Published:Updated:

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 10

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 10
பிரீமியம் ஸ்டோரி
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 10

விதை உரிமையைப் பறிக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள்!சந்தைஅனந்து - தொகுப்பு: க.சரவணன்

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 10

விதை உரிமையைப் பறிக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள்!சந்தைஅனந்து - தொகுப்பு: க.சரவணன்

Published:Updated:
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 10
பிரீமியம் ஸ்டோரி
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 10

வெகுஜன சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது...

வளர்ந்த நாடுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சாதகமாகப் போடப்படும் ‘தடையற்ற வர்த்தக ஒப்பந்த’ங்களை (Free Trade Agreements) எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தவாறேதான் உள்ளன. அப்படி நடந்த முக்கியமான போராட்டங்களில் ஒன்றுதான் 2013-ம் ஆண்டில் தென் அமெரிக்காவின் கொலம்பியா நாட்டில் நடந்த விவசாயிகள் போராட்டம்.

அந்நாட்டின் 60 சதவிகிதத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு, தலைநகரமான பொகொட்டா (Bogota)வையும் இன்னும் பல முக்கியமான நகரங்களையும் முற்றுகையிட்டனர். விவசாயிகள் வேலை நிறுத்தத்தை அறிவித்து நகர வாசிகளுக்கு உணவு உற்பத்தி செய்வதை நிறுத்தினர். பாலைத் தெருக்களிலும் வயல்களிலும் கொட்டினர். அந்த நாட்டின் சிறு, குறு விவசாயிகளை ஒட்டுமொத்தமாகப் பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காகக் காவு கொடுக்கும் வகையில், அந்நாட்டு அரசு எடுத்த சில முடிவுகள்தான் அந்தப்புரட்சிக்குக் காரணமாக இருந்தது.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 10

கொலம்பியா அரசாங்கம் 2013-ம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த சில நாடுகளுடனான ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் மூலமாக, அந்நாடுகளில் உற்பத்தியாகும் விளைபொருள்கள், மானிய விலையில் கொலம்பியாவில் இறக்குமதி செய்யப்பட்டன. இப்படி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள், கொலம்பியாவில் விளையும் பொருள்களைவிடக் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டன. அதனால் கொலம்பிய விவசாயிகள் சந்தையில் மிகக் குறைந்த விலையில் தங்கள் பொருள்களை விற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதற்கிடையில், அமெரிக்க நிறுவனமான கார்கில் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மிகப்பெரிய பரப்பளவில் கொலம்பியாவில் விவசாயம் செய்து கொள்ளவும் கொலம்பிய அரசு அனுமதித்தது. சிறு விவசாயிகள் ஒடுக்கப்படவும் விவசாயத்திலிருந்து அவர்கள் துரத்தப்படுவதுக்கும் இசைவாகப் பல சட்டத் திருத்தங்களைச் செய்தது. விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளைப் பறிக்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 10



தாங்கள் அழிவை நோக்கித் தள்ளப்படுவதை உணர்ந்த விவசாயிகள், 2013-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்தே ஒன்றுதிரள ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாகச் சூடுபிடித்த அந்த இயக்கம், விரைவில் பலரையும் கவர ஆகஸ்ட் 19-ம் தேதி தேசிய அளவில் எழுச்சி பெற்று, நாடு முழுவதும் கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. நாடு முழுவதுமுள்ள எண்ணெய் உற்பத்தித் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள், மருத்துவத்துறைத் தொழிலாளர்கள் என்று பலரும் விவசாயிகளுடன் ஒன்று சேர்ந்தனர்.

போராட்டம் துவங்கிய 11-ம் நாளான ஆகஸ்ட் 29-ம் தேதி 20 ஆயிரம் மாணவர்கள் அப்போராட்டத்தில் இணைந்து தலைநகர் பொகோடாவை முற்றிலும் செயலிழக்கச் செய்தனர். அதனால் நிலைகுலைந்த அரசாங்கம் செய்வதறியாது தவித்தது. விவசாயச் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளில் இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டம் செய்தவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திக் கலைக்க முற்பட்டது காவல்துறை. அந்நாட்டு ஜனாதிபதி ஜுவான் மானுவேல் சான்டோஸ், ‘விவசாயிகளின் எழுச்சி என்று எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் நடக்கவேயில்லை’ என்று அறிக்கை வெளியிட்டார்.

