Published:Updated:

உளிக்கலப்பை உழவு... - ஈரப்பதத்தைக் காக்கும்... மகசூலைக் கூட்டும்!

உளிக்கலப்பை உழவு... - ஈரப்பதத்தைக் காக்கும்... மகசூலைக் கூட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
உளிக்கலப்பை உழவு... - ஈரப்பதத்தைக் காக்கும்... மகசூலைக் கூட்டும்!

கருவிகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: க.சதீஷ்குமார்

‘அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்’ என்ற சொல்லாடல் தமிழகக் கிராமங்களில் காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது. கடந்த தலைமுறை விவசாயிகள்கூட, இதை வேதவாக்காகத்தான் கருதி வந்தார்கள். ஆனால், காலப்போக்கில் அனைத்தும் இயந்திரமயமானதில் இந்தக் கோட்பாட்டைப் பலரும் கடைப்பிடிப்பதில்லை. மூத்தோர் சொல்லை மதித்து, இன்னமும் உளிக்கலப்பைமூலம் ஆழ உழுது பயன்பெறும் விவசாயிகளில் ஒருவர்தான் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள மங்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சந்தானகிருஷ்ணன்.   

உளிக்கலப்பை உழவு... - ஈரப்பதத்தைக் காக்கும்... மகசூலைக் கூட்டும்!

டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிலவியபோது, வயலிலிருந்த நெல் பயிர்கள், ஐந்து நாள்கள் கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் கருகத்தொடங்கின. அந்த நிலையிலும் சந்தானகிருஷ்ணனின் வயலில் நெல்பயிர் 15 நாள்கள் வரையிலும் வறட்சியைத் தாங்கி வளமாக இருந்தது. மேலும் உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை போன்ற பயறுவகைப் பயிர்களும் ஒரு மாதத்துக்குமேல் வறட்சியைத் தாங்கி முழுமையான விளைச்சலைக் கொடுத்திருக்கின்றன. ‘அதற்குக் காரணம் உளிக்கலப்பை மூலமான ஆழ உழவுதான்’ என்று சந்தோஷமாகச் சொல்கிறார் சந்தானகிருஷ்ணன்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உளிக்கலப்பை உழவு... - ஈரப்பதத்தைக் காக்கும்... மகசூலைக் கூட்டும்!

“நான் சின்ன வயசுல இருந்தே முழு நேர விவசாயிதான். எங்க குடும்பத்துக்கு 55 ஏக்கர் நிலம் இருக்கு. 40 ஏக்கர் நஞ்சை. 15 ஏக்கர் புஞ்சை. புஞ்சையில் தென்னை, வாழை, கரும்பு, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, காய்கறினு சாகுபடி செய்றோம். முன்னாடி மாடுமூலம் ஏர் ஓட்டினப்போ, ஒத்தைக் கலப்பை பயன்படுத்துவோம். அது ஓர் அடி ஆழம் வரைக்கும் நிலத்தைக் கீறும். அப்படி ஆழமா உழவு ஓட்டினா நிறைய பலன்கள் கிடைக்கும்.

அப்புறம் டிராக்டர் வந்ததும் கல்டிவேட்டர், ரோட்டோவேட்டர், கேஜ் வீல் மாதிரியான உழவுக் கருவிகளை மட்டும் பயன்படுத்த ஆரம்பிச்சோம். இதெல்லாம் அதிகபட்சம் அரையடி ஆழம் வரைக்கும்தான் மேல் மண்ணைக் கிளறிவிடும். அரையடிக்குக்கீழே இருக்கிற மண் இறுகிக் கிடக்கும். அதனால், நிலத்துல பாய்ச்சக்கூடிய தண்ணீர் மண்ணுக்குள்ள போகாது. பெரும்பகுதி தண்ணீர் சீக்கிரத்துல ஆவியாகிடும். இதனால் இடுபொருள்களும் விரயமாயிடும். நிலத்துக்கு அடியில் ஈரம் இல்லாததாலதான் வறட்சியைத் தாக்குப்புடிக்க முடியாம பயிர் கருக ஆரம்பிச்சிடுது.  

உளிக்கலப்பை உழவு... - ஈரப்பதத்தைக் காக்கும்... மகசூலைக் கூட்டும்!

பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு உளிக்கலப்பையோட மகத்துவம் தெரியலை. அமெரிக்காவில் வேளாண் விஞ்ஞானியா இருந்த எங்க அண்ணன் அருள்சேகர்தான் உளிக்கப்பையை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
2002-ம் வருஷத்துல நான் உளிக்கலப்பையைப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். இதனால, பயிரோட வேருக்கு நல்லா காற்றோட்டம் கிடைக்குது. அதிக ஆழத்துல வேர் பரவுது. மழை பெஞ்சாலும் நிலத்துல தண்ணீர் தேங்காம பூமிக்குள்ள போயிடுது. பயிரும் அழுகிடாம இருக்கு. இப்படி மண்ணுக்குள் போற தண்ணியால, மண்ல ஈரப்பதம் இருந்துட்டே இருக்கு” என்ற சந்தானகிருஷ்ணன் தொடர்ந்தார்...

“நெல், கரும்பு மாதிரி தண்ணி தேக்க வேண்டிய வயலுக்கு மூணு வருஷத்துக்கு ஒரு முறைதான் உளிக்கலப்பையால உழவு ஓட்டணும். உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, வாழை, காய்கறி, பருத்தி மாதிரியான பயிர்கள் சாகுபடி செய்ற வயலுக்கு வருஷத்துக்கு ஒருமுறை உளிக்கலப்பை உழவு ஓட்டலாம். லேசான மழை பெஞ்சதும் அடுத்த ரெண்டு மூணு நாளுக்குள்ள உழவு ஓட்டணும். இதை ஒட்டிட்டு வழக்கம்போல தேவைப்படுற மத்த உழவு முறைகள்ல உழவு ஓட்டிக்கலாம்.
இந்த மாதிரி உழவு செஞ்சு, ஏக்கருக்கு 4 டன் வரை நெல் மகசூல் எடுத்துக்கிட்டு இருக்கோம். கரும்புல 75 டன் வரைக்கும் மகசூல் கிடைக்குது” என்றார் சந்தான கிருஷ்ணன்.   

உளிக்கலப்பை உழவு... - ஈரப்பதத்தைக் காக்கும்... மகசூலைக் கூட்டும்!

உளிகலப்பை குறித்துப் பேசிய அருள்சேகர், “அமெரிக்காவில் விவசாயிகள் எல்லாருமே உளிக்கலப்பை (Chisel) உழவு ஓட்டுறதை அடிப்படை வழக்கமா வெச்சிருக்காங்க. அங்கதான் முதன் முதலா பார்த்தேன். அவங்க 3 முதல் 5 கொலு கொண்ட உளிக்கலப்பை பயன்படுத்துறாங்க. அதுக்கு அதிகக் குதிரைத்திறன் கொண்ட டிராக்டரைப் பயன்படுத்துறாங்க. நெல்லுக்கு மாசம் ஒரு தடவைதான் தண்ணீர் பாய்ச்சுவாங்க. சராசரியா ஏக்கருக்கு 6 டன் மகசூல் எடுக்குறாங்க.

உளிக்கலப்பை உழவு... - ஈரப்பதத்தைக் காக்கும்... மகசூலைக் கூட்டும்!அதைப் பார்த்துதான் எங்க பண்ணையிலயும் உளிக்கலப்பை பயன்படுத்த விரும்பினேன். சென்னை, மீஞ்சூர்ல இருக்குற பாலச்சந்திர பாபுங்கிறவர்தான், நான் நினைச்ச மாதிரியான உளிக்கலப்பையை உருவாக்கிக் கொடுத்தார். இதுக்கு 22 ஆயிரம் ரூபாய் செலவாச்சு. பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, நாங்க வாங்கின சமயத்திலேயே, நம் நினைவில் வாழும் விகடன் குழுமத் தலைவர் பாலசுப்ரமணியன், படப்பையில் இருக்குற பண்ணைக்காக உளிக்கலப்பையை வாங்கிப் பயன்படுத்தினார். இப்பவும் விரல் விட்டு எண்ணுற அளவுல சில பேர்தான் இதைப் பயன்படுத்துறாங்க. வேளாண் பொறியியல்துறை மூலம் இதை உருவாக்கிப் பரவலாக்கணும்” என்ற அருள்சேகர் நிறைவாக,

“எங்க பண்ணையில 48 ஹெச்.பி திறன் கொண்ட டிராக்டரைப் பயன்படுத்துறதால, அதுல ஒரு கொலு கொண்ட உளிக்கலப்பையைத் தான் பயன்படுத்துறோம். இந்தக் கொலு, துருப்பிடிக்காத இத்தாலியன் இரும்புல செஞ்சது. இது இரண்டரை அடி ஆழம் வரைக்கும் அரிவாளால் கிழிச்ச மாதிரி நிலத்தைக் கீறிவிடும். இந்தக் கொலு ஒன்றரை அங்குல அகலம் தடிமன் கொண்டது” என்றார்.

தொடர்புக்கு, செல்போன்: சந்தான கிருஷ்ணன்:
98652 53454

அருள் சேகர் : 94431 83292