Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இலவசப் பயிற்சிகள்

சினை மேலாண்மை

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் அக்டோபர் 23-ம் தேதி ‘இயற்கை எரு மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடு’, 26-ம் தேதி ‘பட்டுப்புழு வளர்ப்பு’, 27-ம் தேதி ‘கால்நடை வளர்ப்பில் சினை மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

ஆடு வளர்ப்பு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அக்டோபர் 24-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452 2483903. 

தண்டோரா

இயற்கை உர உற்பத்தி

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் அக்டோபர் 17-ம் தேதி ‘இயற்கை உர உற்பத்தி’, 24, 25-ம் தேதிகளில் ‘தென்னைச் சாகுபடிக்கேற்ற மண் மேலாண்மை முறைகள்’, 25, 26-ம் தேதிகளில் ‘உவர்நீர் மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

கறவை மாடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அக்டோபர் 24-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

சுருள்பாசி வளர்ப்பு


சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் அக்டோபர் 24-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’, 26-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன.  முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 99448-09246.

கட்டணப் பயிற்சிகள்

அங்கக உரம் தயாரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் அக்டோபர் 28-ம் தேதி ‘அங்கக உரம் தயாரித்தல்’ பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

இயற்கை விவசாயப் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அடுத்த ஒடுகம்பட்டியிலுள்ள கொழிஞ்சிப் பண்ணையில் ஒவ்வொரு மாதமும் நான்காவது வாரம், மூன்று நாள்கள் இயற்கை வேளாண்மைப் பயிற்சி நடைபெற்றுவருகிறது.

அந்த வகையில் அக்டோபர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ‘உயிர்ச்சூழல் வேளாண்மைப் பயிற்சி’ நடைபெற உள்ளது. இயற்கை வேளாண்மை முறையில் விதை முதல் அறுவடை வரை பயிற்சி தரப்படும்.

முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. பயிற்சிக் கட்டணம் ரூ450. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: 98424 33187, 0431 331879.

தண்டோரா

தேனீ வளர்ப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் அக்டோபர் 25-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 26-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ100.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.