Published:Updated:

“விளைச்சலைக் கூட்டும் நுண்ணுயிர் கடவுள்!”

“விளைச்சலைக் கூட்டும் நுண்ணுயிர் கடவுள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“விளைச்சலைக் கூட்டும் நுண்ணுயிர் கடவுள்!”

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017கண்காட்சிஇ.கார்த்திகேயன் - துரை.நாகராஜன்படங்கள்: என்.ஜி.மணிகண்டன், தே.தீட்ஷித், சே.அபினேஷ், கோ.ராகவேந்திரகுமார்

சென்ற இதழ் தொடர்ச்சி...

ரோடு, திருச்சி ஆகிய மாநகரங்களில் 2015-ம் ஆண்டிலிருந்து இயற்கை விவசாயக் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளை நடத்தி வருகிறது ‘பசுமை விகடன்’. இந்த ஆண்டு நான்காவது நிகழ்வாக, மலைக்கோட்டை மாநகர் திருச்சியில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை பிரமாண்டமாக நடைபெற்றது ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2017’. கண்காட்சியின் நான்கு நாள்களிலும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன. கருத்தரங்கில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பேச்சாளர்கள் ஆற்றிய உரைகளின் சாரம்சங்கள் இங்கே...  

“விளைச்சலைக் கூட்டும் நுண்ணுயிர் கடவுள்!”

கண்காட்சி துவக்க விழாவின் மதிய அமர்வில் முதல் நபராக மேடையேறினார் ‘பஞ்சகவ்யா சித்தர்’ டாக்டர் நடராஜன்.

“காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்தில் பன்றிகளுக்குப் பஞ்சகவ்யாவைக் கொடுத்துப் பரிசோதித்துப் பார்த்தோம். அந்தச் சோதனையில் பஞ்சகவ்யா சாப்பிட்ட பன்றிகள், மற்ற பன்றிகளைவிட ஆரோக்கியமாக இருந்ததோடு விரைவிலேயே அதிக எடைக்கும் வந்திருந்தன. பஞ்சகவ்யாவைக் கால்நடைகளுக்கும் பயன்படுத்தலாம் என்று தெரிய வந்த பிறகு கோழிகள், முயல்கள், ஆடுகள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தி நல்ல பயன் அடைந்து வருகிறார்கள் பண்ணையாளர்கள். மூலிகைகள், பழரசம் ஆகியவற்றோடு பஞ்சகவ்யாவைச் சேர்த்துக் குடிக்கும்போது, நாம் சாப்பிடும் பொருள்களின் வீரியத்தை அதிகப்படுத்தி விரைவாக ஆற்றலை வெளிப்படுத்த வைக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பஞ்சகவ்யாவைக் குடிக்கலாம். இதனால், உடலிலுள்ள கழிவுகள் வெளியேறிவிடும்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“விளைச்சலைக் கூட்டும் நுண்ணுயிர் கடவுள்!”

ரசாயன விவசாயத்திலிருந்து இயற்கை விவசாயத்துக்கு மாறும்போது, படிப்படியாகத்தான் விளைச்சல் அதிகரிக்கும். இயற்கை இடுபொருள்களாக இருந்தாலும் அவற்றைச் சரியான விகிதத்தில் அளவாக உபயோகிக்க வேண்டியதும் அவசியம்” என்றவர் விவசாயிகளின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். 

அடுத்ததாக, காந்திக் கிராம கிராமியப் பல்கலைக் கழகத்தில் செயல்பட்டுவரும் கே.வி.கே-யில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் முனைவர் உதயகுமார், ‘நுண்ணுயிர்கள் ஊதியமில்லா ஊழியர்கள்’ என்ற தலைப்பில் பேசினார்.  

“விளைச்சலைக் கூட்டும் நுண்ணுயிர் கடவுள்!”

“நுண்ணுயிரிகளைக் கடவுள் எனச் சொல்லலாம். கடவுளை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை. ஆனால், கடவுள் நமக்கு நல்லது செய்வதாக நினைக்கிறோம். அதேபோல நுண்ணுயிரிகளை நாம் கண்ணால் பார்க்க இயலாது. ஆனால், அவை நமக்கு நன்மை செய்கின்றன. இயற்கை விவசாயம் செய்யும்போது, விளைச்சலைக் கூட்டும் பணியையும் நுண்ணுயிரிகள் அமைதியாகச் செய்துவருகின்றன. இந்த உலகத்தைத் தூய்மைப்படுத்தி, நம்மைப் பாதுகாக்கும் பணியைச் செய்யும் துப்புரவாளர்கள்தான் நுண்ணுயிரிகள். நம் ஒவ்வொருவரின் உடம்பிலுமே 10 ஆயிரம் வகையான நுண்ணுயிரிகள் உள்ளனவாம்.   

