Published:Updated:

பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள்! - உதவிக்கு வரும் உயிரியல் - 13

பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள்! - உதவிக்கு வரும் உயிரியல் - 13
பிரீமியம் ஸ்டோரி
பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள்! - உதவிக்கு வரும் உயிரியல் - 13

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! இடுபொருள்முனைவர் அ.உதயகுமார் - தொகுப்பு: ரா.கு.கனல்அரசு

பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள்! - உதவிக்கு வரும் உயிரியல் - 13

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! இடுபொருள்முனைவர் அ.உதயகுமார் - தொகுப்பு: ரா.கு.கனல்அரசு

Published:Updated:
பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள்! - உதவிக்கு வரும் உயிரியல் - 13
பிரீமியம் ஸ்டோரி
பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள்! - உதவிக்கு வரும் உயிரியல் - 13

யற்கை தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் என்பது நாம் அறிந்ததுதான். அப்படித் தகவமைத்துக்கொள்வதில் நுண்ணுயிர்களின் பங்கு முக்கியமானது. இந்த நுண்ணுயிர்கள் விவசாயத்தில் மிகப்பெரும் பங்காற்றுகின்றன. இவற்றைப் பற்றிய விழிப்பு உணர்வு நம்மிடம் போதுமான அளவு இல்லை. ஆனால், வெளிநாடுகளில் பயிர்வளர்ச்சி, நோய்க் கட்டுப்பாடு போன்றவற்றுக்கு வகை வகையான பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இவற்றைப் பயன்படுத்துவது மூலமாக, மண்ணில் இடும் அத்தனை சத்துகளும் சிந்தாமல் சிதறாமல் பயிர்களுக்குக் கிடைக்கிறது. ஆனால், நாம் இடும் இடுபொருள்களில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமலே வீணாகின்றன. இயற்கையாகவே மண்ணில் பல நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் இருக்கின்றன. ஆனால், ரசாயன உரங்களைக் கொட்டி அவற்றை அழித்தொழித்துக் கொண்டிருக்கிறோம். மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பற்றி இதுவரை பார்த்தோம். அவையனைத்தும் பயன்பாட்டில் இருப்பவை. ஆய்வுக்கூடங்களில், பலன் கொடுக்கும் எனக் கண்டுபிடித்து, இன்னமும் பயன்பாட்டுக்கு வராத பல நுண்ணுயிர்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.     

பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள்! - உதவிக்கு வரும் உயிரியல் - 13

பயரேன்சியா (Beijerincia) :  இது மற்ற எதையும் சார்ந்து வாழாமல், தனிப்பட்ட முறையில் வாழக்கூடிய ஒரு பாக்டீரியா. வளிமண்டலத்தில் இருக்கக்கூடிய நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தும் தன்மையுடையது. வெப்பமண்டலப் பகுதிகளிலுள்ள மண்ணில் இது வாழும்.  கார, அமில நிலை 3 முதல் 10 வரை இருக்கக்கூடிய மண்ணில் இதன் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ள மண், இது வாழ்வதற்கு ஏற்றது. 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குமேலே போனால் இதன் வளர்ச்சி தடைபடும். இது காற்றோட்டம் உள்ள பகுதியில்தான் வேலை செய்யும். இந்தப் பாக்டீரியா இன்னும் பரவலாகப் பயன்பாட்டுக்குக்கொண்டு வரப்படவில்லை. இது தொடர்பாக இன்னும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

பிரட்டேரியா அரன்சியா (Frateuria Aurantia) :  மண்ணில் இருக்கக்கூடிய அங்கக அமிலங்கள், நொதிகளை வெளியிடும் திறன் வாய்ந்தது. இதை விவசாயத்தில் விதைநேர்த்திக்குப் பயன்படுத்தலாம். ஒரு கிலோ விதைக்குப் பத்து கிராம் இந்தப் பாக்டீரியா, பத்து கிராம் வெல்லச் சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் மாதிரி செய்துகொண்டு, அதில் விதையைக் கலந்து விதைக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள்! - உதவிக்கு வரும் உயிரியல் - 13



நாற்றுகளை நேர்த்தி செய்வதற்கு 50 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் இந்தப் பாக்டீரியாவைக் கலந்து, அந்தத் தண்ணீரில் நாற்றின் வேர்களை முக்கி நடவு செய்யலாம். மண்ணில் இடுவதாக இருந்தால், ஒரு ஏக்கர் நிலத்துக்கு, மூன்று முதல் ஐந்து கிலோ பாக்டீரியாவைத் தொழுவுரத்துடன் கலந்து தெளிக்கலாம். சொட்டுநீர்ப் பாசனத்தில் கொடுப்பவர்கள், ஒரு ஏக்கர் நிலத்துக்கு மூன்று கிலோ பாக்டீரியாவைக் கலந்துவிடலாம். இந்தப் பாக்டீரியா மண்ணில் அதிக அமிலங்களைச் சுரப்பதோடு, மண்ணில் கரையாமல் இருக்கும் சத்துகளைக் கரைத்துக் கொடுக்கிறது. இதிலுள்ள என்சைம்கள் செடிகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கின்றன. இந்தப் பாக்டீரியாவின் பயன்பாடு, பெரிய அளவு பரவவில்லை.

