Published:Updated:

கதிராமங்கலம் போராட்டம்... கலக்கத்தில் மத்திய, மாநில அரசுகள்!

கதிராமங்கலம் போராட்டம்... கலக்கத்தில்  மத்திய, மாநில அரசுகள்!
பிரீமியம் ஸ்டோரி
கதிராமங்கலம் போராட்டம்... கலக்கத்தில் மத்திய, மாநில அரசுகள்!

போராட்டம் கு.ராமகிருஷ்ணன் - படங்கள்:கே.குணசீலன்

கதிராமங்கலம் போராட்டம்... கலக்கத்தில் மத்திய, மாநில அரசுகள்!

போராட்டம் கு.ராமகிருஷ்ணன் - படங்கள்:கே.குணசீலன்

Published:Updated:
கதிராமங்கலம் போராட்டம்... கலக்கத்தில்  மத்திய, மாநில அரசுகள்!
பிரீமியம் ஸ்டோரி
கதிராமங்கலம் போராட்டம்... கலக்கத்தில் மத்திய, மாநில அரசுகள்!
கதிராமங்கலம் போராட்டம்... கலக்கத்தில்  மத்திய, மாநில அரசுகள்!

ஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகேயுள்ள கதிராமங்கலம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாகப் பெட்ரோல்-கேஸ் எடுத்து வருகிறது ஓ.என்.ஜி.சி நிறுவனம். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் சொல்லிவந்த நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாகக் கடந்த ஜூன் மாதம் ராட்சத இயந்திரங்கள் மூலமாகப் புதிய விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டது ஓ.என்.ஜி.சி நிறுவனம். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான காவல் துறையினரைக் குவித்துக் கடும் அடக்குமுறையை ஏவியது தமிழக அரசு.

இந்நிலையில், கடந்த ஜூன் 30-ம் தேதி இங்குள்ள ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலத்தில் கச்சா எண்ணெய் பாய்ந்தோடியது. ‘தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்து இப்பிரச்னைக்குத் நிரந்தரத் தீர்வு காணும் வரை ஓ.என்.ஜி.சி அதிகாரிகளை இங்கு அனுமதிக்கமாட்டோம்’ என இப்பகுதி மக்கள் போராடத் துவங்கினர். அப்போது அவர்கள்மீது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர்மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.

காவல் துறையின் இந்த அராஜகப் போக்கைக் கண்டித்தும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் அனைத்துக்கட்சிகள் சார்பில், கடந்த ஜூலை 10-ம் தேதி பெருந்திரள் பேரணி மற்றும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் எழுச்சியுடன் கலந்துகொண்ட இப்போராட்டம் மத்திய, மாநில அரசுகளையும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தையும் மிரட்சி அடைய வைத்துள்ளது.

கதிராமங்கலம் போராட்டம்... கலக்கத்தில்  மத்திய, மாநில அரசுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘நாங்கள் அநாதைகளல்ல... எங்களைப் பாதுகாக்க ஒட்டுமொத்தத் தமிழகமும் திரண்டுவரும்’ என்று கதிராமங்கலம் மக்களுக்கு நம்பிக்கையூட்டி இருக்கிறது இப்போராட்டம்.  காவல் துறையின் தடுப்பை மீறி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயச் சங்கத்தினர் எனப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். திருவிடைமருதூர், ஆடுதுறை, திருப்பனந்தாள், திருபுவனம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய பகுதிகளில் உள்ள வணிகர்கள் ‘கடையடைப்பு’ நடத்தி இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் உரையாற்றிய தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், “கதிராமங்கலம் மக்களைக் காக்க அனைத்து அரசியல் கட்சியினரும் இங்கு ஒன்றுபட்டு நிற்கிறோம். இவர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம். காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, “தங்களது மண்ணைக் காக்க பெரும் எண்ணிக்கையில் பெண்கள் இங்கு கூடி நிற்கிறார்கள். இதுபோன்ற ஒரு காட்சியை இதற்கு முன், வேறு எங்கும் நான் பார்த்ததில்லை. இவர்களைப் பாதுகாப்பது அரசின் கடமை. ஆனால், அதை விடுத்துப் பெண்கள்மீது வன்முறையை ஏவுகிறது தமிழக அரசு” என்றார்.

கதிராமங்கலம் போராட்டம்... கலக்கத்தில்  மத்திய, மாநில அரசுகள்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், “தஞ்சாவூர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மகேஷ், ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே மக்கள்மீது தாக்குதல் நடத்துகிறார்கள். மாவட்ட ஆட்சியர் இங்கு நேரில் வந்து ஆய்வுசெய்ய வேண்டும் என்றுதான் மக்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், செயலற்ற ஆட்சியராக இருக்கும் அண்ணாதுரை காவல்துறையை ஏவிவிடுகிறார். பா.ஜ.கவுக்குப் பயந்துதான் தமிழக அரசு இப்படி நடந்து கொள்கிறது. பா.ஜ.கவால் ஆட்சியைப் பறிக்கத்தான் முடியும். ஆனால், இந்த மக்களால்தான் ஆட்சியைக் கொடுக்க முடியும். இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் கவுதமன், விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அய்யாக்கண்ணு, பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.