Published:Updated:

உழவர் சந்தையில் இயற்கை அங்காடி - உழவர் தினவிழாவில் கோரிக்கை!

உழவர் சந்தையில் இயற்கை அங்காடி - உழவர் தினவிழாவில் கோரிக்கை!
பிரீமியம் ஸ்டோரி
உழவர் சந்தையில் இயற்கை அங்காடி - உழவர் தினவிழாவில் கோரிக்கை!

நிகழ்ச்சிபசுமைக்குழு - படங்கள்: தி.விஜய்

உழவர் சந்தையில் இயற்கை அங்காடி - உழவர் தினவிழாவில் கோரிக்கை!

நிகழ்ச்சிபசுமைக்குழு - படங்கள்: தி.விஜய்

Published:Updated:
உழவர் சந்தையில் இயற்கை அங்காடி - உழவர் தினவிழாவில் கோரிக்கை!
பிரீமியம் ஸ்டோரி
உழவர் சந்தையில் இயற்கை அங்காடி - உழவர் தினவிழாவில் கோரிக்கை!

1970-களில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நடந்த பல்வேறு போராட்டங்களில்... அரசின் அடக்குமுறை காரணமாக உயிர்நீத்த விவசாயிகளை நினைவுகூறும் விதமாக, ஆண்டுதோறும் ஜூலை மாதம் 5-ம் தேதியில் உழவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 5-ம் தேதி தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொண்டாடப்பட்ட உழவர் தினவிழாவின் தொகுப்பு இங்கே...

உழவர் சந்தையில் இயற்கை அங்காடி - உழவர் தினவிழாவில் கோரிக்கை!

திருப்பூர்

உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் கு.செல்லமுத்து தலைமையில் திருப்பூர் மாவட்டம், குப்புசாமி நாயுடுபுரத்தில் உழவர் தினவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் துவங்குவதற்கு முன்பாக 1973-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் கே.அய்யம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்த சுப்பையன் மற்றும் முத்துக்குமாரசாமி ஆகிய இரண்டு விவசாயிகளின் நினைவாக எழுப்பியுள்ள தியாக ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து வாகனப் பேரணி நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய செல்லமுத்து, “சிறு குறு விவசாயிகள்; பெரு விவசாயிகள் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளின் வங்கிக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தாமல், அந்த உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு செய்துள்ள மேல்முறையீட்டைத் திரும்பப் பெற வேண்டும்.

குடிதண்ணீரைக்கூட விலைகொடுத்து வாங்க வேண்டிய கடினமான சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது. எனவே ஊராட்சிகள் மூலம் கால்நடைத் தொழுவங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டும்” என்றார்.

உழவர் சந்தையில் இயற்கை அங்காடி - உழவர் தினவிழாவில் கோரிக்கை!

பல்லடம்

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகரில் உழவர் தினவிழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு இச்சங்கத்தின் செயல்தலைவர் என்.எஸ்.பி.வெற்றி தலைமையேற்றார். தெலங்கானா மாநில முன்னோடி இயற்கை விவசாயி நாகரத்தினம் நாயுடு, ‘நெல்’ ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய வெற்றி, “1970-ம் ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் வீறுகொண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அன்றைய அரசு நடத்திய போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மூன்று விவசாயிகள் பலியாகினர்.

அன்றைய கோயம்புத்தூர் மாவட்டம், பெருமாநல்லூரில் நடந்த இந்த நிகழ்வில் ஆயிக்கவுண்டர், மாரப்பன், ராமசாமி ஆகிய மூன்று விவசாயிகள் செய்த இன்னுயிர்த் தியாகம்தான் இன்று 25 லட்சம் விவசாயப் பம்ப்செட்களுக்குக் கட்டணமில்லாத இலவச மின்சாரத்தைப் பெற்றுத்தந்துள்ளது. அதை உணர்ந்து விவசாயிகள் ஓரணியில் திரள வேண்டும். அப்போதுதான் உரிமைகளைப் பெற முடியும்” என்றார்.

உழவர் சந்தையில் இயற்கை அங்காடி - உழவர் தினவிழாவில் கோரிக்கை!

தருமபுரி

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் எஸ்.ஏ.சின்னச்சாமி தலைமையில் உழவர் தின விழாப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தருமபுரி வள்ளலார் திடலில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் பேசிய சின்னச்சாமி, “நாராயணசாமி நாயுடுவுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். நாராயணசாமி நாயுடுவின் சொந்த ஊரான கோவை வையம்பாளையம் கிராமத்தில் மணிமண்டபம் அமைப்பதற்காக 30 சென்ட் நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மணிமண்டபம் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள்கூட இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே ஆளும் அரசு துரித நடவடிக்கை எடுத்து விரைவில் மணிமண்டபம் கட்டித் தர வேண்டும்” என்றார்.

உழவர் சந்தையில் இயற்கை அங்காடி - உழவர் தினவிழாவில் கோரிக்கை!

கோயம்புத்தூர்

ஜாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின விழாப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் கோயம்புத்தூர், கொடீசியா மைதானத்தில் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் பொன்.கந்தசாமி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநிலத்தலைவர் ‘வழுக்குப்பாறை’ பாலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 விதைகள், இடுபொருள்கள் மற்றும் உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து முழுமையான வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

 நதிகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டு நதிநீர் இணைப்பை நிறைவேற்ற, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உழவர் சந்தையில் இயற்கை அங்காடி - உழவர் தினவிழாவில் கோரிக்கை!

கிருஷ்ணகிரி

தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரி நகரில் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமு தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 விவசாயப் பம்ப்செட்களுக்குச் சோலார் பேனல்கள் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு மானியத்துடன் வங்கிக்கடன் வழங்க வேண்டும்.

 ஒரு டன் கரும்புக்கு 4,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்படவேண்டும். நிலுவைத்தொகையை உடனே வழங்கவேண்டும்.

உழவர் சந்தையில் இயற்கை அங்காடி - உழவர் தினவிழாவில் கோரிக்கை!

விருத்தாசலம்

இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் உழவர் தின விழாப் பொதுக்கூட்டம், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகரில் நடைபெற்றது. கட்சியின் மாநிலத்தலைவர் ‘வேட்டவலம்’ மணிகண்டன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கக் கூடாது.

*  உழவர் சந்தைகளில் இயற்கை விவசாய விளைபொருள்கள் விற்பனைக்காகத் தனி அங்காடிகள் ஒதுக்கப்பட வேண்டும்.

* மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கக் கூடாது.  விவசாய விளைபொருள்களுக்குக் கட்டுபடியாகும் விலை கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

நாமக்கல்லில் நசியனூர் வெங்கடாசலம் தலைமையிலும்; பெருமாநல்லூரில் கே.சி.ரத்தினசாமி தலைமையிலும்; கோயம்புத்தூர் தமிழ்நாடு ஹோட்டல் அரங்கில் ‘பொங்கலூர்’ மணிகண்டன் தலைமையிலான உழவர் உழைப்பாளர் சங்கம் சார்பிலும் உழவர் தின விழாக் கூட்டங்கள் நடைபெற்றன.