தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் பண்ணைக்கருவிகளின் பயன்பாடு அதிகரித்துவருகிறது. ஆட்கள் பற்றாக்குறை ஒருபுறம் இருந்தாலும், நாம் நினைத்தபோது பணிகளைச் செய்துகொள்ளக் கருவிகள் துணைபுரிகின்றன. இதைப் புரிந்துகொண்டு அரசும் கருவிகளுக்கான மானியத்தை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவருகிறது. நடப்பாண்டில் (2017-18) விவசாயக் கருவிகள் மற்றும் உபகரணங்களுக்கான மானிய விவரங்களை வேளாண் பொறியியல் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்துச் சென்னை, நந்தனத்தில் உள்ள வேளாண் பொறியியல்துறையின் தலைமைப் பொறியாளர் வி. தெய்வேந்திரன் அளித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ் விவசாயத்தில் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்திக் குறைந்த நேரத்தில், குறைந்த மனித உழைப்பில் அதிக வேலைகளைச் செய்துகொள்ளமுடியும். இதற்காக, வேளாண் பொறியியல்துறை மானியத் தொகையில் கருவிகளை வாங்கவும் அவற்றை வாங்க முடியாதவர்கள் வாடகைக்கு எடுத்து விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உழவு முதல் அறுவடை வரை பயன்படும் அனைத்துக் கருவிகளுக்கும் மானியத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல், காய்கறிகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களையும் விதைப்பதற்கு அடிப்படையானது உழவு. இந்த உழவில் விதவிதமான கலப்பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகைவகையான கலப்பைகளுக்கு வரிசைகட்டி நிற்கின்றன மானியங்கள். இதேபோல் நெல், காய்கறிச் செடிகளில் களையெடுக்கும் கருவிகளும் பூச்சிக்கொல்லித் தெளிக்கும் கருவிகளும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

இதற்காகத் தெளிப்பான்களை (ஸ்பிரேயர்) வாங்க மானியம் வழங்கப்படுகிறது. நெல் நடவு இயந்திரமயமாக்கப்பட்டுவரும் சூழ்நிலையில் நெல் நடவு இயந்திரத்துக்கான மானியமும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நெல் அறுவடையைத் தொடர்ந்து வயலில் விழும் வைக்கோலைக் கட்டுக் கட்டி வைக்க, வைக்கோல் கட்டும் கருவிகளும் விவசாயிகளிடையே வரவேற்பு பெற்றுள்ளன. அதற்கும் நடப்பாண்டில் மானியம் வழங்கப்பட்டுவருகிறது.

விவசாயத்தின் உற்ற தோழனாக வலம்வரும் இந்தக் கருவிகளை மானியத்தொகைபோகக் குறைந்த விலையிலேயே வாங்கிக்கொள்ளலாம். மாநில, மத்திய அரசுகளின் நிதியில் இந்த மானியத்தொகை வழங்கப்படுகிறது.

வாடகை கருவிகள் மையம் அமைக்க 40% மானியம்

தொழில் தொடங்க ஆர்வமுள்ளோருக்கு வட்டார அளவில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளைக்கொண்ட வாடகை மையங்கள் அமைக்க 40 சதவிகிதம் (அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய்) மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொழில் முனைவோர், விவசாயிகள், விவசாயக் குழுக்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

இதேபோன்று கிராம அளவில் வாடகை மையங்களை அமைக்கும் திட்டத்தில் விவசாயக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உள்ளிட்ட கிராமம் சார்ந்து செயல்பட்டுவரும் அமைப்புகள், இந்த வாடகை மையங்களை அமைக்கலாம். ஒவ்வொரு குழுவிலும் குறைந்தபட்சம் 8 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். பத்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த மையங்களுக்கு அதிகபட்சம் 8 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

சூரியசக்தி பம்ப்செட்டுக்கு 90% மானியம்

ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளிக் கிணறுகள் ஆகியவற்றில் சூரியசக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப்செட்களை அமைக்க 90 சதவிகித மானியம் தரப்படுகிறது. இது விவசாயிகளின் நிலங்களிலேயே வந்து அமைத்துத் தரப்படும். ஆர்வமுடைய விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு 10 சதவிகிதத் தொகையைச் செலுத்தியவுடன், ஒப்புதல் அளிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பம்ப்செட் அமைக்கப்படும். ஆனால், இத்திட்டத்தில் பயன்பெற இரண்டு முக்கியமான நிபந்தனை உண்டு. அதற்கான கடிதம் அளித்தால் மட்டுமே பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விவசாயத்துக்கான இலவச மின் இணைப்பைப் பெற்றிருந்தால், அதைத் துண்டிக்க வேண்டும். அதேபோல இலவச மின் இணைப்பிற்கான விண்ணப்பம் அளித்திருந்தால், அதைத் திரும்பப்பெற வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும்.

