Published:Updated:

திரும்பப்பெற வேண்டும்!

திரும்பப்பெற வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
திரும்பப்பெற வேண்டும்!

திரும்பப்பெற வேண்டும்!

திரும்பப்பெற வேண்டும்!

திரும்பப்பெற வேண்டும்!

Published:Updated:
திரும்பப்பெற வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
திரும்பப்பெற வேண்டும்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

அத்தி மரம்... உயிரினங்களுக்குப் பலவகைகளிலும் உதவுகின்ற தாவரங்களில் இதுவும் ஒன்று.
 
மரங்களின் மகிமையை மனிதர்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், பல்வகை மரங்களையும் தலவிருட்சம் என்கிற பெயரில் கோயில்களில் சிறப்புடன் பராமரிக்கிறார்கள், இறைவனுக்கு நிகராக. அந்த வரிசையில் அத்தி மரத்துக்கும் முக்கிய இடமுண்டு. குறிப்பாகச் சிவாலயங்களில் பெருமையோடு நிற்கின்றன இந்த மரங்கள்.

இந்நிலையில் ‘விரதமிருந்து புனித யாத்திரை செல்லும் சிவபக்தர்கள், தங்கள் பாதையில் நின்றிருக்கும் அத்தி மரங்களைச் சகுணத் தடையாகப் பார்க்கிறார்கள். எனவே, அந்த மரங்களை அகற்ற வேண்டும்’ என்கிற உத்தரவைப் பிறப்பித்து, சூழல்வாதிகளை மட்டுமல்ல... ஆன்மிகவாதிகளையும் மிரளவைத்திருக்கிறார் பி.ஜே.பி ஆளும் மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத். இந்த விஷயம் பேசுபொருளான சூழலில் ‘மரங்களைச் சீர்படுத்த வேண்டும் என்பதுதான் முதல்வரின் உத்தரவு’ என்று வார்த்தை விளையாட்டுமூலம் விஷயத்தை மறக்கடிக்கப் பார்க்கிறது உ.பி அரசு.

ஆலயங்கள் மட்டுமல்ல, ‘அத்தி மரங்கள் உள்ள பகுதியில் மழை மேகங்கள் ஈர்க்கப்பட்டு நல்ல மழை கிடைக்கும்’ எனச் சூழலியல் விஞ்ஞானிகளும் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்கள். ஆக, நாடு இப்போது வறண்டு கிடக்கும் சூழலில், அத்தி போன்ற மரங்களைத்தான் அதிகமாக வளர்க்க வேண்டும். மருத்துவ ரீதியாக ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது அத்திப் பழம். இதே மரத்தில் கடவுள் சிலைகள் வடிக்கப்படுவதும் குறிப்பிடவேண்டிய விஷயம்.

மனிதர்கள் இல்லாமலும் மரங்கள் உண்டு. ஆனால், மரங்கள் இல்லாமல் மனிதர்கள் மட்டுமல்ல, எதுவுமே இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, உ.பி முதல்வர் இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.

- ஆசிரியர்