Published:Updated:

கதிராமங்கலம்... கதறிய மக்கள்... கலவரத்தைத் தூண்டிய காவல்துறை!

கதிராமங்கலம்... கதறிய மக்கள்... கலவரத்தைத் தூண்டிய காவல்துறை!
பிரீமியம் ஸ்டோரி
கதிராமங்கலம்... கதறிய மக்கள்... கலவரத்தைத் தூண்டிய காவல்துறை!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: கே.குணசீலன்

கதிராமங்கலம்... கதறிய மக்கள்... கலவரத்தைத் தூண்டிய காவல்துறை!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: கே.குணசீலன்

Published:Updated:
கதிராமங்கலம்... கதறிய மக்கள்... கலவரத்தைத் தூண்டிய காவல்துறை!
பிரீமியம் ஸ்டோரி
கதிராமங்கலம்... கதறிய மக்கள்... கலவரத்தைத் தூண்டிய காவல்துறை!
கதிராமங்கலம்... கதறிய மக்கள்... கலவரத்தைத் தூண்டிய காவல்துறை!

ஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகேயுள்ள கதிராமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் பதற்றத்தில் உறைந்துகிடக்கின்றன. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பெட்ரோல்-கேஸ் எடுக்கும் பணிகளால், ‘எப்போது என்ன நடக்கும்?’ என்ற அச்சத்துடனேயே இப்பகுதி மக்களின் தினசரி வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. 

இதுகுறித்து, கடந்த 25.6.2017-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் ‘எரிவாயுப் பிரச்னை... ஊரைக் காலிசெய்யும் கிராம மக்கள்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

கதிராமங்கலம்... கதறிய மக்கள்... கலவரத்தைத் தூண்டிய காவல்துறை!

இப்பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் மேற்கொண்டு வரும் புதிய பணிகள் மர்மமாகவே இருந்துவரும் நிலையில்... கடந்த ஜூன் 30-ம் தேதி திடீரென குழாய் வெடித்து விளைநிலங்களில் கச்சா எண்ணெய் பரவத் தொடங்கியது. அதில் தீப்பற்றி எரிந்ததால்... கதிராமங்கலம் மற்றும் சுற்றுப்பட்டுக் கிராமங்களைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தீப்பிடித்த பகுதியில் பதற்றத்தோடு குவிந்தனர். குழாய் வெடிப்பைப் பார்வையிட வந்த ஓ.என்.ஜி.சி அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தினார்கள் அங்கு கூடியிருந்த மக்கள்.

அதோடு  ‘இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை இங்கு நேரில் வந்து உத்தரவாதம் அளிக்க வேண்டும்’ எனவும் மக்கள் கோரிக்கைவைத்தனர். ஆனால், பல மணி நேரங்கள் கடந்தும் ஆட்சியர் வரவில்லை. அந்தச் சமயத்தில் அங்கு குவிந்திருந்த குப்பை மீது மர்ம நபர் தீ வைக்க, கலவரம் ஆரம்பித்துவிட்டது. அதற்காகவே காத்திருந்ததுபோல் கூடியிருந்த அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது காவல்துறை.

 போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்திருந்த மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், விடுதலைச் சுடர், நல்லதுரை... எனப் பலரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். அதோடு கூட்டமைப்பு நிர்வாகிகள்மீது கொலை முயற்சி, பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது காவல்துறை.

கதிராமங்கலம்... கதறிய மக்கள்... கலவரத்தைத் தூண்டிய காவல்துறை!

‘காவல்துறையே ஆளை அனுப்பிக் குப்பை மீது தீ வைத்துக் கலவரத்தைத் தூண்டிவிட்டது’ எனக் குற்றம் சாட்டுகிறார்கள் இப்பகுதி மக்கள். போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அம்மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம்.

கலவரத்தின்போது மண்டை உடைந்து, கை கால்களில் அடிபட்டு ரத்தம் சிந்திய நிலையில் கிராம மக்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்துக்குப் போராடி வந்த இந்த மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இந்தக் கலவரத்துக்குப் பல கட்சித் தலைவர்களும் காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளின் இந்த மக்கள் விரோதச் செயல்பாட்டால் சொந்த மண்ணிலேயே அகதிகளாகிக் கொண்டிருக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

“ஆட்சியர் மன்னிப்பு கேட்க வேண்டும்!”

கதிராமங்கலம்... கதறிய மக்கள்... கலவரத்தைத் தூண்டிய காவல்துறை!கிராம மக்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், “கதிராமங்கலத்தில் பதிக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி குழாயில் கசிவு ஏற்பட்டதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள். இவர்களிடம் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அப்பாவி கிராம மக்கள்மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தியிருக்கிறார்கள். இதில் பெண்கள் உள்பட பலர் படுகாயமடைந்திருக்கிறார்கள். காவல்துறையினரின் அத்துமீறல், அடக்குமுறையால் கிராமமே நிம்மதி இழந்து தவித்துவருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தச் சம்பவத்துக்குத் தமிழக அரசு பொறுப்பேற்று அமைச்சர் ஒருவரும் மாவட்ட ஆட்சியரும் கதிராமங்கலம் மக்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இவர்கள்மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும்” என்றார்.