Published:Updated:

பாரம்பர்ய பயிர்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு அமைப்பு!

பாரம்பர்ய பயிர்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு அமைப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
பாரம்பர்ய பயிர்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு அமைப்பு!

சூழல்த.ஜெயகுமார் - படம்: சி.சுரேஷ்குமார்

ந்தியாவின் பல மாநிலங்களில், நாட்டு விதைகளையும் சிறுதானியங்களையும் பயிர் செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது, ‘பயோவெர்சிட்டி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு. இந்த அமைப்பின் தலைமையகம், இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உள்ளது. உலகம் முழுவதும் தாவரப் பன்முகத்தன்மை, பல்லுயிரினப்பெருக்கம் ஆகியவற்றுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பு.  

பாரம்பர்ய பயிர்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு அமைப்பு!

இந்த அமைப்பின் தெற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியப் பிரதேசங்களின் பிரதிநிதி மற்றும் ஐ.சி.ஏ.ஆரின் முன்னாள் துணைப் பொது இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணகுமார் சமீபத்தில் தமிழகம் வந்திருந்தார். அப்போது, பயோவெர்சிட்டி இன்டர்நேஷனல் அமைப்பின் பணிகள் குறித்துச் சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“உலகம் முழுவதும் விதை வங்கிகளை உருவாக்குவது, அந்தந்தப் பகுதிகளில் வளரக்கூடிய பயிர்களைச் சாகுபடி செய்வது, பயிர்களில் ஏற்படும் நோய்களுக்குத் தீர்வளிப்பது, தாவரங்களின் பன்முகத்தன்மையை நீடிக்கச் செய்வது... போன்ற பணிகளை எங்கள் அமைப்பின் மூலமாகச் செய்து வருகிறோம். இதற்காகப் பல்வேறு நாடுகளிலிருந்து கிடைக்கும் விதைகள், தாவர இனங்களை ஆராய்ந்து, அவற்றைப் பயிரிடுவதற்கேற்ற பகுதிகள், சாகுபடியில் ஏற்படும் பிரச்னைகள், அவற்றைக் களையும் முறைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து, பிறகு அவற்றை விவசாயிகளிடம் பரப்பி வருகிறோம்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பாரம்பர்ய பயிர்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு அமைப்பு!

எங்கள் அமைப்பு 1974-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பசுமைப் புரட்சிக்குப் பிறகு உலகம் முழுவதும் தன்னிச்சையாகச் செயல்படக்கூடிய ஆராய்ச்சி நிறுவனங்கள் பல உருவாகின. அப்படியொரு தன்னிச்சையான அமைப்புதான் பயோவெர்சிட்டி இன்டர்நேஷனல். முன்பு, ‘உலகத் தாவர மரபியல் வளத்துறை’ என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. அப்போதே மக்காச்சோளம், கோதுமை உள்ளிட்ட பயிர்களின் நாட்டு ரகங்களைச் சேகரித்து, தேவைப்படும் நாடுகளுக்கு அவற்றை அனுப்பும் பணியைச் செய்து வந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக... ஒவ்வொரு தாவர மரபுக்கும் பன்முகத் தன்மை வேண்டும் என்பதற்காக, பயோவெர்சிட்டி இன்டர்நேஷனல் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களிலுள்ள நாடுகளில் எங்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. கள ஆய்வு, அனுபவம், ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில்... நாடாளும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் விவசாயிகளுக்கும் பயிர்த் தேர்வு, கொள்கை முடிவுப் பரிந்துரைகள் ஆகியவற்றை வழங்கி வருகிறோம்” என்ற கிருஷ்ணகுமார் தொடர்ந்தார்... 