அறுவடைக்குப்பின் செய்நேர்த்தித் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக்கான இயந்திரங்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 60 சதவிகித மானியத் தொகை வழங்கப்படும்.

விவசாயிகள், சுயஉதவிக்குழுக்கள், விவசாய உபயோகிப்பாளர் குழுக்கள், விவசாயக் கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் ஆகிய இதர பயனாளிகளுக்கு 50 சதவிகித மானியம் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். மானியத்தைப்பெற சம்பந்தப்பட்ட மாவட்டச் செயற்பொறியாளர் மற்றும் உதவிச் செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தை அணுகவும். இல்லையேல் சென்னையிலுள்ள தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம்.

தொடர்புக்கு, வேளாண்மைப் பொறியியல்துறை, எண் 487, அண்ணா சாலை, நந்தனம், சென்னை-600 035.

இ.மெயில்: aedcewrm@gmail.com

தொலைபேசி: 044 24352686, 24352622, 24351492

மானியத்தைப் பெறுவதற்கான வழிமுறைகள்!

சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் கருவிகள் பற்றிக் குறிப்பிட்டு, அந்தந்த மாவட்டத்திலுள்ள உதவிச் செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தில் விண்ணப்பத்தை வழங்க வேண்டும்.

வேளாண் பொறியியல்துறை அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், வேளாண் கருவிகளின் பட்டியல் மற்றும் மானிய விவரங்களை விவசாயிகளுக்கு வழங்குவார்கள். தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் கருவிகளைத் தேர்வு செய்து, துறையினர் வழங்கும் விண்ணப்பத்தில் பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும். அவை முன்னுரிமைப் பதிவேட்டில் பதியப்படும். நிதி ஒதுக்கீடு பெறப்பட்டவுடன் விண்ணப்ப முன்னுரிமைப் பதிவேட்டின்படி விவசாயிகளுக்குக் கடிதம் அனுப்பப்படும்.

கடிதம்பெற்ற 15 நாள்களுக்குள் மொத்தத் தொகைக்கான வரைவோலையைச் சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனத்தின் பெயரில் எடுத்து, உதவிச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய கால அவகாசத்தில் வங்கி வரைவோலை எடுக்காதபட்சத்தில் முன்னுரிமை அடிப்படையில் அடுத்த விவசாயிக்குச் செல்லும். வழங்கல் ஆணைபெற்ற 15 நாள்களுக்குள் விவசாயிகளின் விளைநிலத்தில் சம்பந்தப்பட்ட துறைப் பொறியாளர்களின் முன்னிலையில் முகவர்களால் கருவிகள் விநியோகம் செய்யப்படும்.

வேளாண்மை இயந்திரமாக்குதல் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கருவிகள் வாங்கப்பட்ட தேதியிலிருந்து 4 ஆண்டுகள் முடியும்வரை விற்காமல் இருக்க வேண்டும். அருகிலுள்ள விவசாயிகளுக்கு வாடகைக்கு இந்தக் கருவியினைப் பயன்படுத்திக்கொள்ள வழங்கலாம்.

கருவிகள் வழங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் விவசாயிகளிடமிருந்து திருப்திகரமான திறனறிக்கை பெற்ற பின்னரே, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மானியத்தொகை செலுத்தப்படும்.

வாடகை மையங்கள்

வாடகைக்குக் கருவிகள் வழங்கும் மையத்தை அமைப்பதற்கும் வேளாண் கருவிகளுக்கான மானியம் பெறும் இம்முறையையே பின்பற்றலாம். இதனடிப்படையில் விண்ணப்பித்தால் முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

குறிப்பு:

கருவிகளின் விலையைப் பொறுத்து ஜி.எஸ்.டி இருக்கும். ஜி.எஸ்.டி மற்றும் போக்குவரத்துக்கான தொகையைப் பயனாளிகளே கட்டிக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தில் இணைக்க வேண்டியவை

1. பாஸ்போர்ட் புகைப்படங்கள்-2

2. ஆதார் அட்டையின் நகல்

3. சிட்டா, அடங்கல்

4. சிறு குறு விவசாயிகளுக்கான சான்று

5. சாதிச் சான்றிதழ் நகல்

6. டிராக்டரால் இணைத்து இயக்கக்கூடிய கருவியாக இருப்பின், டிராக்டரின் பதிவுச் சான்று நகல்

7. வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல்.