Published:Updated:

“இந்தியாவில் விவசாயம் கற்றேன்...” - பெருமைப்படும் அமெரிக்க விஞ்ஞானி!

“இந்தியாவில் விவசாயம் கற்றேன்...” - பெருமைப்படும் அமெரிக்க விஞ்ஞானி!
பிரீமியம் ஸ்டோரி
“இந்தியாவில் விவசாயம் கற்றேன்...” - பெருமைப்படும் அமெரிக்க விஞ்ஞானி!

த.ஜெயகுமார், படங்கள்: சி.ரவிக்குமார்

“இந்தியாவில் விவசாயம் கற்றேன்...” - பெருமைப்படும் அமெரிக்க விஞ்ஞானி!

த.ஜெயகுமார், படங்கள்: சி.ரவிக்குமார்

Published:Updated:
“இந்தியாவில் விவசாயம் கற்றேன்...” - பெருமைப்படும் அமெரிக்க விஞ்ஞானி!
பிரீமியம் ஸ்டோரி
“இந்தியாவில் விவசாயம் கற்றேன்...” - பெருமைப்படும் அமெரிக்க விஞ்ஞானி!

விவசாயம், சுற்றுச்சூழல், சமூகப் பணிகள் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் ‘ஜாம்ஷெட்ஜி டாடா நேஷனல் விர்ச்சுவல் அகாடமி விருது’கள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயத் தொழில்நுட்பங்களைப் பரவலாக்கியோர், அரசுத்திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்த்தோர்... எனப் பல வகைகளில் மக்கள் பணியாற்றிய 1,874 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

11-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் 23-ம் தேதி சென்னை, தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 74 நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்திருந்த ‘அமெரிக்க அறிவியல் அகாடமி’யின் முன்னாள் தலைவர் புரூஸ் ஆல்பர்ட்ஸ், விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஆல்பர்ட்ஸ், “1993-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை அறிவியல் அகாடமியின் தலைவராகப் பணியாற்றியிருக்கிறேன். அந்தச் சமயத்தில் பலமுறை இந்தியாவுக்கு வந்துசென்றிருக்கிறேன்.

“இந்தியாவில் விவசாயம் கற்றேன்...” - பெருமைப்படும் அமெரிக்க விஞ்ஞானி!

ஒவ்வொருமுறை இந்தியா வரும்போதும் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொண்டு செல்வேன். ஒருமுறை இயற்கை முறையில் உயிரிகளைப் பாதுகாக்கும் ‘பயோஃபோர்ட்டிபைடு’ முறையைக் கற்றுக்கொண்டேன். அடுத்தமுறை வந்தபோது விவசாயத்தில், இந்தியப் பெண்கள் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்தேன். அதை எப்படியாவது பதிவு செய்ய வேண்டுமென்று நினைத்தேன். தொடர்ந்து எங்கள் அகடாமி நடத்தும் அறிவியல் பத்திரிகையின் அட்டைப்படத்தில், ஓர் இந்தியப் பெண் வயலில் இருப்பதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டோம். இப்படிப் பல விஷயங்களை இந்தியாவில் கற்றிருக்கிறேன். கிராமபுறங்களில் பணி செய்பவர்கள் மூலமாகத்தான், கிராம அறிவியல் நகரங்களில் வசிக்கும் எங்களுக்கு வந்துசேர்கிறது” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இந்தியாவில் விவசாயம் கற்றேன்...” - பெருமைப்படும் அமெரிக்க விஞ்ஞானி!

நிகழ்ச்சியில் பேசிய நபார்டு வங்கியின் முதன்மைப் பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா, “கிராமங்களில் செய்வதுதான் உண்மையான பணி. இவைபோன்ற பணிகள்தான் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. 80-ம் ஆண்டுகளில், தமிழ்நாட்டு விவசாயத்தின் கடினமான காலகட்டம். ஆனால், அப்போதே 6 லட்சம் ஹெக்டேர் நிலத்தை நீர்வடிப் பகுதியின் கீழ் கொண்டுவந்து, நீரைச் சேகரிக்கும் பகுதியாக மாற்றினோம். இதை முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமாகச் செயல்படுத்தினோம். அறிவியலும் தொழில்நுட்பமும் இல்லாமல் எதையும் சாத்தியப்படுத்த முடியாது” என்றார்.

“இந்தியாவில் விவசாயம் கற்றேன்...” - பெருமைப்படும் அமெரிக்க விஞ்ஞானி!

மூத்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், “இந்தியாவில் 6 லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலுமிருந்து ஓர் ஆண், ஒரு பெண் இதுபோன்ற ‘ஃபெல்லோஷிப்’களாக உருவாக வேண்டும். அவர்கள் பருவநிலை மாற்றம் பற்றித் தெரிந்தவர்களாகவும், பசிக்கு எதிராகப் போராடுபவர்களாகவும், கிராம அறிவியல் நிலையமாகச் செயல்படுபவர்களாகவும் இருக்க வேண்டும். இதில் பெண்கள் பங்குபெறுவது, அவர்களின் சுயமதிப்பை அதிகப்படுத்தும்.

இந்த ஃபெல்லோஷிப்களால்தான் ‘எஸ்.ஆர்.ஐ’ எனப்படும் திருந்திய நெல் சாகுபடிமுறை விவசாயிகளிடம் பரவலானது. உங்களைப்போன்றே பலரும் இதுபோன்று செயல்பட ஆரம்பித்தால்தான், இந்தியக் கிராமங்களுக்கு அறிவியலைக் கொண்டு சேர்க்க முடியும்” என்றார்.

“இந்தியாவில் விவசாயம் கற்றேன்...” - பெருமைப்படும் அமெரிக்க விஞ்ஞானி!

நிகழ்ச்சியில் விருதுபெற்ற ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிங்கிதேவி பேசும்போது, “எங்கள் மாநிலத்தில் மலைவாழ் மக்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், மண்புழு உரம், அசோலா ஆகியவற்றைத் தயாரிக்கப் பயிற்சி கொடுக்கிறேன். இதோடு காளான் வளர்ப்பு, பலபயிர் சாகுபடி முறை குறித்தும் அறிவுறுத்தி வருகிறேன். காட்டு விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும் சொல்லிக் கொடுத்துவருகிறேன். குடும்பத்தை விட்டுவிட்டுத் தினமும் பல கிலோமீட்டர் தூரம் பயணித்து, இப்படிப் பயிற்சிகள் கொடுத்ததன் மூலமாக 72 குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. மலைப் பகுதிகளுக்கு இயற்கை விவசாயம்தான் சிறந்தது. அது சார்ந்து பணியாற்றுவது மனதுக்கு மகிழ்ச்சியைக்கொடுக்கிறது” என்றார் பெருமையாக.

“இந்தியாவில் விவசாயம் கற்றேன்...” - பெருமைப்படும் அமெரிக்க விஞ்ஞானி!

பயிர்களைச் சேதப்படுத்தும் விலங்குகளின் நடமாட்டத்தைத் தடுப்பது குறித்து ஆய்வு செய்துவரும் கேரளாவைச் சேர்ந்த அகமது பஷீர், தன்னுடைய கிராமத்தில் 80 சதவிகித வீடுகளில் கழிப்பறைகளைக் கட்டவைத்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மல்லிகா உள்ளிட்டோருக்கும் விருது வழங்கப்பட்டது.இந்த விருது விழாவுக்குப் பல நிறுவனங்கள் ஸ்பான்சர் வழங்கியிருந்தன.

இதில் பிரபல பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோ(மஹிகோ)வும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.