பாரம்பர்ய பயிர்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு அமைப்பு!“இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 268 மில்லியன் டன். தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி 280 மில்லியன் டன். இதில் தேவைக்கு அதிகமான உற்பத்தி 45 மில்லியன் டன். நம் நாட்டின் தேவைக்குப் போதுமான உணவு இருந்தாலும், இதில் நாம் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டிருக்கிறோமா என்று கேட்டால், ‘இல்லை’ என்பதுதான் பதில். அந்தளவுக்கு நம்முடைய விவசாயம், ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் கெட்டுப் போயுள்ளது. பூச்சிக்கொல்லிகள், பயிர்களில் மட்டுமல்லாமல், மண்ணிலும் கலந்து நிலத்தடி நீரையும் கெடுக்கிறது. இதனால், மொத்தச் சுற்றுச்சூழலே பாதிக்கப்படுகிறது. தாவரம், மண், நீர் ஆகியவை பாதிப்புக்குள்ளாவதோடு கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

பாரம்பர்ய பயிர்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு அமைப்பு!

தற்போது, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்ட விவசாய முறையைப் பரவலாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இப்படி முன்கூட்டியே நம்முடைய விவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினால்தான், வருங்காலங்களில் ஓரளவுக்காவது நாட்டு ரகங்களைக் காப்பாற்ற முடியும். அதிக மகசூலுக்கு ஆசைப்பட்டுப் புதிய புதிய ரகங்களைத் தேடிப் போனால், வராத நோய்களெல்லாம் வந்து சேரும். பஞ்சாப் மாநிலத்தில் பி.டி. பருத்தி சாகுபடி செய்தபோது காய்ப்புழு தாக்குதலால் பருத்தி விவசாயம் என்ன நிலைமைக்கானது என்று அனைவருக்கும் தெரியும். அதனால்தான் நம்முடைய நாட்டு ரகங்களைக் காப்பாற்றி வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றன.  நம்மிடம் நாட்டு ரகங்கள் முழுமையாக அழிந்துவிடவில்லை. அதனால், அவற்றைக் காப்பாற்றி வைக்கச் சிறிய அளவிலாவது நாம் நாட்டு ரகங்களைப் பயிர் செய்து வரவேண்டியது அவசியம்.

நவீன விவசாயத்தின் இன்னொரு தவறான விஷயம் ஒற்றைப் பயிர்ச் சாகுபடி முறை. இம்முறையில் ஒரே வகையான பயிர்களைச் சாகுபடி செய்து பல ரகங்களை இழந்துவிட்டோம். அந்தத் தாவரங்களின் பன்முகத்தன்மை, அதைச் சார்ந்த உயிரினங்கள் என்ன ஆயின என்றே தெரியாமல் போய்விட்டது.   

பாரம்பர்ய பயிர்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு அமைப்பு!

விவசாயத்தின் அடுத்த சவால், பருவநிலை மாற்றம். 10 ஆண்டுகளுக்குமுன்பு இது பற்றிப் பேசியபோது யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. இன்று அதன் பாதிப்பை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பருவநிலை மாற்றத்தால் அதிக மழைப் பொழிவு அல்லது மழையே இல்லாத நிலை ஏற்படுகிறது. நாட்டு ரகங்களால் மட்டுமே இப்படிப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியும். அதனால்தான், நாட்டு ரகங்களை விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்து வருகிறோம்.

பசுமைப்புரட்சியின் விளைவால் மண்ணின் தன்மையே அடியோடு மாறிவிட்டது. இதனால்தான் பிரதமரே மண்வள அட்டையைக் கொடுத்து விவசாயிகளை ‘மண் பரிசோதனை செய்யுங்கள்’ என்று அழைப்பு விடுக்கிறார். மண்வளத்தைக் காப்பதும் சுற்றுச்சூழலின் ஓர் அங்கமாகிவிட்டது.

