Published:Updated:

சக்காவோ பாரிட்டன்... - சமவெளியிலும் விளையும் மலைப் பிரதேச நெல்!

சக்காவோ பாரிட்டன்... - சமவெளியிலும் விளையும் மலைப் பிரதேச நெல்!
பிரீமியம் ஸ்டோரி
News
சக்காவோ பாரிட்டன்... - சமவெளியிலும் விளையும் மலைப் பிரதேச நெல்!

மகசூல் கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: எஸ்.ராபர்ட்

யற்கை விவசாயத்துக்கு மாறும் விவசாயிகளில் பெரும்பாலானோர் பாரம்பர்ய விதைகளைத்தான் தேடிப்பிடித்து விதைத்து வருகிறார்கள். அந்த வகையில், அழிவின் பிடியில் இருந்த பல தமிழ்நாட்டுப் பாரம்பர்ய நெல் ரகங்கள் மீட்கப்பட்டுள்ளன. பாரம்பர்ய ரகங்களின்மீது தேடல் உள்ள விவசாயிகளில் பலர் அண்டை மாநிலங்களில் புழக்கத்தில் உள்ள பாரம்பர்ய விதைகளையும் விட்டு வைப்பதில்லை.

சக்காவோ பாரிட்டன்... - சமவெளியிலும் விளையும் மலைப் பிரதேச நெல்!

அந்த வகையில், மணிப்பூர் மலைப்பகுதியில் விளையும் பாரம்பர்ய நெல் ரகமான ‘சக்காவோ பாரிட்டன்’ (Chakhao Poireiton) எனும் ரகத்தை வெப்ப மண்டலச் சமவெளிப்பகுதியான பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்து வெற்றி பெற்றிருக்கிறார் மோகன்குமார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலூகா அத்தியூர் கிராமத்தில் மோகன்குமாரின் நெல் வயல் உள்ளது. ஒரு பகல்பொழுதில் வயலில் கதிரடித்துக் கொண்டிருந்த மோகன்குமாரைச் சந்தித்தோம். “நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். கல்லூரிப் படிப்பு முடிச்சதும் வேலைக்காக வெளிநாடு கிளம்பிட்டேன். அங்கே நல்ல வருமானம் வந்தாலும், சொந்த ஊரைவிட்டுப் பிரிஞ்சு இருக்கமுடியல. அதனால, ஊர் திரும்பிக் குடும்பத் தொழிலான விவசாயத்துல இறங்கிட்டேன். இங்க மொத்தம் 5 ஏக்கர் நிலம் இருக்கு. கரிசல் மண் பூமி. அதுல எப்போதும் ரெண்டு ஏக்கர் நிலத்துல கரும்பும் மூணு ஏக்கர் நிலத்துல நெல்லும் சாகுபடி செய்வோம். இதுல ரசாயன உரங்களைக் கொஞ்சமாப் பயன்படுத்தி விவசாயம் செஞ்சுக்கிட்டு இருந்தோம்.    

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சக்காவோ பாரிட்டன்... - சமவெளியிலும் விளையும் மலைப் பிரதேச நெல்!

சில நண்பர்கள் மூலமா இயற்கை விவசாய ஆலோசகர் ஏகாம்பரம் எனக்கு அறிமுகமானார். அவர்தான்  இயற்கை விவசாய முறைகளை எனக்குச் சொல்லிக்கொடுத்தார். அதோட சில பாரம்பர்ய நெல் ரகங்கள் பத்தியும் சொன்னார். அவர்கூடச் சேர்ந்து நிறைய விவசாயிகளோட நிலத்துக்கும் போய்ப் பாரம்பர்ய ரகங்களைப் பார்த்துட்டு வந்ததுல, எனக்கும் அந்த ரகங்கள்மேல ஆர்வம் வந்துடுச்சு. அடிக்கடி மணிப்பூர் போயிட்டு வருவார் ஏகாம்பரம். அப்படி ஒரு தடவை போயிருந்தப்போ... அந்தப் பகுதி பாரம்பர்ய நெல் ரகமான ‘சக்காவோ பாரிட்டன்’ ரகத்துல, 200 கிராம் விதை நெல்லை வாங்கிட்டு வந்து கொடுத்தார்.

அது மலைப்பகுதியில் வளரக்கூடிய ரகம். அதைச் சோதனை அடிப்படையில விளைவிச்சுப் பார்க்கலாம்னு இருபது சென்ட் நிலத்துல விதைச்சேன். இயற்கை முறையில பராமரிச்சதுல ரொம்ப நல்லா வளர்ந்து வந்துச்சு. இதோட தண்டு கறுப்பு நிறத்துல இருந்துச்சு. பக்கத்து விவசாயிகள் எல்லாம் இதை ஆச்சர்யமாப் பார்த்தாங்க. விதைச்ச 70 நாள்ல ரோஜாப்பூ நிறத்துல பூ எடுத்துச்சு.

அதைப் பார்க்கவே அழகா இருந்துச்சு. 120 நாள்ல அறுவடைக்கு வந்துடுச்சு. அறுவடை சமயத்துல பயிர் மூன்றரையடி உயரம் இருந்துச்சு. கையால்தான் அறுவடை செஞ்சோம்” என்ற மோகன்குமார் அறுவடை செய்த நெல் மணிகளைக் கைகளில் அள்ளிக் காட்டிக் கொண்டே பேசினார். “இந்த ரகம் ரொம்பச் சன்னமும் இல்லை. மோட்டாவும் இல்லை. ரெண்டுக்கும் இடைப்பட்ட அளவுல இருக்கு. நெல் , அரிசி ரெண்டுமே கறுஞ்சிவப்பு நிறத்துல இருக்கு. இருபது சென்ட் நிலத்துல 225 கிலோ மகசூல் கிடைச்சிருக்கு. கோடையிலேயே இவ்வளவு மகசூல் ஆகியிருக்கு. மழைக் காலத்துல சாகுபடி செஞ்சிருந்தா, இன்னும் கூடுதல் மகசூல் கிடைக்கும்னு நினைக்கிறேன்.  

