நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பசுமைப் புரட்சிக்குப் பரிகாரம்

பசுமைப் புரட்சிக்குப் பரிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
பசுமைப் புரட்சிக்குப் பரிகாரம்

பசுமைப் புரட்சிக்குப் பரிகாரம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘உலகம்

உணவு

இந்தியா-2017’ எனும் கண்காட்சி முதல் முறையாக இந்தியாவில் நடக்க இருக்கிறது. வருகிற நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டுக்கான பணிகளை மத்திய அரசு சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகிறது.

‘உலக அளவில் இயற்கை விவசாய விளைபொருட்கள் மீதான விழிப்பு உணர்வு பெருகி வருவதைக் கருத்தில் கொண்டு, இயற்கை விவசாய விளைபொருட்களின்மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்’ எனப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கியிருக்கிறார். இதைக் கருத்தில்கொண்டு, இயற்கை விவசாய விளைபொருட்களுக்கு இந்தக் கண்காட்சியில் சிறப்பிடம் வழங்கப்படும் என்று மத்திய உணவுப் பதப்படுத்துதல்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியிருக்கிறார்.

இயற்கை விவசாய விளைபொருட்கள் விஷயத்தில் மத்திய அரசு தன் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியே! அதேநேரத்தில் உணவுப் பொருள் என்று சந்தைக்கு வந்த பிறகு கவனம் செலுத்துவதைவிட, விதை முதல் அறுவடை வரை அனைத்து நிலைகளிலும் இயற்கை என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். ஆம், பசுமைப் புரட்சி என்கிற பெயரில் ஒட்டுமொத்த அரசுத் துறைகளும் எப்படி ரசாயனத்தைப் பரப்பினவோ... அதற்கும் மேலான பெருமுயற்சி அவசியம். செய்த தவறுக்குப் பரிகாரம் தேடும் வகையில் மத்திய அரசு இதைக் கையில் எடுக்க வேண்டும்.

என்னதான் சுயமாக இயற்கை விழிப்பு உணர்வு பெருகி வந்தாலும் அரசாங்கத்தின் ஆதரவும் சேரும்போதுதான், அது இன்னும் வேகமெடுக்கும்... இயற்கை விவசாயத்தின் அகில உலகத் தலைநகராக இந்தியாவும் மாறும்.

-ஆசிரியர்