Published:Updated:

குளத்தைக் காணோம்... பரிதவிக்கும் மக்கள்!

குளத்தைக் காணோம்...  பரிதவிக்கும் மக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
குளத்தைக் காணோம்... பரிதவிக்கும் மக்கள்!

நிலம்... நீர்... நீதி! - கைகள் கோப்போம்... கரைகள் காப்போம்!பிரச்னைதி.ஜெயபிரகாஷ் - படம்: க.ரமேஷ் கந்தசாமி

குளத்தைக் காணோம்... பரிதவிக்கும் மக்கள்!

நிலம்... நீர்... நீதி! - கைகள் கோப்போம்... கரைகள் காப்போம்!பிரச்னைதி.ஜெயபிரகாஷ் - படம்: க.ரமேஷ் கந்தசாமி

Published:Updated:
குளத்தைக் காணோம்...  பரிதவிக்கும் மக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
குளத்தைக் காணோம்... பரிதவிக்கும் மக்கள்!

மிழகம் முழுவதும் நீர்நிலைகளை ஆக்கிரமிக்கப்பதும் அழிப்பதும் தொடர்கதையாக இருக்கிறது. இப்படி நீர் நிலைகள் அழிவதற்கு முக்கியக்காரணம், நமது அக்கறையின்மைதான். யாருமே பொருட்படுத்தாத காரணத்தால் நீர் நிலைகள் அழிந்து வருகின்றன. இப்படியொரு நிலைமைதான் திருப்பூர் மாவட்டம், முத்தூர் என்ற ஊரில் உள்ள தெப்பக்குளத்துக்கும் ஏற்பட்டுள்ளது. பல நூறு ஆண்டு காலமாகப் பயன் தந்து கொண்டிருந்த இந்தக் குளம், கடந்த இரண்டு ஆண்டுகளில் முற்றிலுமாக மூடப்பட்டிருக்கிறது.

‘ஆனந்த விகட’னின் அறத்திட்டமான ‘நிலம்... நீர்... நீதி!’ பகுதிக்கு இதுகுறித்த புகார் வர முத்தூருக்குச் சொன்றோம். முத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு அருகிலேயேதான் அந்தத் தெப்பக்குளம் இருக்கிறது. குளம் இருந்ததற்கான சுவடே தெரியாமல் குப்பை மேடாகக் காட்சியளித்தது.  கண்ணெதிரிலேயே குளம் காணாமல் போயிருப்பது குறித்து அப்பகுதி மக்கள் மிகுந்த வருத்தத்துடன் பேசினர்.

குளத்தைக் காணோம்...  பரிதவிக்கும் மக்கள்!

“கிட்டத்தட்ட 1 ஏக்கர் பரப்பளவும், 15 அடி ஆழமும் கொண்டது இந்தத் தெப்பக்குளம். இது, இயற்கையா உருவான குளம். ஒரு காலத்துல இந்தக் குளத்துத் தண்ணிய வெச்சுதான் ஊரே பொழைச்சது. விவசாயம் செழிச்சு இருந்ததுக்கும், இந்தக் குளம்தான் காரணம். முக்கியமா ஊர் மக்களோட உணர்வோட கலந்து இருந்தது இந்தக்குளம். குளத்தைச் சுத்திச் சத்திரக் கிணறு, சின்னக் கிணறுனு அஞ்சாறு கிணறுகள் இருக்கு. இந்தக் குளத்தால அந்தக் கிணறுகள்ல தண்ணி வத்தாம இருக்கும். அந்தக் கிணத்துத் தண்ணிதான் எங்களுக்குக் குடிதண்ணி. ஊர்ல பெய்ற மழைத்தண்ணி, விவசாய ஒரம்பு தண்ணி (கழிவு நீர்) எல்லாமே இந்தக் குளத்துலதான் வந்து சேரும். குளம் நிரம்பிச்சுனா, அதுல இருந்து வெளியேறுற தண்ணி 4 கிலோமீட்டர் தூரம் போய், நொய்யல் ஆத்துல கலக்கும். மழை பெய்ஞ்சு குளம் நிரம்பினா எப்படியும் 5 மாசத்துக்குக் குறையாம குளத்துல தண்ணி நிக்கும்.