“விளைச்சலைக் கூட்டும் நுண்ணுயிர் கடவுள்!”

ரஷ்ய விஞ்ஞானி ஒருவர், ‘பூமி சூரியனைச் சுற்றிவரும் சுற்றுவட்டப் பாதையில் சூரியனுக்கும் பூமிக்குமான இடைவெளி குறைந்துவிட்டால் வெப்பம் தாக்கிப் பூமியிலுள்ள உயிர்கள் அழிய நேரிடும். அதேபோலப் பூமிக்கும் சூரியனுக்குமான இடைவெளி அதிகமானால், குளிரால் உயிர்கள் அழிய நேரிடும். இப்படி நடக்க, பல கோடி ஆண்டுகள்கூட ஆகலாம் என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். ஆனால், புவி வெப்பமயமாதலால், நுண்ணுயிரிகள் அழிந்துவரும் வேகத்தைப் பார்த்தால் உலகம் மிக விரைவில் அழிந்துவிடும்’ என எச்சரித்திருக்கிறார். அது உண்மைதான்.

மருத்துவத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அளவுக்கு இதுவரை மண்ணைப் பற்றிய ஆய்வுகள் நடக்கவில்லை. தற்போதுதான் மண்ணைப் பற்றியும் நுண்ணுயிரிகளைப் பற்றியும் விஞ்ஞானிகள் ஆய்வுசெய்ய ஆரம்பித்துள்ளனர். ரைசோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனஸ் எனச் சிலவகை நுண்ணுயிரிகளைப் பற்றித்தான் நமக்குத் தெரியும். ஆனால், மண்ணில் சுமார் 30 ஆயிரம் நுண்ணியிரி வகைகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.  எதுவுமே தோன்றாமல் இருந்த பூமியில், காற்று தோன்ற அடிப்படைக் காரணமாக இருந்தவை இந்த நுண்ணுயிரிகள்தான்.   

“விளைச்சலைக் கூட்டும் நுண்ணுயிர் கடவுள்!”

காற்றோட்டமில்லாத இடத்தில் மண்ணிலுள்ள நுண்ணியிரிகள் திட, திரவ மற்றும் வாயு  நிலையிலுள்ள ஆக்சிஜனைச் சுவாசித்துக் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடும். இதைப் பயன்படுத்திப் பாசி போன்ற சில பசுந்தாவரங்கள் உற்பத்தியாயின. அவை, சூரிய ஒளியையும் தண்ணீரையும் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை செய்ததால் ஆக்சிஜன் உருவாகியது. சுவாசிக்க ஆக்சிஜன் கிடைத்ததால்தான் பல்வேறு உயிரினங்கள் உருவாயின. அப்படி உருவான விலங்கினத்திலிருந்துதான் மனிதன் உருவானான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆக, மண்ணில் தோன்றிய முதல் உயிரினம் நுண்ணுயிரிகள்தான். புவியின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்குமேல் போனால் நுண்ணுயிரிகள் அழிந்துவிடும்.  

“விளைச்சலைக் கூட்டும் நுண்ணுயிர் கடவுள்!”

நமது நாட்டு மாடுகளின் சாணம், சிறுநீரை வைத்துத் தயாரிக்கும் பஞ்சகவ்யாவில் 21 வகையான நுண்ணுயிரிகள் இருப்பதாகத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. ஒரு சில பாக்டீரியாக்கள் அழியாத பிளாஸ்டிக்கையும் அழிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றன என ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். கடலில் செல்லும் கப்பல்கள் சிதைந்து, அதிலிருந்து பெட்ரோல், தார், எண்ணெய் ஆகியவை கசிந்து படலமாகும்போது அதை, சில வகை பாக்டீரியாக்களை வைத்துத்தான் சுத்தப்படுத்துகிறார்கள்.

