அனைவருக்கும் பசுமை வணக்கம்!

ஆண்டுதோறும் பசுமை விகடன் சார்பில் ‘அக்ரி எக்ஸ்போ’ எனும் மாபெரும் வேளாண் கண்காட்சி நடைபெற்று வருவதை அறிவீர்கள். இந்த ஆண்டு, மலைக்கோட்டை நகரான திருச்சியில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதிவரை நான்கு நாள்களுக்குக் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன!

தமிழ்நாட்டின் மையப் பகுதியில் நடக்கும் இந்தக் கண்காட்சியில் நபார்டு வங்கி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கால்நடைப் பல்கலைக்கழகம், மத்திய அரசின் ஆராய்ச்சி மையங்கள் உள்ளிட்டவை அரங்குகள் அமைத்து, தங்களின் செயல்பாடுகளை விளக்கவிருக்கின்றன. இத்துடன் இயற்கை வேளாண்மைக்கான இடுபொருள் தயாரிப்பு, கருவிகள் உள்ளிட்ட அரங்குகளும் இடம்பெறவிருக்கின்றன.

கருத்துகளை உங்களுக்குள் பதியம்போடும் வகையில் முன்னோடி விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் என்று பலரும் அனுபவம் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளோடு பங்கேற்கவிருக்கின்றனர்.

திரைப்பட நடிகராக இருந்துகொண்டே இயற்கை விவசாயத்தைத் திறன்படச் செய்துவரும் நடிகர் கிஷோர், மைசூருவில் உள்ள சி.எஃப்.டி.ஆர்.ஐ அமைப்பின் இயக்குநர் ராம.ராஜசேகரன், நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல மேலாளர் நாகூர் அலி ஜின்னா, இயற்கை விவசாயத்தைத் தன்னுடைய ஆர்வத்தின் காரணமாகச் சத்தீஸ்கர் மாநிலத்தின் தாம்தரி மாவட்டத்தில் சிறப்பாகப் பரப்பிவரும் அந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் பிரசன்னா ஐ.ஏ.எஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, கருத்துரை வழங்க உள்ளனர்.

செலவைக் குறைக்கும் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ளவும் பார்வையிடவும் அக்ரி எக்ஸ்போ கண்காட்சியில் களம் அமைத்துக்கொடுக்கிறோம். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள, திருச்சிக்குத் திரளாக வாருங்கள்!

-ஆசிரியர்