Published:Updated:

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்... - தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் விவசாயப் புரட்சி!

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்... - தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் விவசாயப் புரட்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்... - தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் விவசாயப் புரட்சி!

முதல்வரின் பாராட்டுப் பத்திரம்நாட்டு நடப்புஆறுச்சாமி

பார்டு எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் 36-வது நிறுவன நாள் கொண்டாட்டம், சுயஉதவிக் குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழா ஆகியவை கடந்த 26-ம் தேதி சென்னையில் நடந்தன. இதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்றார். அப்போது சிறப்பாகச் செயல்பட்ட சுயஉதவிக் குழுக்கள் மற்றும் அரசு, தனியார் துறை வங்கிகளுக்கு விருதுகளை வழங்கி அவர் பேசியபோது, ‘‘கிராமச்சாலைகள் முதல் பாடசாலைகள் வரை, கால்நடை மருத்துவ மையங்கள் முதல் மீன்பிடித் துறைமுகங்கள் வரை, விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் முதல் பொது விநியோகக் கிடங்குகள் வரை கிராம முன்னேற்றத்துக்கான அனைத்துத் திட்டங்களிலும் நபார்டு வங்கி தனது ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் வரை கடனுதவி அளித்து வருவதை, நான் இங்கே மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.   

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்... - தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் விவசாயப் புரட்சி!

இத்திட்டத்தில் அதிக நிதியுதவி பெறும் மாநிலங்களில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. போதிய மழை இல்லாமல் தமிழ்நாடு வறட்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் குடிமராமத்துப் பணிகளுக்காகவும் நீராதாரங்களின் மேம்பாட்டுக்காகவும் நபார்டு வங்கியின் நிதி உதவியை அரசு கோரியுள்ளது. இந்த ஆண்டு தமிழக அரசின் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மானாவாரி நிலப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்வரும் வேளாண்மை உற்பத்திக் கூட்டமைப்புகளுக்கு நபார்டு வங்கி கடனுதவி அளிக்கவுள்ளது.

இதுதவிர எளிதில் அழுகக்கூடிய காய்கறிகள், பழங்கள் உற்பத்தியை உயர்த்தி நிலை நிறுத்த, விநியோகத் தொடரமைப்பு மேலாண்மைக்கு (Supply Chain Managment) 398 கோடி ரூபாய் கடனுதவியை நபார்டு வங்கி வழங்கியுள்ளது. இத்திட்டம் நாட்டிலேயே ஒரு முன்னோடித் திட்டமாகும். விவசாயப் பொருள்களுக்கு லாபகரமான விலை கிடைத்தால்தான் விவசாயிகள் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபடமுடியும். அதற்கு உதவும் வகையில் ஏபிஎம்சி சட்டத்தில், தமிழக அரசு அவசியமான சில நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலமாக ஒருங்கிணைந்த தேசிய விவசாயச் சந்தையில் தமிழக விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்

விவசாயிகளையே முதலாளிகளாக மாற்றும் வகையில் விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்கி, அமைதியான விவசாயப் புரட்சியை நபார்டு வங்கி உதவியுடன் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு இடுபொருள் விலைச் சலுகை முதல் மேம்பட்ட சந்தை வாய்ப்புகள் வரை பல்வேறு வகையான பலன்கள் கிடைக்கின்றன. இன்று தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பல வெற்றிகரமான முறையில் செயல்பட்டு வருகின்றன.      

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்... - தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் விவசாயப் புரட்சி!

பருவகால மாற்றங்களை எதிர்கொள்வது இன்று விவசாயிகளுக்குப் பெரிய சவாலாக உள்ளது. இந்த மாற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளத்தக்க வகையில் பல்வேறு பருவகால மாற்றத் திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து நபார்டு வங்கி 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு திட்டங்களையும் தீட்டியுள்ளது. இதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் நதிநீர் இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தவும் நபார்டு வங்கி மாநில அரசுடன் கைகோத்து, நீண்டகால நீர்ப் பாசன நிதியின் மூலமாக உதவ இருக்கிறது.

தாமிரபரணி - நம்பியாறு, அத்திக்கடவு - அவிநாசித் திட்டம் போன்றவை இதில் அடங்கும். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ‘நீரா உற்பத்தி’ திட்டத்துக்கான உற்பத்தித் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு உணவுப் பொருள் பதப்படுத்தும் நிதியிலிருந்து உதவ வேண்டும் என்பதைத் தமிழக அரசின் கோரிக்கையாகும்.

சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக வங்கிகள், தொண்டு நிறுவனங்கள், நுண்கடன் நிறுவனங்கள் போன்றவற்றையும் பாராட்டுகிறேன். இந்தத் தருணத்தில், தமிழ்நாட்டின் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், தாங்கள் வாங்கிய வங்கிக் கடனைத் தவணை தவறாமல் திருப்பிச் செலுத்தி வருகிறார்கள் என்பதைச் சுட்டிக்கட்ட விழைகிறேன்.

அதேசமயம், சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் தற்போதுள்ள கடனுதவி 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் உள்ளது. இதில் வங்கிகளின் பங்களிப்பு 6,300 கோடி ரூபாய் அளவில்தான் உள்ளது என்பதையும்  கவனிக்க வேண்டும். இனிவரும் ஆண்டுகளில் அனைத்து வங்கிகளும் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கும் கடனுதவியை அதிகரித்து, வங்கிகளின் பங்களிப்பைப் பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று சில கோரிக்கைகளை முன்வைத்துப் பேசி அமர்ந்தார் முதல்வர்.

முன்னதாக நபார்டு வங்கியின் தலைமைப் பொது மேலாளர் எஸ்.நாகூர் அலி ஜின்னா தனது வரவேற்புரையில், ‘‘நம் தமிழ்நாட்டில் பண்பாடு, மண்பாடு, பெண்பாடு முக்கியமானது. தமிழகத்தில் 9 லட்சம் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.6,368 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தியளவில், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தமிழ்நாட்டு சுயஉதவிக் குழு பெண்கள் முன்னிலையில் உள்ளனர்.

குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் 41 ஆயிரம் ஏரி குளங்களைப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தண்ணீரைக் காப்போம், கண்ணீரைத் துடைப்போம் என்பதைக் கருத்தாகக் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் 614 நீர்த் தூதர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் மூலம் 6,500 கிராமங்களில் நீர்சேமிப்பு சம்பந்தமான விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். ‘காசேதான் கடவுளப்பா’ என்ற நிலை மாறி ‘காடேதான் கடவுளப்பா’ என்று சொல்லும் அளவுக்கு விவசாயத்தின் வளர்ச்சி வேகம் எடுத்துள்ளது’’ என்று உற்சாகமாகப் பேசினார்.

விழாவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பாகத் துவங்கப்பட உள்ள ‘இன்குபேஷன் மையத்துக்காக’ நபார்டு வங்கி 12.40 கோடி ரூபாய் மானிய உதவி வழங்கியது. இதைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ராமசாமி பெற்றுக்கொண்டார். சிறப்பாகச் செயல்பட்ட சுயஉதவிக் குழுக்கள், வங்கிகள், ‘நீர் தூதர்கள்’ ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.