Published:Updated:

“மதிப்புக் கூட்டு லாபத்தை அள்ளு!”

“மதிப்புக் கூட்டு லாபத்தை அள்ளு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“மதிப்புக் கூட்டு லாபத்தை அள்ளு!”

நாட்டு நடப்புதுரை.நாகராஜன் - படங்கள்: தே.அசோக்குமார்

டந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்... ‘இந்திய வர்த்தகத் தொழில் கூட்டமைப்பு’ (Confederation of Indian Industry -CII) சார்பில் ‘ஃபுட் ப்ரோ-2017’ என்ற உணவுத் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குப் ‘பசுமை விகடன்’ ஊடக ஆதரவை வழங்கியிருந்தது.   

“மதிப்புக் கூட்டு லாபத்தை அள்ளு!”

இக்கண்காட்சியைத் தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். தமிழக அரசின் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.    

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“மதிப்புக் கூட்டு லாபத்தை அள்ளு!”

துவக்க விழா நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “இதுபோன்ற வர்த்தகக் கண்காட்சிகளால் பொதுமக்களும் விவசாயிகளும் அதிகமாகப் பயனடைவார்கள். பெரிய நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டால் பொதுமக்களுக்கு உபயோகமாக இருக்கும்” என்றார். ககன்தீப் சிங் பேடி பேசும்போது, “விவசாயி அதிகமாக விளைவித்துச் சந்தையில் விற்பனை செய்கிறார். விளையும் பொருள்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டால் லாபம் கிடைக்கும். விற்பனையாகாமல் மிச்சம் இருந்துவிட்டால், அப்பொருளை விவசாயி நஷ்டமான விலைக்குக் கொடுக்க வேண்டி வரும். ஆனால், ஒவ்வொரு விவசாயியும் அந்தப் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். அதற்காகத்தான் இந்தக் கண்காட்சி நடக்கிறது. மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கு ஒவ்வொன்றும் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாடு அரசு விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க மதிப்புக் கூட்டலில் பலவிதமான திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

கண்காட்சியில் சிறுதானிய உணவுகள்; பாரம்பர்ய உணவுகள்; உணவுப் பாதுகாப்புச் சாதனங்கள்; உணவகங்களுக்கான இயந்திரங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.