Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
News
தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.   

- ஆசிரியர்   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தண்டோரா

இலவசப் பயிற்சிகள்

ஆடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அக்டோபர் 3-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 10-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,  தொலைபேசி: 04142 290249.

பட்டுப்புழு வளர்ப்பு

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் அக்டோபர் 9-ம் தேதி ‘நேரடி நெல் விதைப்புத் தொழில்நுட்பங்கள்’, 10-ம் தேதி ‘மரவள்ளிச் சாகுபடி’, 23-ம் தேதி ‘இயற்கை உரம் மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடு’, 24-ம் தேதி ‘விரால் மீன் வளர்ப்பு’, 26-ம் தேதி ‘பட்டுப்புழு வளர்ப்பு’, 27-ம் தேதி ‘கால்நடை வளர்ப்பில் இனப்பெருக்க மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.  

தண்டோரா

நாட்டுக்கோழி வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் அக்டோபர் 4-ம் தேதி ‘பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பு’, 6-ம் தேதி ‘கால்நடைத் தீவன வளர்ப்பு’, 10-ம் தேதி ‘கால்நடைகளில் நோய் மேலாண்மை’, 12-ம் தேதி ‘இயற்கை விவசாயம்’, 24-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’ 26-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 99448 09246.

இயற்கைச் சான்றிதழ்ப் பயிற்சி

கரூர் மாவட்டம், கடவூர் தாலூகா, சேவாப்பூர், இன்பசேவா சங்கம் நடத்தும் ‘இயற்கை உயிராற்றல் வேளாண்மைச் சான்றிதழ்ப் பயிற்சி’ அக்டோபர் 2-ம் தேதி முதல் துவங்க உள்ளது. இப்பயிற்சியில் இடுபொருள் தயாரிப்பு, கால்நடைப் பராமரிப்பு, நீர் மேலாண்மை, விதை உற்பத்தி உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்படும். 25 வயதிற்குட்பட்ட 12-ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் கட்டணம் கிடையாது.

தொடர்புக்கு, செல்போன்: 96597 17708.

தண்டோரா

கட்டணப் பயிற்சி

கால்நடைத் தீவனம்

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் அக்டோபர் 7-ம் தேதி ‘அசோலா கால்நடைத் தீவனம் தயாரித்தல்’ 28-ம் தேதி ‘அங்கக உரம் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன.  பயிற்சிக் கட்டணம் ரூ 100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296

அறிவிப்பு

‘த
ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.