Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
News
தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்
 
ஆடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூலை 4-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 11-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 25-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

தீவனப்பயிர்ச் சாகுபடி

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 10-ம் தேதி ‘தீவனப்பயிர்ச் சாகுபடி’, 11-ம் தேதி ‘இயற்கை உயிர் எதிர் பொருள்கள் தயாரிப்பு’ 17-ம் தேதி ‘முருங்கை மற்றும் கறிவேப்பிலை சாகுபடி’, 24-ம் தேதி ‘கெண்டை மீன் குஞ்சுகள் வளர்ப்பு’ 25-ம் தேதி ‘சிறுதானியச் சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

நெல் திருவிழா

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி, கடைக்கண் வினாயக நல்லூர் எஸ்டேட் திருமண அரங்கத்தில் ஜூலை 9-ம் தேதி ‘பாரம்பர்ய நெல் திருவிழா’ நடைபெறவுள்ளது. இயற்கை வேளாண் வல்லுநர்கள், சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர். விழாவில் பங்கேற்பவர்களுக்குப் பாரம்பர்ய விதைநெல் இரண்டு கிலோ, இயற்கை வேளாண் கையேடு மற்றும் துணிப்பை ஆகியவை வழங்கப்படும்.

தொடர்புக்கு, செல்போன்: 94449 53198.

விதைத் திருவிழா

பெரம்பலூர், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 2-ம் தேதி பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழு சார்பில் ‘பாரம்பர்ய விதைத் திருவிழா’ நடைபெறவுள்ளது. இவ்விழாவில் காய்கறிகள், கீரைகள், பாரம்பர்ய நெல் ரகங்கள், நாட்டுப் பருத்தி, கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி, சாமை ஆகியவற்றின் விதைகள் விற்பனைக்குக் கிடைக்கும். விழாவில் இயற்கை வேளாண் வல்லுநர்கள், இயற்கை விவசாயிகள் உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.

தொடர்புக்கு, செல்போன்: 75022 61622, 99449 66344.

காளான் வளர்ப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜூன் 28-ம் தேதி ‘சிப்பி மற்றும் பால் காளான் தொழில்நுட்பங்கள்’, 29-ம் தேதி ‘இயற்கை விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

தண்டோரா

கட்டணப் பயிற்சி

மண்புழு உரத் தயாரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஜூலை 8-ம் தேதி ‘அங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி’ நடைபெறவுள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ 100. முன்பதிவு அவசியம்.

தொலைபேசி: 04652 246296

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.