Published:Updated:

‘கொலை விளையும் நிலம்’ அதிரவைக்கும் ஆவணப்படம்!

‘கொலை விளையும் நிலம்’ அதிரவைக்கும் ஆவணப்படம்!
பிரீமியம் ஸ்டோரி
‘கொலை விளையும் நிலம்’ அதிரவைக்கும் ஆவணப்படம்!

பசுமைத் திரைபொன்.விமலா

‘கொலை விளையும் நிலம்’ அதிரவைக்கும் ஆவணப்படம்!

பசுமைத் திரைபொன்.விமலா

Published:Updated:
‘கொலை விளையும் நிலம்’ அதிரவைக்கும் ஆவணப்படம்!
பிரீமியம் ஸ்டோரி
‘கொலை விளையும் நிலம்’ அதிரவைக்கும் ஆவணப்படம்!
‘கொலை விளையும் நிலம்’ அதிரவைக்கும் ஆவணப்படம்!

வானம் பார்த்த பூமியாய் வறண்டு கிடக்கும் விவசாய நிலங்கள் ஒருபக்கம்... வயிற்றுக்கும் வாய்க்கும் வழியில்லாமல் ஈரத்துணியை இடுப்பில் கட்டிக்கொண்டு... கடனில் மூழ்கியுள்ள விவசாயிகள் மற்றொரு பக்கம் எனத் தண்ணீர் இல்லாமல் தத்தளிக்கிறது தமிழகம்.

கடந்த ஆண்டு எதிர்ப்பார்த்த பருவமழை பொய்த்துப் போனதால் கொஞ்ச நஞ்சமிருந்த நம்பிக்கையையும் இழந்து, கொத்துக் கொத்தாகத் தற்கொலை செய்துகொண்டார்கள் விவசாயிகள். தமிழகத்தின் கடைக்கோடி நிலத்தில் ஆரம்பித்த போராட்டம், டெல்லி வரை தொடர்ந்தது. ஆனாலும், விவசாயியின் நிலைமை இன்னமும் பரிதாபத்துக்குரியதாகவே இருந்து வருகிறது. இப்படிக் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் பிரச்னைகளை அவர்களின் பார்வையிலிருந்தே பேசுகிறது ‘கொலை விளையும் நிலம்’ எனும் ஆவணப்படம்.

ஊடகவியலாளர் க.ராஜீவ்காந்தி இயக்கியுள்ள இந்த ஆவணப்படம், விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்களை ‘கொலைகள்’ என்றே சித்திரிக்கிறது. கணவனை, தகப்பனை, தாயை... எனத் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து வெடித்த நிலத்தைப் பார்த்துக் கண்ணீர் சிந்தும் விவசாயக் குடும்பங்களைக் கண்முன் நிறுத்துகிறது.

‘கொலை விளையும் நிலம்’ அதிரவைக்கும் ஆவணப்படம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் பயணம் செய்து... 2016-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன விவசாயக்  குடும்பங்களைச் சேர்ந்தவர் களையே பேச வைத்துப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஆவணப்படத்தில் பேசியிருக்கும் நபர்கள்தான் விவசாயம் அழிந்து கொண்டிருப்பதற்கான நேரடிக் கண்ணீர்ச் சாட்சி. ‘இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்’ என்று சொல்வார்கள். ஆனால், முதுகெலும்பு கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கப்பட்டு வருவது உண்மையாகிக் கொண்டிருக்கிறது.

இந்த ஆவணப்படம் குறித்து இயக்குநர் ராஜீவ்காந்தியிடம் பேசினோம். “ஆட்சியாளர்கள் மீதான கோபம்தான் இந்த ஆவணப்படத்தை உருவாக்கத் தூண்டியது. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து கடந்த மே மாதம் வரை சுமார் 250 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். ஆனால், இதுவரை அரசுத் தரப்பில் 82 பேருக்கு மட்டும்தான் தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

‘கொலை விளையும் நிலம்’ அதிரவைக்கும் ஆவணப்படம்!

உச்சநீதிமன்றம், தமிழக அரசிடம் விவசாயிகளின் தற்கொலை குறித்து கேள்வி கேட்டபோது, ‘சொந்தக் காரணங்களால்தான் இறந்து போனார்கள். தமிழகத்தில் வறட்சி இல்லை’ எனப் பொய்யான தகவலைச் சொன்னார்கள். இதே ஆட்சியாளர்கள்தான் முன்னாள் முதலமைச்சர் இறந்தபோது உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோன அக்கட்சியின் தொண்டர்களுக்கு, அதிர்ச்சியால் இறந்ததாகச் சொல்லி நிவாரணம் அளித்தார்கள்.

விவசாயிகளுக்கு மரியாதை இல்லாத, சக மனிதராகக்கூட பார்க்காத இந்த மாநிலத்தில் விவசாயிகளின் பிரச்னைகளைப் பேச வேண்டும் எனத் தோன்றியது. அதன் தொடர்ச்சியாகத்தான் என் தார்மீகக் கோபத்தை ஆவணமாக்கினேன். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளைத் தேடிச் சென்று சந்தித்தாலும், ஆவணத்தின் கால அளவைப் பொறுத்து 7 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பேசுவதை மட்டுமே இதில் பதிவு செய்திருக்கிறோம்” என்ற ராஜீவ்காந்தி நிறைவாக,

“சிறுவயதில் ஊரெங்கிலும் நிறைய ரைஸ்மில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம அவை மூடிக் கிடப்பதைத்தான் பார்க்கமுடிகிறது. அப்படியென்றால் நாம் உண்ணும் உணவு எங்கிருந்து வருகிறது என்பதைக் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொள்வது, அந்நாட்டின் பொருளாதாரம் தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம். இதெல்லாம் போகப் போகத்தான் தெரியும்” என்றார் கண்களில் கோபம் கொப்பளிக்க.

அவரின் கோபத்தில் இருக்கும் உண்மையை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல... ‘எம்புள்ள கலெக்டர் ஆகணும். டாக்டர் ஆகணும்’ என்று சொல்லும் ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்க வேண்டும். ‘என் பிள்ளை விவசாயியாக வேண்டும்’ என்று நாம் யோசிக்காத வரையில், நமது நிலம் கொலை விளையும் நிலமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.