Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அறிவிப்பு - பசுமைக் குழு

தண்டோரா

அறிவிப்பு - பசுமைக் குழு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

பால் பொருள்கள் தயாரித்தல்

சென்னையை அடுத்த அலமாதி, கோடுவெளியில் உள்ள தமிழ்நாடு உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 5, 19 ஆகிய தேதிகளில் ‘மதிப்பூட்டிய பால் பொருள்கள் தயாரித்தல்’ டிசம்பர் 7-ம் தேதி ‘தானியங்கி பால் சேகரிப்பு நிலையத்தின் செயல்முறை மற்றும் பராமரிப்பு’, 8-ம் தேதி ‘உணவு மற்றும் பால் பதனிடுவதற்கான சிறுகருவிகளை உருவாக்குதல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94451 99034.

வெங்காயச் சாகுபடி

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 13-ம் தேதி ‘வேளாண் காடுகளுடன் ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்பு’,  14-ம் தேதி ‘சின்ன வெங்காயம் சாகுபடித் தொழில்நுட்பங்கள்’, 16-ம் தேதி ‘கால்நடை வளர்ப்பில் சிகிச்சை முறைகள்’,

20-ம் தேதி ‘தானியங்களில் பூச்சி மேலாண்மை’, 21-ம் தேதி ‘வெண்பன்றி வளர்ப்பு’, 27-ம் தேதி ‘விரால் மீன் வளர்ப்பு’, 28-ம் தேதி ‘மண்வள மேம்பாடு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345

கன்று வளர்ப்பு

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 14-ம் தேதி ‘கன்று வளர்ப்பு’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427 2410408.

ஆடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 14-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’ 21-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 28-ம் தேதி ‘கால்நடைத் தீவன மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249

சுருள்பாசி உரை!

சென்னை, மயிலாப்பூரில் உள்ள பாரதி வித்யாபவன் சிற்றரங்கத்தில் நவம்பர் 24-ம் தேதி மாலை 6.30 மணிக்கு ‘தோள்கள் நமது தொழிற்சாலை’ எனும் தலைப்பில் சுருள்பாசி  தொழில் வாய்ப்புகள் குறித்த  கருத்துரை நிகழ்ச்சி  நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 98411 81345.

முயல் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார் பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் நவம்பர் 14-ம் தேதி ‘முயல் வளர்ப்பு’, 16-ம் தேதி ‘சிப்பிக் காளான் வளர்ப்பு’, 22, 23-ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணை அமைத்தல்’, 28-ம் தேதி ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716

நாட்டுக்கோழி வளர்ப்பு!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், நவம்பர் 22-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 23-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு:
தொலைபேசி: 0452 2483903.


கோழி வளர்ப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நவம்பர் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை, ‘கோழி வளர்ப்பில் தொழில்முனைவோர் பயிற்சி’ நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04372 234012, 04372 234016.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கட்டணப் பயிற்சிகள்

இயற்கை வேளாண்மைப் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர், ஒடுகம்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிப் பண்ணையில் நவம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் ‘உயிர்ச்சூழல் வேளாண்மைப் பயிற்சி’ நடைபெறவுள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்கவுள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. பயிற்சிக் கட்டணம் ரூ.450. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 98424 33187, 0431 331879.

மதிப்புக்கூட்டல்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 23-ம் தேதி ‘பயிர்களில் பூச்சி மேலாண்மை’, 24-ம் தேதி ‘காளானில் மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பம்’, 27-ம் தேதி ‘கோழி வளர்ப்பு’, 28-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம். கட்டணம் ரூ.100.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

பூச்சிவிரட்டி தயாரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் நவம்பர் 25-ம் தேதி ‘வளர்ச்சி ஊக்கி மற்றும் இயற்கைப் பூச்சிவிரட்டி தயாரிப்பு’ பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.