபாயை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் செலுத்தி உபகரணங்களை வாங்கிக் கொள்ளலாம்.

இதில், ஆறு தென்னை நார்க்கழிவு பைகள், 200 கிராம் அசோஸ்பைரில்லம், 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா, 100 கிராம் சூடோமோனஸ், 100 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி, 1 கிலோ நீரில் கரையும் உரம் மற்றும் வேப்பெண்ணெய், காய்கறி விதைகள், கீரை விதைகள் ஆகியவை இருக்கும். இவற்றோடு, திட்ட விளக்க கையேடு மற்றும் வீட்டுத்தோட்டம் குறித்த தகவல்கள் அடங்கிய ‘சிடி’யும் இருக்கும். அருகிலிலுள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இவற்றைப் பெற முடியும்.