Published:Updated:

நவம்பர் 20-ம் தேதி, நாடாளுமன்றம் நடுங்கும்! - அய்யாக்கண்ணு ஆவேசம்!

நவம்பர் 20-ம் தேதி, நாடாளுமன்றம் நடுங்கும்! - அய்யாக்கண்ணு ஆவேசம்!
பிரீமியம் ஸ்டோரி
நவம்பர் 20-ம் தேதி, நாடாளுமன்றம் நடுங்கும்! - அய்யாக்கண்ணு ஆவேசம்!

போராட்டம்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: தே.தீக்‌ஷித்

நவம்பர் 20-ம் தேதி, நாடாளுமன்றம் நடுங்கும்! - அய்யாக்கண்ணு ஆவேசம்!

போராட்டம்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: தே.தீக்‌ஷித்

Published:Updated:
நவம்பர் 20-ம் தேதி, நாடாளுமன்றம் நடுங்கும்! - அய்யாக்கண்ணு ஆவேசம்!
பிரீமியம் ஸ்டோரி
நவம்பர் 20-ம் தேதி, நாடாளுமன்றம் நடுங்கும்! - அய்யாக்கண்ணு ஆவேசம்!

விளைபொருள்களுக்கு லாபகரமான விலை, வங்கிக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து... தலைநகர் புதுடெல்லியின் வீதிகளில் நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தினர் தமிழக விவசாயிகள். அவர்களைப் பெருந்துயரத்துக்கு உள்ளாக்கிப் பல வகைகளில் அச்சுறுத்தி விரட்டியது மத்திய அரசு. இனி, இந்த விவசாயிகள் டெல்லி பக்கமே வர மாட்டார்கள் என்று மத்திய அரசு நினைத்துக் கொண்டிருக்கையில்... ‘வருகிற நவம்பர் 20-ம் தேதி இந்தியளவில் விவசாயிகள் இணைந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம்’ என அதிரடியாக அறிவித்துள்ளார் அகில இந்திய விவசாயிகள் போராட்டக் கூட்டமைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் அய்யாக்கண்ணு.

வலது கண் விழித்திரை பாதிக்கப்பட்டு, மருத்துவச் சிகிச்சையில் இருக்கும் நிலையிலும்கூட, வீரியம் குறையாமல் பேசுகிறார் அய்யாக்கண்ணு. “29 மாநிலங்கள்ல இருக்குற விவசாயிகளையும் அணி திரட்டிக்கிட்டு இருக்கிறோம். அகில இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300 விவசாயச் சங்கங்கள் எங்களோட கூட்டமைப்புல அங்கம் வகிக்குது.

எல்லா சங்கங்களுமே போராட்டத்துக்கான தயாரிப்புப் பணிகள்ல தீவிரமா இருக்கு. நவம்பர் 20-ம் தேதி நாங்க நடத்த இருக்குற முற்றுகைப் போராட்டம் நாடாளுமன்றத்தை நிலைகுலைய வைக்கும். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இதுல கலந்துக்கப் போறாங்க. எங்களை அலட்சியப்படுத்திய பிரதமர் மோடிக்குக் கண்டிப்பா பாடம் கற்பிப்போம்.

நவம்பர் 20-ம் தேதி, நாடாளுமன்றம் நடுங்கும்! - அய்யாக்கண்ணு ஆவேசம்!

டெல்லியில் இரண்டு கட்டமா நாங்கள் நடத்திய போராட்டம், உலகளவுல கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், மத்திய அரசு எங்களோட நியாயமான கோரிக்கைகளுக்குக் கொஞ்சம்கூடச் செவி சாய்க்கல. ஒவ்வொரு நாளும் அவமானத்தைத்தான் சந்திச்சோம்.

141 நாள்கள் இரவு-பகலா நடு ரோட்டுல மழையிலயும் வெயில்லயும் கிடந்து, கடுமையான சோதனைகளைச் சந்திச்சோம். எனக்கும் வலதுகண்ல விழித்திரை பாதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்ற அளவுக்கு மோசமாயிடுச்சி.

கிட்டத்தட்ட 147 விவசாயிகள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, நெஞ்சுவலி, வெறிநாய்க்கடினு ஏகப்பட்ட பாதிப்புகளுக்குள்ளாகியிருக்காங்க. எங்களைக் கண்டுக்காம விட்டுட்டா நாங்களாகவே போராட்டத்தைக் கைவிட்டுட்டு, கிளம்பிடுவோம்னு பிரதமர் மோடி நினைச்சார். அதனால்தான் எங்களைக் கைது பண்ணிச் சிறையில அடைக்கல. உலகத்துல வேற எங்கேயும் விவசாயிகளுக்கு இப்படியொரு அவமானம் நடந்தது கிடையாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நவம்பர் 20-ம் தேதி, நாடாளுமன்றம் நடுங்கும்! - அய்யாக்கண்ணு ஆவேசம்!

இதுக்கெல்லாம் சேர்த்துத்தான் நவம்பர் 20-ம் தேதி பதிலடி கொடுக்கப்போறோம். இருபது வருஷத்துக்கு முன்னாடி வட இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர் ‘திகாயத்’ தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு நிலை குலைய வெச்சாங்க. அதே மாதிரியான ஒரு போராட்டத்தை மறுபடியும் மத்திய அரசு சந்திக்கப்போகுது. விவசாய விளை பொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்காததாலதான், விவசாயிகளோட வாழ்க்கைத்தரம் உயரல. எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி உற்பத்திச் செலவுடன் 50 சதவிகிதம் கூடுதல் விலை கொடுங்கனு ரொம்பக் காலமா குரல் எழுப்பிட்டிருக்கோம்.

நவம்பர் 20-ம் தேதி, நாடாளுமன்றம் நடுங்கும்! - அய்யாக்கண்ணு ஆவேசம்!

‘என்னைப் பிரதமராக்கினால் இருமடங்கு விலை வழங்குவேன்’னு தேர்தல் நேரத்துல கொடுத்த வாக்குறுதியைக் காத்துலவிட்டுட்டார் மோடி. ஒரு டன் கரும்புக்கு 5 ஆயிரம் ரூபாய், ஒரு குவிண்டால் நெல்லுக்கு 3 ஆயிரம் ரூபாய்னு விலை கிடைச்சாதான், விவசாயிகள் தங்களோட வாழ்க்கையை ஓரளவுக்காவது கஷ்டமில்லாமல் நடத்த முடியும். விலையை ஏத்தாட்டிக்கூடப் பரவாயில்லை. விவசாயக் கடன்களையாவது முழுமையா தள்ளுபடிசெய்ய வேண்டாமா” என்ற அய்யாக்கண்ணு நிறைவாக,

“லாபகரமான விலை கிடைச்சிட்டா, எங்களுக்கு மானியமே தேவையில்லை. கடன் தள்ளுபடி தேவையில்லை. இலவசம் தேவையில்லை. அடுத்தடுத்து நாங்க நடத்தப்போற போராட்டங்கள் மூலமா, எங்களோட கோரிக்கைகள் கண்டிப்பாக வெற்றிபெறும்” என்றார் நம்பிக்கையுடன்.