போராட்டம் தீவிரமடைந்ததற்கு முக்கியக் காரணம் கொலம்பிய அரசாங்கம்... அமெரிக்கா, ஐரோப்பா, கனடா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கொலம்பியாவில் தங்களது விதைகளை விற்பனைசெய்ய ஏகபோக அனுமதி வழங்கியதுதான். சிறு விவசாயிகள், தங்கள் விதைகளைப் பராமரிக்கவோ பகிர்ந்து கொள்ளவோ கூடாது. அப்படிப் பகிர்ந்து கொள்வது சட்ட ரீதியாகத் தவறு எனக் கொலம்பிய அரசு பிரகடனம் செய்தது. அதோடு, விவசாயிகளின் விதைக் கிடங்குகளை முற்றுகையிட்டு, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 70 டன் விதைகளைத் தீயிட்டு எரித்தனர் அரசு அலுவலர்கள். அதனால்தான் கட்டுக்கடங்காமல் பொங்க ஆரம்பித்தனர் விவசாயிகள்.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 10

கொலம்பிய விவசாயிகளின் உரிமைக்கான போராட்டங்கள் இன்று வரை தொடர்ந்தபடிதான் உள்ளன. ஐம்பது ஆண்டு காலமாக அந்நாட்டில் நடந்துவந்த உள்நாட்டுப் போர் முடிவடைந்திருக்கும் சூழலில்... தங்களது நிலை மாறிவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் அந்நாட்டு விவசாயிகள்.

இதே நிலைதான் அமெரிக்க , ஐரோப்பிய, ஆசிய , ஆப்பிரிக்க  மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நீடித்துவருகிறது. விவசாயிகளைப் பாதுகாத்து வருகிறோம் என்ற பெயரில் விதைச் சட்டங்களைக் கொண்டு வந்து, கடைசியில் விதைச் சந்தையைக் கைப்பற்றுவதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் திட்டமாக இருக்கிறது. அனைத்து நாடுகளிலும் அரசியல்வாதிகள், பன்னாட்டு நிறுவனங்களோடு கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். அதனால், இவை வெளிப்படையாகத் தெரிவதில்லை. கலப்பு விதை, பசுமைப் புரட்சி என ஆரம்பித்து, மரபணு மாற்ற விதைகள் வரை இந்தக் கள்ள அரசியல்தான் நடக்கிறது.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 10



விதைகளை விவசாயிகளிடமிருந்து அபகரிக்கும் முயற்சிக்கு விதைச் சட்டங்கள் ஒரு முகமூடி. இதுபோன்ற முயற்சிகளையும் சந்தேகத்துக்கிடமான விதைச் சட்டங்களையும் எதிர்த்து கானா, மொசாம்பிக், தான்சானியா, நைஜீரியா, பிரேசில், சிலி, கோஸ்டரிகா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, இத்தாலி, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன.

தமிழகத்தில்கூட ‘தமிழ்நாடு மாநில வேளாண் கவுன்சில் சட்டம்-2009’ கொண்டு வரப்பட்டது. அதற்கு எழுந்த பலத்த எதிர்ப்புகளை அடுத்து அந்தச் சட்டம் வாபஸ் பெறப்பட்டது.

பன்னாட்டு நிறுவனங்கள், வேளாண் உற்பத்தி மற்றும் விதை சார்ந்த வர்த்தகத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கும் சில காரணங்கள் உள்ளன. அரபு தேசங்களுக்குக் கச்சா எண்ணெய் உற்பத்தி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு அமெரிக்காவுக்கு உணவு உற்பத்தித் தொழில் முக்கியமானது. அதாவது, எண்ணெய் உற்பத்தியில் கிடைக்கும் லாபத்தைப்போல உணவு உற்பத்தியிலும் லாபம் கிடைக்கிறது. இந்த விஷயத்தை 2009-ம் ஆண்டில் அமெரிக்க உளவுத்துறையே பதிப்பித்துள்ளது.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 10


பகாசுர பன்னாட்டு நிறுவனங்கள், ஒரு நாட்டின் தலைமையைத் தம் கையில் கொண்டுவந்து தமக்கு வேண்டிய கொள்கைகளை நிறைவேற்றிக் கொண்டு கொள்ளை லாபம் சம்பாதிக்க, எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போகும். அவர்களுக்கு லாபம் மட்டும்தான் முக்கியம்.

