இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். நாங்கள்தான் உலகை ஆட்டிவைத்துக்கொண்டிருக்கிறோம் என எண்ணிக்கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளும்தாம். நுண்ணுயிரிகள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு.

உண்மையில் அப்படியில்லை. தன்னுடைய அனைத்துப் படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது இயற்கை. ஒரு வாசலை அடைத்தால், இன்னொரு வாசலைத் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, சில நன்மைசெய்யும் நுண்ணுயிரிகளையும் படைத்துள்ளது. அப்படிப்பட்ட நுண்ணுயிரிகளைப் பற்றிய புரிதலே இந்தத் தொடர்.

நம் ஒவ்வொருவரின் உடலிலும் ஆயிரக்கணக்கான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. மண்ணிலும் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. பல்வேறு ஆய்வுகள்மூலம், உலகில் சுமார் 30 ஆயிரம் வகை நுண்ணுயிரிகளைக் கண்டுபிடித்துள்ளனர். அப்படிப்பட்ட நுண்ணுயிரிகளின் தொகுப்புதான் இ.எம் (Effective Micro Organisms) திரவம். விவசாயப் பயன்பாட்டுக்கு நிகராகச் சுற்றுச்சூழலிலும் இ.எம் திரவம் அதிகளவில் பயன்படுகிறது. பெரிய உணவு விடுதிகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் இ.எம் திரவத்தைப் பயன்படுத்திச் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும். துர்நாற்றம் வீசும் இடங்கள், பொதுக்கழிப்பிடங்கள், சாக்கடை ஆகியவற்றில் இ.எம் திரவத்தைப் பயன்படுத்தும்போது துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகளின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.

ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் விரிவுபடுத்தப்பட்ட இ.எம் திரவம் என்று கலந்து பயன்படுத்தினாலே போதுமானது.

மாசடைந்த நீர்நிலைகளில் இ.எம் திரவத்தைத் தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம், மாசைக் குறைக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது வீடு, சமையலறை, கழிப்பறைகளைச் சுத்தம் செய்யக் ‘கிருமிநாசினி’ என்ற பெயரில் சில ரசாயனங்களைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.

அதைத் தவிர்த்து, இ.எம் திரவத்தைப் பயன்படுத்திச் சுத்தம் செய்தால் ரசாயனப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க முடியும். ஒரு லிட்டர் தாய் திரவத்தைக்கொண்டு 100 லிட்டர் இ.எம் திரவம் தயாரிக்க அதிகபட்சமாக 500 ரூபாய்தான் செலவாகும். அந்த வகையில் ஒரு லிட்டர் விரிவுபடுத்தப்பட்ட இ.எம் திரவம் தயாரிக்க, ஒரு ரூபாய்தான் செலவாகும். இது கடைகளில் விற்பனை செய்யப்படும் ரசாயனக் கிருமி நாசினிகளைவிடப் பல மடங்கு விலைக் குறைவு. வீடு கழுவுவதற்கும் சமையலறைத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்கும் பத்து லிட்டர் தண்ணீரில் 50 மில்லி விரிவுபடுத்தப் பட்ட இ.எம் திரவத்தைக் கலந்துகொண்டாலே போதுமானது.

கழிவறையைச் சுத்தம்செய்யப் பத்து லிட்டர் தண்ணீரில் 100 மில்லி விரிவுபடுத்தப்பட்ட இ.எம் திரவத்தைக் கலந்துகொள்ள வேண்டும். ஒரு வீட்டுக்கு அதிகபட்சமாக 10 லிட்டர் (ஒரு மாதத்துக்கு) விரிவுபடுத்தப்பட்ட இ.எம் திரவமே போதுமானது.

இ.எம் திரவத்தைக்கொண்டு கொசுக் களையும் கட்டுப்படுத்த முடியும். தற்போது ஊரெங்கும் காய்ச்சல் அதிகமாகப் பரவிவருகிறது. எனவே நீர்நிலைகளில் இ.எம் திரவத்தைப் பயன்படுத்திக் கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்தலாம். இ.எம் திரவம் கொசுக்களைக் கொல்லாது.

ஆனால், கொசுக்களின் முட்டைகளைச் செயலிழக்க வைத்துவிடும். 500 லிட்டர் விரிவுபடுத்தப்பட்ட இ.எம் திரவம், ஒரு சின்னக் கிராமத்துக்குச் சரியாக இருக்கும். தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இ.எம் திரவத்தைப் பயன்படுத்திக் கிராமங்களைச் சுத்தப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுக்கலாம்.

விரிவுபடுத்தப்பட்ட இ.எம் திரவத்தைப் பயன்படுத்திவரும் முன்னோடி விவசாயிகளின் அனுபவங்கள் அடுத்த இதழில்...

-பரவும்

கேள்வியும்... பதிலும்!

“மட்கும் பொருள்களை விரைவாக மட்க வைக்கும் திறன் வாய்ந்தது இ.எம் என்கிறார்கள். தென்னை மரத்தின் மட்டைகளை அப்படியே குழியில் போட்டு, இ.எம் திரவத்தை ஊற்றினால் மட்குமா?”

“மட்கக்கூடிய பொருள்களை விரைவாக மட்க வைக்கும் திறன் இ.எம் திரவத்துக்கு உண்டு. ஆனால், தென்னைமட்டைப் போன்ற பொருள்களைச் சிறிது சிறிதாக வெட்டிப் போட்டு, அதில் இ.எம் திரவத்தைத் தெளித்தால் விரைவாக மட்கும். பொதுவாக, மட்கக்கூடிய பொருள்கள் எதுவானாலும், அதை இ.எம் கரைசலில் நன்றாக நனைத்து, நிலத்தில் போட்டால் வழக்கத்தைவிட விரைவாக மட்கிவிடும்.”

“தாய் திரவத்திலிருந்து தயாரித்த இ.எம் திரவத்தைப் பயன்படுத்தி மீண்டும் புதிதாக இ.எம் திரவம் தயாரிக்கலாமா?”

“அப்படித் தயாரித்தால் முழுமையான பலன் கிடைக்காது. அதற்காகத்தான் ஒரு லிட்டர் தாய் திரவத்திலிருந்து 100 லிட்டர் விரிவுபடுத்தப்பட்ட இ.எம் திரவம் தயாரிக்கச் சொல்கிறேன்.

சிலர் ‘ஒரு லிட்டர் தாய்த் திரவத்திலிருந்து 20 லிட்டர் இ.எம் திரவம் தயாரிக்கிறார்கள். அப்படித் தயாரித்த இ.எம் கரைசலிலிருந்து மீண்டும் இருபது லிட்டர் தயாரிக்கலாம். இப்படி மூன்று முறை செய்யலாம்’ என்கிறார்கள். உண்மையில் தாய்த் திரவத்தில் நுண்ணுயிரிகள் உறக்க நிலையில் இருக்கும். அதை நாம் பயன்படுத்த தொடங்கியவுடனே விழிப்பு நிலைக்கு வந்துவிடும். அதனால்தான் விரிவுபடுத்தப்பட்ட இ.எம் திரவத்தைத் தாய்த் திரவமாகப் பயன்படுத்தக்கூடாது என்று நான் சொல்லி வருகிறேன்”