Published:Updated:

தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும் நன்மை செய்யும் பூச்சிகள்!

தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும்  நன்மை செய்யும் பூச்சிகள்!
பிரீமியம் ஸ்டோரி
தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும் நன்மை செய்யும் பூச்சிகள்!

கண்காட்சிஜி.பழனிச்சாமி, படங்கள்: என்.ஜி. மணிகண்டன், ம.அரவிந்த்

தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும் நன்மை செய்யும் பூச்சிகள்!

கண்காட்சிஜி.பழனிச்சாமி, படங்கள்: என்.ஜி. மணிகண்டன், ம.அரவிந்த்

Published:Updated:
தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும்  நன்மை செய்யும் பூச்சிகள்!
பிரீமியம் ஸ்டோரி
தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும் நன்மை செய்யும் பூச்சிகள்!

சென்ற இதழ் தொடர்ச்சி...

ஈரோடு, திருச்சி ஆகிய மாநகரங்களில் 2015-ம் ஆண்டிலிருந்து இயற்கை விவசாயக் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளை நடத்திவருகிறது ‘பசுமை விகடன்’. இந்த ஆண்டு நான்காவது நிகழ்வாக, மலைக்கோட்டை மாநகர் திருச்சியில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை பிரமாண்டமாக நடைபெற்றது ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2017’. கண்காட்சியின் நான்கு நாள்களிலும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன. இக்கருத்தரங்கில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பேச்சாளர்கள் ஆற்றிய உரைகளின் சாராம்சங்கள் இங்கே...

தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும்  நன்மை செய்யும் பூச்சிகள்!
தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும்  நன்மை செய்யும் பூச்சிகள்!

கண்காட்சியின் மூன்றாம் நாளன்று காலை அமர்வில் முதல் பேச்சாளராக மேடையேறிய ‘நீர் மேலாண்மை வல்லுநர்’ பிரிட்டோராஜ், ‘விவசாய நிலங்களில் நீர் மேலாண்மை’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

“பசுமை விகடன் போன்ற பத்திரிகைகள், நீர் மேலாண்மை குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருவதால், விவசாயிகள் மத்தியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு விவசாயிகளும் நீர் மேலாண்மையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும்  நன்மை செய்யும் பூச்சிகள்!

தூர்ந்துபோன ஆழ்துளைக்கிணறுகள் செறிவூட்டம் செய்யப்படுகின்றன. நிலத்தில் விழும் ஒவ்வொரு மழைத்துளியையும் சிந்தாமல் சிதறாமல் சேகரிக்கத் தொடங்கிவிட்டனர் பல விவசாயிகள். சமீபத்தில் பெய்த மழையில் பல ஊர்களில் பண்ணைக்குட்டைகள் நிரம்பியுள்ளன. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளும் நிரம்பி வருகின்றன. தமிழ்நாடு வேளாண்மைப் பொறியியல்துறை, நீர் மேலாண்மை குறித்த பணிகளைக் களத்தில் நின்று துரிதமாகச் செயல்படுத்திவருகிறது.

பல விவசாயிகள் தேவைக்கு அதிகமாகவே பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள். அப்படிச் செய்ய வேண்டியதில்லை. மா, கொய்யா, சப்போட்டா... போன்ற பழப்பயிர்களில் ஆணிவேர், நிலத்துக்குக்கீழ் 5 அடி ஆழம்வரை நேராகப் போகும். பக்க வேர்கள், மரத்தின் உயரத்தில் பாதி அளவுக்கு இரண்டு புறமும் நீண்டு போகும். மரத்தின் கீழ்ப்பகுதியில் வரப்பு அமைத்துத் தண்ணீரைத் தேக்கி நிறுத்திப் பாசனம் செய்தால் தண்ணீர் அதிகளவு விரயமாகும். பக்க வேர்களுக்கு, அருகில் மட்டும் தேவையான அளவு தண்ணீரைக் கொடுத்தால் பெருமளவு தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.

ஒவ்வொரு விவசாய நிலத்திலும் பண்ணைக்குட்டை இருக்க வேண்டும். நிலத்தின் பள்ளமான பகுதியில் 22 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 1.2 மீட்டர் ஆழம் என்ற அளவில் பண்ணைக்குட்டை இருந்தால், ஐந்தரை லட்சம் லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும்” என்றார் பிரிட்டோராஜ்.

தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும்  நன்மை செய்யும் பூச்சிகள்!

அவரைத் தொடர்ந்து ‘சிறுதானியங்களின் மகத்துவம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார், ‘நாமக்கல்’ ராஜுமுருகன். “பசுமைப்புரட்சிக்கு முன்பாக மானாவாரி விவசாயம்தான் நம்மிடம் பிரதானமாக இருந்தது. கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி... போன்ற தானியங்கள் அதிகமாக இருந்தன. அதைத்தான் நம் முன்னோர்கள் சாப்பிட்டார்கள். அந்த உணவே அவர்களுக்கு மருந்தாக இருந்தது. அதனால்தான் அவர்கள் திடகாத்திரமான உடம்புடன் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆண், பெண் இருபாலருக்குமே மலடு அரிதாகத்தான் இருந்தது. பெண் குழந்தைகள் சரியான பருவத்தில் பூப்பெய்தனர். கர்ப்பிணிகளுக்கு எளிதாகச் சுகப்பிரசவம் நடந்தது. அந்தக்காலத்தில் நம் முன்னோர் வாழ்ந்த சுகமான வாழ்க்கை... சிறுதானியங்கள் மற்றும் கீரைகள் அளித்த கொடைதான்.

தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும்  நன்மை செய்யும் பூச்சிகள்!

ரசாயனம் இட்டுச் சாகுபடி செய்யும் பணப்பயிர் விவசாயம் பரவ ஆரம்பித்தபிறகு, மானாவாரி விவசாயம் அருகிப்போனது. உணவுக் கலாசாரம் மாறியதால், உடல் உபாதைகள் பெருகின. பூப்படைவதில் பிரச்னை, மாதவிடாயில் பிரச்னை, கருத்தரிப்பதில் பிரச்னை... என ஏகப்பட்ட பிரச்னைகள் வந்ததால், வீதிக்கு வீதி மருந்துக் கடைகளும் மருத்துவமனைகளும் பெருகியுள்ளன.

நம்மாழ்வார் ஐயா மேற்கொண்ட பிரசாரம், ‘பசுமை விகடன்’ போன்ற ஊடகங்கள் ஏற்படுத்திய விழிப்பு உணர்வுமூலம் மீண்டும் சிறுதானிய உணவைத் தேட ஆரம்பித்திருக்கிறோம். சிறுதானிய உணவுத் திருவிழா, எங்கு நடைபெற்றாலும் பலத்த வரவேற்பு கிடைக்கிறது. பெரிய பெரிய பல்பொருள் விற்பனை அங்காடிகளில்கூடச் சிறுதானியங்களின் விற்பனை களை கட்டுகிறது. அதனால், என்னமாதிரி விவசாயம் செய்தாலும், சிறிதளவாவது நிலம் ஒதுக்கி அதில் சிறுதானியங்களை பயிரிட வேண்டும்” என்றார் ராஜுமுருகன்.

மூன்றாம் நாளின் மதிய அமர்வில், ‘பூச்சிகளும் பருவநிலை மாற்றமும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய வேளாண் அலுவலர் நீ.செல்வம், “பயிரைத்தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், நன்மை செய்யும் பூச்சிகள் நமது வயலில் இருந்தாலே போதும். மேலும், வயலைச் சுற்றியும் ஊடுபயிராகத் தட்டைப்பயறு விதைத்தால், தட்டைச் செடிகளில் அசுவினிப்பூச்சிகள் போய் உட்கார்ந்துகொள்ளும்.
அப்படி உட்கார்ந்திருக்கும் அசுவினி பூச்சிகளைச் சாப்பிடவரும் பூச்சிகள், தட்டைச்செடியில் குடிபுகுந்து விடுவதால், பிரதானப்பயிர் பங்கமில்லாமல் வளரும். அதேபோல், வயலைச் சுற்றிலும் 8 அடி இடைவெளியில் ஆமணக்கு விதைகளை நடவுசெய்து... அவ்வப்போது ஆமணக்கு இலைகளைக் கசக்கிவிட்டால், அந்த வாடை வயலுக்குள் நுழையும் பூச்சிகளை விரட்டி அடிக்கும்.

தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும்  நன்மை செய்யும் பூச்சிகள்!

பருத்தி வயலில் இருக்கும் 200 வகைப் பூச்சிகளில் 40 பூச்சிகள்தான் பயிருக்கு எதிரிகள். மற்ற பூச்சிகள் எல்லாம் எதிரிப்பூச்சிகளைச் சாப்பிட வந்துள்ள நன்மைசெய்யும் பூச்சிகள். பூச்சிக்கொல்லி தெளித்து நாம் நன்மைசெய்யும் 160 வகைப் பூச்சிகளையும் சேர்த்தே அழித்துவிடுகிறோம். நன்மைசெய்யும் பூச்சிகளில் முக்கியமானது சிலந்தி. ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 20 ஆயிரம் சிலந்திகள் இருக்கும். ஆனால், நாம் தெளிக்கும் பூச்சிக்கொல்லி சிலந்தியையும் விட்டுவைப்பதில்லை. தீமைசெய்யும் பூச்சிகளை அழிக்கும் நன்மைசெய்யும் பூச்சிகள், நமது வயலில் இருக்க வேண்டும் என்றால் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்க்க வேண்டும்.

வேம்பு, புங்கன், நொச்சி, எருக்கு, கடல்பாளை போன்ற காட்டுச்செடிகளின் இலைகளை இடித்துத் தாவரப்பூச்சி விரட்டிகளைத் தயாரிக்க முடியும். வேப்பங்கொட்டையில் மட்டும் 18 வகையான பூச்சிக்கொல்லிகளின் குணங்கள் உள்ளன. வேப்பங்கொட்டையுடன் வெள்ளைப்பூண்டு மற்றும் கட்டைப் புகையிலை ஆகியவற்றைச் சேர்த்துக் கரைசல் தயாரித்துத் தெளித்து, சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். எதற்கும் அடங்காத பூச்சிகளைக் கட்டுப்படுத்த பச்சை மிளகாய்க் கரைசலைப் பயன்படுத்தலாம்” என்றார்.

மூன்றாம்நாள் கருத்தரங்கை நிறைவு செய்தார் திருவள்ளூரைச் சேர்ந்த இளம் இயற்கை விவசாயி பார்த்தசாரதி. ‘இயற்கை விவசாய விளைபொருள்களும் சந்தைப்படுத்தலும்’ என்ற தலைப்பில் பேசிய அவர், “நம்ம கிராமத்திலேயே காய்கறிகளை உற்பத்தி செய்தாலும், அது சந்தைக்கு போய்தான் திரும்பவும் நம் கைகளுக்குக் கிடைக்கிறது. அப்படி வாங்கும்போது விலை அதிகமாக இருக்கிறது. ஏன், நம்மைச் சுத்தி இருப்பவர்களுக்கே விற்கக் கூடாது. அப்படி விற்பனை செய்தால், விளைவிப்பவருக்கும் வாங்குபவருக்கும் நியாயமான விலை கிடைக்கும்.

விவசாயிகள் குழுவாகச் சேர்ந்து அங்காடிகள் அமைத்து விற்பனைசெய்தால் தங்களின் விளைபொருள்களை எந்தவித தடங்கலும் இன்றி சந்தைப்படுத்த முடியும். புதுக்கோட்டை, ஆரணி, சென்னை என்று பல இடங்களில் இயற்கை விவசாயிகள் கூட்டாக இணைந்து அங்காடிகள் நடத்தி லாபமடைந்து வருகின்றனர். இதுபோன்று பல கூட்டுறவு அங்காடிகள் பெருக வேண்டும். இதற்கு விவசாயிகளிடையே ஒற்றுமை அவசியம். உள்ளூர் சந்தையை மனதில் வைத்து இயங்கினால் விளைபொருள்களை எளிதாக விற்பனை செய்யலாம்” என்றவர் இயற்கை விவசாயச் சான்றிதழ் பெரும் வழிமுறை, விவசாயிகளுக்கு இடையேயான பண்டமாற்றுமுறை, விற்பனையைப் பெருக்கச் செய்ய வேண்டிய களப்பணிகள்... ஆகியவை குறித்து விரிவாகப் பேசினார்.

மற்ற கருத்துரையாளர்களின் உரை வீச்சுகள் அடுத்த இதழில்...