சக்காவோ பாரிட்டன்... - சமவெளியிலும் விளையும் மலைப் பிரதேச நெல்!

இந்த அரிசியில சாதம் சமைச்சுப் பார்த்தோம். நல்ல மணமா இருந்ததோடு, பசைத்தன்மையும் அதிகமா இருந்துச்சு. கஞ்சி, சோறு சமைக்க நல்லா இருக்கு. இட்லி மாதிரி பலகாரங்கள் செய்யச் சரிப்பட்டு வரலைன்னாலும் இதுல நிறைய சத்துகள் இருக்குனு சொல்றாங்க. அதனால, எங்க வீட்டுல இனி இதைத்தான் சாப்பாட்டுக்குப் பயன்படுத்தணும்னு முடிவு பண்ணிட்டோம்.

அடுத்த போகம் விதைக்க 30 கிலோ விதைநெல்லை எடுத்து வெச்சுக்கிட்டு மீதியை அரிசியாக்கிட்டேன். நண்பர்கள், உறவினர்களுக்கும் இதைக் கொடுத்தேன். அவங்களும் சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சுவையா இருக்குனு சொன்னாங்க” என்ற மோகன்குமார் நிறைவாக,

“இந்த நெல்லை அரிசியாக்கி விற்பனை செஞ்சா ஒரு கிலோ 70 ரூபாய்னு விற்பனையாகும். அதனால, இதை அதிகப் பரப்புல சாகுபடி செய்யலாம்னு இருக்கேன். மகசூலும் கூடுதலா கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்” என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, 

மோகன்குமார், செல்போன்: 99440 81673

ஏகாம்பரம், செல்போன்:
90959 74287 

சக்காவோ பாரிட்டன்... - சமவெளியிலும் விளையும் மலைப் பிரதேச நெல்!

இடுபொருளே தேவையில்லை!

க்காவோ பாரிட்டன் நெல் ரகம் குறித்து இயற்கை விவசாய ஆலோசகர் ஏகாம்பரம் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். “மணிப்பூர் மாநிலத்துல மலைப்பகுதிகள்ல இதை அதிகளவுல சாகுபடி செய்றாங்க. அங்கே இதுக்கு எந்த இடுபொருளும் கொடுக்க மாட்டாங்க. ஜூன் மாசத்துல இருந்து டிசம்பர் மாசம் வரை சாகுபடி செய்றாங்க. ஒரு ஏக்கர் நிலத்துல 1,500 கிலோ அளவுக்கு மகசூல் எடுக்கிறாங்க.

சக்காவோ பாரிட்டன்... - சமவெளியிலும் விளையும் மலைப் பிரதேச நெல்!இதைச் சமைத்துச் சோறாக்கித் தண்ணீர் சேர்த்து 5 நாள்கள் புளிக்கவிட்டு மதுபானமாகவும் அருந்துறாங்க. பால்ல வேக வெச்சுப் பாயசம் செஞ்சும் சாப்பிடுறாங்க. இப்படிப் பல விதத்துல மணிப்பூர் மக்கள் இதைப் பயன்படுத்துறாங்க.

மணிப்பூர்ல மலையடிவாரச் சமவெளிப் பகுதிகள்லயும் இதைச் சாகுபடி பண்றாங்க. இதுல விட்டமின் இ, இரும்புச்சத்து, நார்ச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துகள் நிறைஞ்சிருக்கு. இதைச் சாப்பிடுற மக்கள் திடகாத்திரமா இருக்கிறாங்க. இது கேன்சரைக்கூட குணப்படுத்தும்னு சொல்றாங்க. இதைச் சர்க்கரை வியாதி உள்ளவங்களும் சாப்பிடலாம். சீனாவுல இந்த அரிசிக்கு அதிக வரவேற்பு இருக்கு” என்றார்.

ஓர் அடி இடைவெளி... குத்துக்கு மூன்று விதைகள்

20 சென்ட் நிலத்தில் சக்காவோ பாரிட்டன் ரக நெல் சாகுபடி செய்யும் விதம் குறித்து மோகன்குமார் சொன்ன விஷயங்கள் இங்கே...

“நிலத்தை இரண்டு சால் உழவு ஓட்டி 200 கிலோ எருவைக் கொட்டிக் கலைத்துவிட வேண்டும். மீண்டும் இரண்டு சால் உழவு ஓட்டிச் சமப்படுத்தவேண்டும். பிறகு நிலத்தை ஈரப்படுத்தி நடவுக்குத் தயார் செய்து, ஓர் அடி இடைவெளியில் குத்துக்கு 3 விதைகள் என விதைக்கவேண்டும். 15-ம் நாள் களையெடுக்க வேண்டும். விதைத்த 20 மற்றும் 40-ம் நாள்களில் 150 கிலோ எருவை வயலில் பரவலாகத் தூவவேண்டும்.

விதைத்த 42 மற்றும் 49-ம் நாள்களில் 600 மில்லி பஞ்சகவ்யாவை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். விதைத்த 52-ம் நாள் 20 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கலந்த கரைசலைத் தெளிக்கவேண்டும். விதைத்த 70-ம் நாளுக்குமேல் கதிர் எடுக்கும். தொடர்ந்து கதிர் பிடித்து 110-ம் நாளுக்குமேல் முற்றத்தொடங்கும். முற்றியதை உறுதி செய்துகொண்டு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி அறுவடை செய்யலாம்.”