கிளாஸ்டிரிடியம் (Clostridium) : இது மண்ணில் வாழக்கூடிய ஒருவகை  பாக்டீரியா. இதுவும் வளிமண்டலத்திலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தக்கூடியது. காற்றிலுள்ள நைட்ரஜனை அமோனியாவாக மாற்றிக்கொடுக்கும் பணியைச் செய்கிறது. இது இன்னும் பயன்பாட்டுக்கு வராத பாக்டீரியா. இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.  

பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள்! - உதவிக்கு வரும் உயிரியல் - 13

கிளேப்சியல்லா (Klebsiella) : இது இயற்கையாக வாழக்கூடிய ஒருவகை பாக்டீரியா. எதையும் சார்ந்து வாழாமல் தனிப்பட்ட முறையில் வாழக்கூடியது. இது பயறுப் பயிர்களில் அதிகளவில் இருக்கும். பயிர்களுக்குத் தழைச்சத்தைக் கொடுக்கும் திறன்வாய்ந்த பாக்டீரியா. இதுவும்கூட பயன்பாட்டுக்கு வரவில்லை.

அனபீனா (Anabaena) : இது நூலிலைப்போல் உள்ள சயனோ பாக்டீரியா வகையைச் சேர்ந்தது. இது இயற்கையாக மண்ணில் இருக்கும். வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தும். இது தன்னிடமுள்ள சத்துகளைச் செடிகளுக்குக் கொடுத்து, செடிகளிலுள்ள சத்துகளை எடுத்துக்கொண்டு உயிர் வாழும் தன்மைவாய்ந்தது. ஒன்றுக்கொன்று பரிமாற்றம் செய்துகொண்டு வாழக்கூடியது. இந்தப் பாக்டீரியாவும் பயன்பாட்டுக்கு வரவில்லை.   

பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள்! - உதவிக்கு வரும் உயிரியல் - 13

நோஸ்டாக் (Nostoc) : இதுவும் சயனோ பாக்டீரியா வகையைச் சேர்ந்த ஒருவகைப் பாக்டீரியா. இது நீர், நிலம் இரண்டிலும் வாழக்கூடியது. இதற்குச் சாதகமான சூழ்நிலை இல்லாத இடங்களில், உறக்கநிலைக்குச் சென்றுவிடும். பல ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும். மீண்டும் சாதகமான சூழல் நிலவும்போது, உறக்கம் கலைந்து செயல்படத் தொடங்கும். இது மண்ணில் தழைச்சத்தை நிலை நிறுத்தக்கூடியது. விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகவும் பயனுள்ள பாக்டீரியா. நெல் சாகுபடியில் இதைப் பயன்படுத்தலாம். மானாவாரி, இறவை முறையிலும் நெல் வயல்களில் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒரு கிலோ என்ற அளவில் தொழுவுரத்தோடு கலந்து வயல்களில் தெளிக்கலாம். சிறிய அளவில் பயன்பாட்டில் உள்ளது.

ஃபிரான்கியா (Frankia) : மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தக்கூடிய பாக்டீரியா. ரைசோபியம் மாதிரி, சத்துகளைப் பரிமாற்றம் செய்து வாழக்கூடியது. இந்தப் பாக்டீரியாவும் இன்னமும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

நன்மை செய்யும் பாக்டீரியாக்களுடன், நோய்களைக் கட்டுப்படுத்தக்கூடிய பூஞ்சைகளும்கூட பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன.  

பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள்! - உதவிக்கு வரும் உயிரியல் - 13

ஹிர்ஸ்டுல்லா தொம்பஸ்சோனி (Hirsutella Thompsonii) : இலைப்பேன், வேர்ப்புழு மற்றும் சிலவகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூஞ்சை. இதைத் தானியப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள், பழப்பயிர்கள், காபி, டீ ஆகிய பயிர்களுக்குப் பயன்படுத்தலாம்.

ஆம்பிலோமைசஸ் குயிஸ்காலிஸ்  (Ampelomyces Quisqualis) :  இது காற்றோட்டம் இல்லாத இடங்களில் வாழக்கூடிய ஒருவகை பூஞ்சை. ஒட்டுண்ணிகளை அழிக்கக்கூடிய ஒட்டுண்ணி. சாம்பல்நோய், கரிபுட்டை நோயைக் கட்டுப்படுத்தக்கூடியது. திரவமாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு மூன்று லிட்டர், பவுடராக இருந்தால் நான்கு கிலோவை எடுத்து 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். ஆக, நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் பூஞ்சைகளையும் அரசு மற்றும் தனியார் ஆய்வுக்கூடங்களில் பெருக்கி, விவசாயிகளுக்குச் சுலபமாகக் கிடைக்க வழிவகைசெய்ய வேண்டும். இதன்மூலம் இடுபொருள் செலவையும் கணிசமாகக் குறைக்க முடியும். நஞ்சில்லாத உணவுப் பொருளையும் உற்பத்தி செய்ய முடியும்.

- பரவும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism