Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
News
தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

டிரைக்கோடெர்மா உற்பத்தி

கோவை, வன மரபியல் மற்றும் மரப் பெருக்கு ஆராய்ச்சி மையத்தில் ஆகஸ்ட் 29, 30-ம் தேதிகளில் மர இலை தழைகள் கொண்டு தயார் செய்யப்படும் ‘டிரைக்கோடெர்மா விரிடி’ (உயிரி கட்டுப்படுத்தி) உற்பத்தி குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. உணவு, தங்குமிடம் இலவசம். வயது 30-க்குள் இருக்க வேண்டும். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94433 74119.

மீன் வளர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 17, 18-ம் தேதிகளில் ‘வேளாண் பயிர்களில் நன்மை செய்யும் பூச்சிகள் - உற்பத்தி முறைகள்’, 21, 22-ம் தேதிகளில் ‘விரால் மீன் வளர்ப்பு’,  23, 24-ம் தேதிகளில் ‘தென்னைச் சாகுபடிக்கேற்ற மண்மேலாண்மை முறைகள்’, 23, 24-ம் தேதிகளில் ‘மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானியப் பொருள்கள் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

தீவன மேலாண்மை

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 21-ம் தேதி ‘எலுமிச்சை, கொய்யா மற்றும் மாதுளை உற்பத்தித் தொழில்நுட்பங்கள்’, 22-ம் தேதி ‘கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை’, மண் சீர்திருத்தம் மற்றும் உர உபயோகத்திறனை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள்’, 29-ம் தேதி ‘ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

ஆடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 29-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

கறவை மாடு வளர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ‘கறவை மாடு வளர்ப்பு’, செப்டம்பர் 4-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை ‘ஒருங்கிணைந்த விவசாயம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27645060

செல்போன்: 94443 99892.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தண்டோரா

கட்டணப் பயிற்சிகள்

இயற்கை வேளாண் பயிற்சி!

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர், ஒடுகம்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிப் பண்ணையில் ஒவ்வொரு மாதமும் நான்காவது வாரம் மூன்று நாட்கள் இயற்கை வேளாண்மைப் பயிற்சி நடைபெற உள்ளது அந்த வகையில் ஆகஸ்ட் 25, 26, 27-ம்தேதிகளில் ‘உயிர்ச்சூழல் வேளாண்மைப் பயிற்சி’ நடைபெற உள்ளது. இயற்கை வேளாண்மை முறையில் விதை முதல் அறுவடை வரை பயிற்சி தரப்படும். முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. பயிற்சிக் கட்டணம் `450. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: 98424 33187, 0431 331879.

பால் உற்பத்தி

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’,  23-ம் தேதி ‘சொட்டுநீர்ப் பாசன முறைகள்’, 29-ம் தேதி ‘பழங்களில் மதிப்புக்கூட்டிய தொழில்நுட்பங்கள்’, 30-ம் தேதி ‘பால் உற்பத்தித் தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம். கட்டணம் ரூ 100.
 
தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

காளான் வளர்ப்பு

ஈரோடு மாவட்டம், கோபி்செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஆகஸ்ட் 24-ம் தேதி ‘மாடித்தோட்ட வளர்ப்பு’, 29-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 30-ம் தேதி ‘இயற்கை விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.  முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ 150.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

மாடித்தோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296

நாட்டுக்கோழி வளர்ப்பு

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 20-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது.

முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சி கட்டணம்: ரூ 100. 

தொடர்புக்கு, செல்போன்: 96559 26547.

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.