Published:Updated:

2 மாதங்களில் கரும்பு நிலுவைத் தொகை... - உறுதியளித்த முதல்வர்!

2 மாதங்களில் கரும்பு நிலுவைத் தொகை... - உறுதியளித்த முதல்வர்!
பிரீமியம் ஸ்டோரி
News
2 மாதங்களில் கரும்பு நிலுவைத் தொகை... - உறுதியளித்த முதல்வர்!

பிரச்னைத.ஜெயகுமார் - படங்கள்: கே.ஜெரோம்

த்தியப்பிரதேசத்தில் விவசாயிகளின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், அனைத்து விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யக் கோரியும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரியும், கரும்புக்கான நிலுவைத்தொகையை உடனே பெற்றுத்தரக் கோரியும்... தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னை, சேப்பாக்கத்தில் கடந்த ஜூன் 9-ம் தேதி அரை நிர்வாணப் போராட்டம் நடைபெற்றது. அய்யாக்கண்ணு உள்ளிட்ட போராளிகள் சிலரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில வாக்குறுதிகளை அளித்ததன்பேரில் மறுநாளே இப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

2 மாதங்களில் கரும்பு நிலுவைத் தொகை... - உறுதியளித்த முதல்வர்!

இது குறித்து அய்யாக்கண்ணுவிடம் பேசியபோது, “தமிழக விவசாயிகள் கடும் துயரத்தில் இருக்கிறார்கள். பெரும்பான்மையான விவசாயிகள், நகைகளை அடகு வைத்தோ, கடன் வாங்கியோதான் பயிர் செய்கிறார்கள். அதனால்தான் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களின் பிரச்னைகளைச் சொல்லும் வகையில் 32 நாள்கள் தொடர் போராட்டத்துக்கு அனுமதி கேட்டிருந்தோம். ஆரம்பத்திலிருந்தே எங்கள் போராட்டத்துக்குப் போலீசார் முட்டுக்கட்டை போடும் விதத்திலேயே செயல்பட்டனர்.

ஜூன் 9-ம் தேதி 100 விவசாயிகளோடு அரை நிர்வாணப் போராட்டத்தைத் தொடங்கினோம். தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ‘உங்களுக்குக் கொடுத்த அனுமதி நேரம் முடிந்துவிட்டது. கிளம்புங்கள்’ என்றனர் போலீசார். நாங்கள் நாள் முழுவதும் போராட்டம் நடத்தத்தான் அனுமதி கேட்டோம். அதற்கு ஏன் அனுமதி கொடுக்க மறுக்கிறீர்கள்? உங்களுக்கும் சேர்த்துச் சோறு போடுபவன்தானே விவசாயி’ என்றேன். ‘அதெல்லாம் தெரியாது. போராட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள்’ என்றனர். எங்களுக்கும் போலீசாருக்கும்    இடையேயான வாக்கு வாதத்திலேயே முதல்நாள் கழிந்தது. அதனால், எங்கள் போராட்டத்தின் நோக்கத்தை ஊடகங்கள்முன் தெளிவாக விளக்கினோம்.  அதையடுத்து போராட்டத்தைக் கைவிடுமாறு போலீசார் அழுத்தம் கொடுத்தார்கள். நாங்கள் முதல்வரைச் சந்தித்தால்தான் போராட்டத்தைக் கைவிடுவது குறித்து முடிவெடுப்போம் என்றேன். ‘முதல்வரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறோம்’ என்றனர் போலீசார். அன்றிரவு ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர், எங்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உடனிருந்தனர். இந்தத் தகவல் வாட்ஸ்அப் மூலமாகப் பரவ, உடனே சேப்பாக்கம் வாலாஜா சாலையில் தடுப்புக் கம்பிகளை அமைத்து, யாரும் உள்ளே வராதபடி போக்குவரத்தைத் தடைசெய்தனர் போலீசார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
2 மாதங்களில் கரும்பு நிலுவைத் தொகை... - உறுதியளித்த முதல்வர்!

மறுநாள், காலில் சங்கிலி கட்டி நடக்கும் நூதனப் போராட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தோம். காலையிலேயே வந்த போலீசார், எங்களில் பழனிவேல், ஜோதிமுருகன், கிட்டப்ப ரெட்டியார், சுந்தர விமல்நாதன் ஆகிய ஐந்து பேரை அழைத்துக் கொண்டு முதல்வரைச் சந்திக்க வைப்பதாகக் கூறித் தலைமைச் செயலகம் அழைத்துச் சென்றனர். நாங்கள் ஐந்துபேரும் சட்டை அணியவில்லை. ‘போலீசார் சட்டை போட்டுக்கொள்ளுங்கள்’ என்றனர். ‘கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை இருந்தால் மட்டுமே சட்டை அணிவோம்’ என்றோம். எங்களை அழைத்துக் கொண்டு போய் முதல்வர் அறையின் முன்பு அமர வைத்தனர். பிறகு, போலீசாரே புதிய சட்டைகளைக் கொண்டுவந்து கொடுத்து, அணியச் சொன்னார்கள். முதல்வரைச் சந்திக்கும் நோக்கில் அணிந்துகொண்டோம்.

பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துக் கோரிக்கைகளைச் சொன்னோம். அவர், ‘60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கிறேன். அதேபோலக் கடன் தள்ளுபடி செய்வதற்கு இப்போது கடும் நிதி நெருக்கடி இருந்து வருகிறது. இது தீர்ந்தவுடன் நடவடிக்கை எடுக்கிறேன். கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையைப் பெற்றுத் தருவதற்கு உடனே ஆலை தரப்பு அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு மாதங்களில் நிலுவைத் தொகையைப் பெற்றுத்தர ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொன்னார்.

முதல்வர் உறுதியளித்ததையொட்டி எங்கள் போராட்டத்தை ஜூன் 10-ம் தேதி வாபஸ் பெற்றுக்கொண்டோம்”  என்றார்.

நெல் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் விற்பனை செய்த 288 விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய 1 கோடியே 47 லட்சத்து 45 ஆயிரத்து 766 ரூபாய்  வழங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் அய்யாக்கண்ணு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபோது இந்த கோரிக்கையையும் வைத்திருந்தார். இதையடுத்து ஜுன் 16ம் தேதி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாக்கித் தொகையை வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

ஆலைகளை அரசே நடத்த வேண்டும்...

2 மாதங்களில் கரும்பு நிலுவைத் தொகை... - உறுதியளித்த முதல்வர்!கரும்புக்கான நிலுவைத் தொகை குறித்துப் பேசிய காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன், “முதல்வர் சந்திப்பின்போது அய்யாக்கண்ணுவோடு நானும் உடனிருந்தேன். கரும்புக்காகத் தமிழக விவசாயிகளுக்கு 8,450 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. ‘நிலுவைத்தொகையை வழங்காவிட்டால், ஆலைகளை அரசே ஏற்று நடத்தும்’ என்று அழுத்தம் கொடுத்தால்தான், ஆலை முதலாளிகள் நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கு முன்பு, அரசே பல நிறுவனங்களை ஏற்று நடத்தியிருக்கிறது. அதேபோன்று சர்க்கரை ஆலைகளையும் ஏற்று நடத்த வேண்டும்” என்றார்.