சில வருஷமா மழையில்லாம குளம் வறண்டு போச்சு. அதே நேரத்துல காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமா எங்க ஊருக்கு பைப்ல குடிதண்ணி வர ஆரம்பிச்சுச்சு. அதனால, எல்லோரும் குளத்தைக் கண்டுக்காம விட்டுட்டாங்க. சும்மா கிடக்குற குளம்தானனு அதுக்குள்ளயே கட்டடக் கழிவுகள், சாலைப் பணிகள்ல மிச்சமாகுற கழிவுகள், குப்பைகள்னு கொட்ட ஆரம்பிச்சதுல குளம் மேடு தட்டிபோயிடுச்சு. குளம் இருந்த சுவடே இப்போ இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குளத்தைக் காணோம்...  பரிதவிக்கும் மக்கள்!இதோடு காவிரி கூட்டுக் குடிநீருக்கும் தட்டுப்பாடு வந்த பிறகுதான் குளத்தைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சிருக்கோம். குளத்துக்குப் பக்கத்திலேயே போர்வெல் அமைச்சு, குடிதண்ணி எடுத்துட்டு இருக்கோம். குளம் மேடுதட்டிப்போனதால அந்த இடத்தை வளைச்சுப்போடற நோக்கத்துல சிலர் வேலைகளைச் செஞ்சுட்டு இருக்காங்க. அதுக்கெல்லாம் இடம் கொடுக்காம இந்தக் குளத்தைக் காப்பாத்தியாகணும்” என்றனர் ஊர் மக்கள்.  கடந்த 15 ஆண்டுகளாக இந்தப் பகுதியின் பேரூராட்சி உறுப்பினராக இருந்து வந்த சுமதியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “பேருக்குத்தான் நான் கவுன்சிலர். என் வீட்டுக்காரருக்குத்தான் எல்லாம் தெரியும். அவர்கிட்ட பேசுங்க” என்றார்.

சுமதியின் கணவர் சம்பத்திடம் பேசியபோது, “குளம் இருந்தது உண்மைதான். மழை வந்தால் தண்ணீர் தேங்கி ஊர் மக்களுக்குப் பயனளித்துக்கொண்டு இருந்ததும் உண்மைதான். பிறகு ஏன் குளம் மூடப்பட்டதுனு அரசு அதிகாரிகள்கிட்டதான் கேக்கணும். முடிவு எடுக்கிற அதிகாரம்(!) எங்கிட்ட இல்ல” என்றார்.

காங்கேயம் வட்டாட்சியர் வேங்கடலட்சுமியிடம் இதுகுறித்துப் பேசியபோது, “இப்படியொரு பிரச்னை இருப்பதே நீங்கள் சொல்லித்தான் தெரியுது. இது பத்தி விசாரிக்கிறேன். குளம் விஷயமா ஊர் மக்கள் புகார் கொடுத்தா நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

நடவடிக்கை எடுத்துக் குளத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்பதுதானே மக்களின் கோரிக்கை.

குளத்தைக் காணோம்...  பரிதவிக்கும் மக்கள்!

பால் உற்பத்திக்குப் புதிய பட்டப்படிப்பு!

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில், ‘பால் உற்பத்தியும் தொழில்நுட்பமும்’ எனும் புதிய பட்டப்படிப்பு இந்த ஆண்டு முதல் துவங்கவுள்ளது.

இதுகுறித்துப் பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் நடராஜன், “காந்தகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் ‘பால் உற்பத்தியும் தொழில்நுட்பமும்’ என்ற மூன்றாண்டுப் பட்டப்படிப்பு துவங்க, மத்திய அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் அனுமதி வழங்கியுள்ளது. இப்பாடப்பிரிவில் பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல், கலைப் பாடங்களில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் சேரலாம். இந்தப் பட்டப்படிப்பில் கறவைமாடு வளர்த்தல், மாடுகள் பராமரிப்பு, பால் உற்பத்தி, பாலை மதிப்புக் கூட்டிய பொருள்களாக மாற்றுதல் போன்ற பாடங்கள் உள்ளன. இப்படிப்பு, 80 சதவிகிதம் தொழிற்சாலைகளில் செய்முறையாகவும் 20 சதவிகிதம் பாடங்களாகவும் இருக்கும். ஓர் ஆண்டில் 25 மாணவ, மாணவியர் இப்படிப்பில் சேர்க்கப்படுவர்.

மூன்றாண்டுப் படிப்பில் சேரும் மாணவர்கள், ஒரே ஆண்டில் படிப்பை முடித்துக் கொள்ள விரும்பினால் ‘டிப்ளமோ சான்றிதழ்’ வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளில் படிப்பை நிறைவுசெய்தால் ‘அட்வான்ஸ் டிப்ளமோ’ சான்றும், மூன்றாண்டுகளும் நிறைவு செய்தால் பட்டப்படிப்புச் சான்றிதழும் வழங்கப்படும்” என்றார்.

-பசுமைக்குழு