வீடுகளிலுள்ள கழிப்பறை, செப்டிக் டாங்க்கில் சேகரமாகும் மலத்தை அழிக்கக்கூடிய பாக்டீரியாக்கள்கூட உள்ளன. மலத்திலிருந்து ‘வைட் பெட்ரோ’லுக்கு இணையான ஓர் எரிபொருளைப் பிரித்தெடுக்கும் வேலையைப் பாக்டீரியாக்கள் செய்கின்றன. கடலின் மிக ஆழத்தில் வால் மாதிரி வளரும் ‘நானோ டெயில்’ என்ற பாக்டீரியாக்களை வைத்து மின்சாரமே தயாரிக்கலாம் எனவும் சொல்கிறார்கள். இத்தகைய நுண்ணுயிரிகள் நம்மைச் சுற்றித்தான் இருக்கின்றன. ஆனால் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தி அவற்றை நாமே அழித்து வருகிறோம்.    

“விளைச்சலைக் கூட்டும் நுண்ணுயிர் கடவுள்!”

மட்கிய குப்பைதான் நுண்ணுயிரிகள் உற்பத்திக்கு ஆதாரம். ரசாயனத்தைத் தவிர்த்தால்தான் நுண்ணுயிரிகள் பெருகும். ரசாயனம் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில், மண்ணில் உள்ள கார, அமிலத்தன்மையை மாற்றாத அளவுக்குக் குறைவாகப் பயன்படுத்தலாம்.

நுண்ணுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் ஒரு கரைசல்தான் இ.எம். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிதான் இதைக் கண்டறிந்தார். ஒரு லிட்டர் இ.எம்-ஐ 20 லிட்டராக மாற்றிப் பயன்படுத்தும்படிச் சொன்னார்கள். நான் அதை 100 லிட்டராக மாற்றிப் பயன்படுத்தச் சொல்லி வருகிறேன்” என்ற உதயகுமார், இ.எம் தயாரிக்கும் விதம் மற்றும் இ.எம்-5 என்ற பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறைகளைச் சொல்லிக் கொடுத்தார். மற்ற பேச்சாளர்களின் உரை வீச்சுகள் அடுத்த இதழில்...

கிடைத்தது விளக்குப்பொறி!   

“விளைச்சலைக் கூட்டும் நுண்ணுயிர் கடவுள்!”

ல்லிகா, பள்ளி ஆசிரியை, திருச்சி: “இது ரொம்ப உபயோகமான கண்காட்சி. இங்கே விவசாயம் சார்ந்த பொருள்கள் அதிகமா இருக்கு. நான் மாடித்தோட்டம் அமைக்கத் தேவையான பொருள்களையெல்லாம் வாங்கிட்டேன். இதுபோகப் பூச்செடிகளும், நாட்டு விதைகளையும் வாங்கியிருக்கிறேன். இங்க இயற்கைத் தேன்கூடக் கிடைச்சது.”  

“விளைச்சலைக் கூட்டும் நுண்ணுயிர் கடவுள்!”

பாலசுப்ரமணியம் - மணிமேகலை தம்பதி, தூத்துக்குடி: “தென்னை மரம் சம்பந்தமா தேடி வந்தோம். நாங்க எதிர்பார்த்த தகவல்களைத் தெரிஞ்சுக்கிட்டோம். திண்டுக்கல் மாவட்டத்தில் கொஞ்சம் நிலம் இருக்கு. அதுல ரொம்ப நாளா விவசாயம் செய்யணும்னு ஆசை. அதுக்காகத்தான் இங்க வந்து கலந்துகிட்டேன். போன தடவை விளக்குப்பொறி தேடி வந்தேன். அப்போ கண்காட்சியில கிடைக்கலை. ஆனா, இப்போ கிடைச்சிருச்சு. இதை வெச்சுதான் தென்னையைத் தாக்குற வண்டுகளைப் பிடிக்கணும். நான் மூணு வருஷமா பசுமை விகடனோட தீவிரமான வாசகர். இந்த நிகழ்ச்சி ரொம்ப உபயோகமா இருக்குது.”   

“விளைச்சலைக் கூட்டும் நுண்ணுயிர் கடவுள்!”

ஜெயக்குமார், மதுரை: “நுண்ணுயிரிகள் பற்றி அதிகம் தெரிஞ்சுக்கிட்டேன். இதுபோக வெட்டிவேர், பண்ணைக் கருவிகளும் வாங்கலாம்னு இருக்கேன். கண்காட்சி, ரொம்ப உபயோகமா இருக்குது. பாரம்பர்ய விதைகள் இருக்கிற அரங்குகளிலேயும், நர்சரிகளிலேயும் கூட்டம் அதிகமா இருக்குது.”