இறையாண்மை கொண்ட நாடுகள், விவசாயிகளின் விதை, விளைபொருள், வாழ்வாதாரம் என அனைத்தையும் தொலைக்கும் வகையில், பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாக ஒப்பந்தங்கள் போடுவது வேதனையான விஷயம். இவை நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வதற்குச் சமம். இதுபோன்ற ஒப்பந்தங்களால் விவசாயிகளின் உரிமைகள் மட்டுமல்ல, நுகர்வோரின் உரிமைகளும்தான் பறிபோகின்றன.

அதனால், விதைகள் மீதும் உழவாண்மை மீதும் விவசாயிகளுக்குக் காலம் காலமாக இருக்கும் உரிமைகளைப் பறிக்கும் முயற்சிகள் எந்த வடிவில் வந்தாலும் அவற்றை எதிர்க்கும் பொறுப்பு, விவசாயிகளுக்கு மட்டுமல்ல; நுகர்வோருக்கும் உண்டு. விழிப்புடன் இருந்து விவசாயிகளின் உரிமையைப் பாதுகாப்பது நமது கடமை.

- விரிவடையும். 

கலிஃபோர்னியாவில் மீட்கப்பட்ட விவசாயிகளின் உரிமை!

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 10



அமெரிக்காவின் பொருளாதாரத்தில் முதன்மை மாநிலமாகத் திகழும் கலிஃபோர்னியாவில் 2014-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட விதைச் சட்டம் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தது. கலிஃபோர்னியா சட்டமன்றம் ‘சட்டம் 2470’ (California Assembly Bill 2470- AB2470) என்ற பெயரில், உணவு மற்றும் விவசாயத்துக்கான விதிகளில் (Food And Agricultural Codes) முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. அதன்மூலம், விவசாயிகள் தங்களுக்குள் விதைகளைப் பகிர்ந்துகொள்ளவும், விற்பனை செய்யவும் உள்ள உரிமைகளைப் பறிக்கும் நிபந்தனைகள் கொண்டுவரப்பட்டன.

அம்மாநிலத்தில், ‘எதை விளைவிக்க வேண்டும்... எதை விளைவிக்கக் கூடாது?’ என்று முடிவெடுக்கக் கூடிய அதிகாரம், உணவு மற்றும் வேளாண்மைத் துறை செயலாளருக்கு அளிக்கப்பட்டது. களைச் செடிகள் பரவாமல் தடுப்பதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம் என்று முன்னிறுத்தப்பட்டாலும் ‘விவசாயியின் நிலமுள்ள இடத்திலிருந்து 3 மைல் சுற்றளவுக்கு அப்பால் விதைகளைப் பகிர்ந்துகொள்ளவோ, பண்டமாற்று செய்யவோ, விற்பனை செய்யவோ, விற்பனைக்காக வைத்திருக்கவோ கூடாது’ எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அப்படி விற்பனை செய்வதற்குப் பேக்கிங் செய்யப்படும் முறைகளையெல்லாம் உள்ளடக்கிக் கடுமையான விதிகள் வகுக்கப்பட்டன. அப்படியான விதிகள் அதிகச் செலவு பிடிப்பவை என்பதால் அவை, குறைந்த அளவே விதைகளைக் கையாளும் சாதாரண விவசாயிகளுக்குச் சாத்தியப்படவில்லை. அதனால், அது மான்சான்டோ போன்ற பெருநிறுவனங்களுக்கு ஆதரவான சட்டமாக இருந்தது. அதோடு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் பரவக்கூடிய வாய்ப்பும் இருந்தது.

அதனால், அச்சட்டத்தை எதிர்த்து அம்மாநில மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தியதால் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், விதைப் பகிர்வுச் சட்டத் திருத்தம் (உணவு மற்றும் வேளாண்மை விதிகள் பிரிவு 52255.5- AB 1810) கொண்டு வரப்பட்டு, விவசாயிகளின் உரிமை மீட்கப்பட்டது.

‘விதைப் பகிர்வு ஜனநாயகம்’ என்று சொல்லப்படும் இந்த விதி 2017-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், வணிக ரீதியில் அல்லாத விவசாயிகள் வைத்திருக்கும் விதைகள் மற்றும் பகிர்ந்துகொள்ளும் உரிமை ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism