அனைவருக்கும் பசுமை வணக்கம்!

கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏறத்தாழ 50 விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். வழக்கமாகக் கடன்தொல்லை, வறட்சி, விளைச்சல் பொய்த்தது என்று அதிர்ச்சிக் காரணங்கள்தான் வெளிவரும். ஆனால், இம்முறை முன்வைக்கப்படும் காரணம், குலைநடுங்க வைக்கிறது. ஆம், பயிர்களுக்குப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி விஷமே அந்த விவசாயிகளைக் காவு வாங்கியிருக்கிறது.

குறிப்பாக, விவசாயத் தற்கொலைகள் அதிகளவில் இருந்துவரும் யவத்மால் மாவட்டத்தில்தான் இந்தக் கொடூரச் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இதற்கான காரணத்தைப் பூதக்கண்ணாடி வைத்தெல்லாம் தேட வேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகள் சொல்லும் தகவல்களே நூறு சதவிகித உண்மைச் சாட்சியங்களாக நம்முன் நிற்கின்றன.

“மரபணு மாற்றப்பட்ட பி.டி பருத்தி விதைகளைச் சாகுபடி செய்தால் காய்ப்புழுக்கள் வராது என்றார்கள். ஆனால், வழக்கத்தைவிட அதிகமாகக் காய்ப்புழுக்கள் தாக்கின. அதைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகளைத் தெளித்தோம். ஆனாலும், புழுக்கள் கட்டுப்படவில்லை. இதனால், கூடுதலாகப் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்தோம். புழுக்கள் மரணமடைவதற்குப் பதில், பூச்சிக்கொல்லிகளைத் தெளித்த விவசாயிகள்தான் மரணத்தைத் தழுவிவருகிறார்கள்” எனக் கதறுகின்றனர் விவசாயிகள்.

இதுபோன்ற சம்பவங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே நடப்பதாகக் கருத வேண்டாம். நாடு முழுவதும் பூச்சிக்கொல்லி விஷத்தால் பல்வேறு பாதிப்புகள் இருந்துவருகின்றன. ஆனால், அந்தப் பாதிப்புகளுக்குக் காரணம், பூச்சிக்கொல்லி விஷம்தான் என்ற தகவல் வெளியாவதில்லை. அரசுகளும் ஆய்வுசெய்து அறிவிப்பதில்லை.

இயற்கையின் உன்னதத்தை உணர்ந்து, கடுமையான பூச்சிக்கொல்லி விஷங்களைத் தடைசெய்ய மத்திய, மாநில அரசுகள் இனியாவது முன்வர வேண்டும். இயற்கை வேளாண்மைப் பாதையில் பயணிப்பது ஒன்றுதான் இதற்கான நிரந்தரத் தீர்வாக இருக்கமுடியும் என்பதை எல்லோருக்கும் உணர்த்த வேண்டும்!

-ஆசிரியர்