Published:Updated:

“ஆப்பிளை இறக்குமதி செய்யுங்கள்!” - ஆஸ்திரேலிய அமைச்சர் கோரிக்கை!

“ஆப்பிளை இறக்குமதி செய்யுங்கள்!” - ஆஸ்திரேலிய அமைச்சர் கோரிக்கை!
பிரீமியம் ஸ்டோரி
News
“ஆப்பிளை இறக்குமதி செய்யுங்கள்!” - ஆஸ்திரேலிய அமைச்சர் கோரிக்கை!

நாட்டு நடப்புதுரை.நாகராஜன்

சியாவில் உள்ள மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று சென்னை, கோயம்பேடு சந்தை. தமிழ்நாட்டில் உள்ள சந்தைகளில் ஏற்றுமதி, இறக்குமதியில் முக்கியமான பங்கு வகிப்பதும் இந்தச் சந்தைதான். இச்சந்தை  சென்னை பிராட்வே அருகில் கொத்தவால் சாவடியில் இயங்கி வந்தது. சுகாதாரம், இட நெருக்கடி, போக்குவரத்து போன்ற காரணங்களால் 1996-ம் ஆண்டு கோயம்பேடு பகுதிக்கு மாற்றப்பட்டது.    

“ஆப்பிளை இறக்குமதி செய்யுங்கள்!” - ஆஸ்திரேலிய அமைச்சர் கோரிக்கை!

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் 296 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக இயங்கிவரும் இந்தச் சந்தையில் காய்கறிகள், மலர்கள் மற்றும் பழங்கள் என்று அனைத்துக்குமாகச் சேர்த்து மொத்தம் 3,194 கடைகள் அமைந்துள்ளன. இவற்றில் 1,000 கடைகள் மொத்தமாகவும், 2,000 கடைகளுக்குமேல் சில்லறைக் கடைகளாகவும் இருந்து வருகின்றன. தற்போது உணவு தானியங்களை விற்பனை செய்யத் தனியாக 500 கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு சந்தைக்குத் தினமும் ஒன்றரை லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.

இந்தச் சந்தையில் ஒரு பிரிவாக இயங்கும் பழ மார்க்கெட் பிரிவில் ஆஸ்திரேலியா, வாஷிங்டன், நியூசிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து பழங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால்தான் ஆசியாவிலேயே இச்சந்தை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“ஆப்பிளை இறக்குமதி செய்யுங்கள்!” - ஆஸ்திரேலிய அமைச்சர் கோரிக்கை!இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயம்பேடு சந்தைக்கு அண்மையில் ஆஸ்திரேலியா நாட்டின் துணைப் பிரதமரின் உதவி அமைச்சர், லூக் ஹார்ட்சுய்கெர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் அடங்கிய குழுவினர் வந்து வியாபாரிகளிடம் பேசிச் சென்றுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாகக் கோயம்பேடு சந்தையில் ஆஸ்திரேலிய ஆப்பிள்களை இறக்குமதி செய்வதில்லை. அது தொடர்பாகத்தான் இக்குழு வந்து சென்றுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டுக் குழுவின் வருகை குறித்து நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார், சென்னை பழ கமிஷன் ஏஜென்ட்கள் சங்கத் தலைவர் சு.சீனிவாசன். “கோயம்பேடு சந்தைக்கு ஒரு நாளைக்குச் சராசரியாக 500 டன் அளவில் பழங்கள் வரத்துள்ளது. சென்னையில் உள்ள சிறிய கடை முதல் பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர் வரை எங்களிடம்தான் பழங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்தியாவில் அதிகம் விளையாத பழங்கள் மட்டும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும். ஆசியாவிலேயே முக்கியமான சந்தை என்பதால் வெளிநாட்டு வியாபாரிகள் விற்பதிலும் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவார்கள்.

வியாபார நோக்கத்தில்தான் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி, ஆஸ்திரேலியக் குழுவினர் வந்தனர். எட்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவிலிருந்து அதிகமான பழங்கள் இறக்குமதியாயின. மூன்று ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் இருந்து ஆப்பிள் மற்றும் புளூபெர்ரி பழங்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் நம்பிக்கையான வியாபாரிகள் கிடைக்காததுதான் அதற்குக் காரணம். அங்குள்ள வியாபாரிகளோடு எங்களுக்குச் சுமூகமான பிணைப்பு இல்லை. இதுபற்றிய காரணங்களை ஆஸ்திரேலியக் குழுவினரிடம் சொன்னோம். அவர் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்” என்றார்.

நம்முடைய விவசாய விளைபொருள்களை இறக்குமதி செய்யாத நாடுகளில், நம் அமைச்சர்களும் இதுபோல அக்கறையோடு சென்று பேசினால் விவசாயிகளுக்குப் பயனுடையதாக இருக்கும்.

செய்வார்களா?