தற்போது ‘டைவர்சிட்டி கார்டன்’ என்ற பெயரில் தோட்டங்களை உருவாக்கும்படிச் சொல்லி வருகிறோம். இதன்மூலம் தோட்டக்கலைப் பயிர்கள், மரப்பயிர்கள், வேளாண் பயிர்கள் என்று ஒருங்கிணைத்துத் தோட்டத்தை உருவாக்கிக்கொள்ளலாம். இதை ‘வேளாண் காடுகள்’ என்றும் அழைக்கலாம். இந்தக் காடுகள்மூலம் உடனடியாகப் பலன் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் இது லாபம் தரக்கூடும். இந்தியாவின் பெரும்பான்மையான நிலப்பகுதிகளுக்குப் பொருந்திப்போகிற விவசாயம், சிறுதானியச் சாகுபடிதான். வறட்சியோ மழையோ இரண்டையும் சமாளித்து வளரக்கூடிய திறன் சிறுதானியங்களுக்கே உண்டு. இதை எங்கள் கள ஆய்வில் நேரடியாகக் கண்டறிந்திருக்கிறோம்.  சிறுதானியத்தில் கேழ்வரகு முக்கியமானது. ஏதோ தமிழகம், கர்நாடகாவில் மட்டும் விளையக்கூடிய பயிர் அல்ல. அது இந்தியா முழுவதும் விளைகிறது. பெரும்பான்மையான மாநிலங்களுக்கு அது நாட்டு ரகமாகத்தான் இருக்கிறது. மேற்கு வங்காளம், பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் கேழ்வரகு விளைகிறது.  

பாரம்பர்ய பயிர்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு அமைப்பு!

காஷ்மீரில் தோட்டக்கலைப் பயிர்கள் நன்கு விளையும். அங்கேயும், நாட்டு ரக நெல் வகைகளைப் பயிர் செய்யப் பரிந்துரை செய்து வருகிறோம். நாங்கள் பரிந்துரைக்கும் பயிர்களைப் பயிர் செய்யும்போது அவை நன்கு விளைந்தால் மட்டுமே அவற்றைத் தொடர்ந்து பரிந்துரைப்போம். இல்லையென்றால் மாற்றுப் பயிர் குறித்து ஆலோசனை சொல்வோம்” என்ற கிருஷ்ணகுமார் நிறைவாக,

“நாங்கள் விவசாயிகளுக்கு விதைகளை நேரடியாக வழங்குவதில்லை. நாட்டு விதைகளை வைத்திருக்கும் விவசாயிகளைக் கண்டறிந்து, அவர்கள்மூலம் மற்ற விவசாயிகளுக்கு விதைகள் கிடைக்குமாறு செய்கிறோம். சாகுபடிக்கான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். தமிழ்நாட்டில் நெல் முக்கியமான பயிர் என்பதால், பாரம்பர்ய நெல் விதைகளைப் பயிர் செய்யச் சொல்லி வருகிறோம். சுற்றுச்சூழல், பல்லுயிரினப் பெருக்கம் என்று நாம் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து கொண்டு பேசத்தான் முடியும். அவற்றை விவசாயிகளால்தான் சாத்தியப்படுத்த முடியும். அதனால்தான், நேரடியாக விவசாயிகளிடையே பரப்புரை செய்து வருகிறோம்” என்றார்.

தொடர்புக்கு,
Bioversity International India,
G-1, B-Block, NASC Complex,
DPS Marg, Pusa Campus,
New Delhi-110012,
தொலைபேசி: 011 25849000/01/04
செல்போன்: 084472 84646.

‘‘வாழைச் சாகுபடி அழிந்துவிடும்!’’

“வா
ழைச் சாகுபடிக்குப் பெரும்பாலும் திசு வாழை நாற்றுகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் ஜி-9 என்ற ரகமே அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ரகச் சாகுபடி தொடர்ந்து நடந்தால், எதிர்காலத்தில் வாழைச் சாகுபடி கேள்விக்குறியாகிவிடும். அதிகப் பூச்சித் தாக்குதல்களால் வாழைச் சாகுபடி தற்போது சிரமமாக உள்ளது.

இதைக் களைய பல ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கி வருகிறோம். அதேபோலப் பலாச் சாகுபடியிலும் கன்றுத் தேர்வு, பூச்சி மேலாண்மை ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். இது சம்பந்தமாகச் சில திட்டங்களைத் தென் மாநிலங்களில் முன்னெடுக்க உள்ளோம்” என்றார் கிருஷ்ணகுமார்.