Published:Updated:

அரை ஏக்கர்... 150 நாள்கள்... ரூ. 60 ஆயிரம் லாபம்! - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை!

அரை ஏக்கர்...  150 நாள்கள்...  ரூ. 60 ஆயிரம் லாபம்! - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை!
பிரீமியம் ஸ்டோரி
அரை ஏக்கர்... 150 நாள்கள்... ரூ. 60 ஆயிரம் லாபம்! - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை!

மகசூல்இ.கார்த்திகேயன், படங்கள்: ரா.ராம்குமார்

அரை ஏக்கர்... 150 நாள்கள்... ரூ. 60 ஆயிரம் லாபம்! - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை!

மகசூல்இ.கார்த்திகேயன், படங்கள்: ரா.ராம்குமார்

Published:Updated:
அரை ஏக்கர்...  150 நாள்கள்...  ரூ. 60 ஆயிரம் லாபம்! - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை!
பிரீமியம் ஸ்டோரி
அரை ஏக்கர்... 150 நாள்கள்... ரூ. 60 ஆயிரம் லாபம்! - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை!

டிக்கடி உணவில் பயன்படுத்தக்கூடிய காய்களில் ஒன்று வெண்டைக்காய். பொரியல், வறுவல், கூட்டு, புளிக்குழம்பு, சாம்பார், வற்றல் என வெண்டைக்காயைப் பயன்படுத்திப் பல உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன. மேலும், இந்தக் காயில் சில மருத்துவக்குணங்களும் இருப்பதால், நம் சமையலில் எப்போதுமே இதற்கு முக்கியமான இடமிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ‘ஆனைக்கொம்பன்’ ரக வெண்டைக்காயைச் சாகுபடிசெய்து, நேரடி விற்பனையின்மூலம் நல்ல லாபம் ஈட்டிவருகிறார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சுப்பிரமணியம் செல்வம்.
கன்னியாகுமரி மாவட்டம், அழகியபாண்டியபுரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் காட்டுப்புதூர் எனும் கிராமத்தில்தான் சுப்பிரமணியம் செல்வத்தின் தோட்டம் இருக்கிறது. ஒரு காலைவேளையில் வெண்டைக்காய் பறித்துக்கொண்டிருந்த சுப்பிரமணியம் செல்வத்தைச் சந்தித்தோம்.

“என் சின்ன வயசுல  நெல், மரச்சீனிக்கிழங்குனு அப்பா சாகுபடி பண்ணிட்டிருந்தாங்க. எங்க பகுதியில எல்லோரும் ஏத்தன் (நேந்திரன்) ரக வாழைக்கு மாற ஆரம்பிக்கவும் அப்பாவும் அதைச் சாகுபடி பண்ண ஆரம்பிச்சாங்க. நான் பத்தாம் வகுப்பு முடிச்சுட்டு அரிசி மண்டியில வேலை செஞ்சுட்டிருந்தேன். நேரம் கிடைக்கிறப்போ, அப்பாகூடச் சேர்ந்து விவசாய வேலைகளையும் செய்வேன். இப்போ, அஞ்சு வருஷமா மத்த வேலைகளையெல்லாம் விட்டுட்டு, முழுசா விவசாயம்தான் செஞ்சுட்டிருக்கேன்.

அரை ஏக்கர்...  150 நாள்கள்...  ரூ. 60 ஆயிரம் லாபம்! - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை!

என்னோட உறவினர் ‘செல்வம்’கிறவர், ஜீரோ பட்ஜெட் முறையில வாழைச் சாகுபடி செஞ்சிட்டிருக்கார். மூணு வருஷத்துக்கு முன்னாடி அவரோட தோட்டத்துக்குப் போய், ஒருமுறை பார்த்துட்டு வந்தேன். அடுத்துக் கொஞ்ச நாள்ல கன்னியாகுமரி பண்பலை வானொலியில், ‘குமரி மாவட்ட நஞ்சில்லா இயற்கை வேளாண்மைச் சங்க’த்தின் தலைவர் ‘தாஸ்’ங்கிறவர், இயற்கை விவசாயம் பத்திப் பேசினார். அவரையும் போய்ப் பார்த்தேன். அவர், ஜீவாமிர்தம், பலதானிய விதைப்புனு இயற்கை விவசாயம் பத்தித் தெளிவா சொல்லிக்கொடுத்தார். அவரோட தோட்டத்துல இருந்த செவ்வாழை, ஆனைக்கொம்பன் வெண்டைனு ரெண்டையும் காட்டினார். அதுக்கப்புறம் எனக்கு இயற்கை விவசாயம்மேல கொஞ்சம் நம்பிக்கை வந்தது” என்ற சுப்பிரமணியம் செல்வம் தொடர்ந்தார்...

“உடனே, என்னோட நிலத்துல ஜீரோ பட்ஜெட் முறையில விவசாயம் ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணி, பலதானிய விதைப்புமூலம் மண்ணை வளப்படுத்தினேன். அரை ஏக்கர் நிலத்துல ஆனைக்கொம்பன் வெண்டைக்காயையும் ஒரு ஏக்கர் நிலத்துல ஏத்தன் ரக வாழையையும் போட்டேன். ஆனா, அந்தமுறை விளைச்சல் சரியில்லை. இருந்தாலும் தொடர்ந்து இயற்கை இடுபொருள்களையே பயன்படுத்தினேன். படிப்படியா நிலம் வளமாகி மகசூல் அதிகரிச்சது. அடுத்தடுத்து பல இயற்கை விவசாயப் பயிற்சிகள்ல கலந்துகிட்டு நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டிருக்கேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரை ஏக்கர்...  150 நாள்கள்...  ரூ. 60 ஆயிரம் லாபம்! - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை!

ஆத்மா திட்டத்தின் மூலமா குஜராத் போறதுக்கு வாய்ப்புக் கிடைச்சது. அங்க பூஞ்சணப் பயன்பாடு, மண்புழு உரப் பயன்பாடு பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அதையெல்லாம் தொடர்ந்து கடைப்பிடிச்சிட்டிருக்கேன்.
எனக்கு 3 ஏக்கர் நிலம் இருக்கு. இதுல 50 சென்ட் நிலத்துல ஆனைக்கொம்பன் வெண்டை போட்டிருக்கேன். மகசூல் முடியுற நேரத்துல இருக்கு. ஒரு ஏக்கர்ல் நிலத்துல ஏத்தன் ரக வாழை போட்டிருக்கேன். நடவு செஞ்சு 7 மாசம் ஆகுது. மீதி நிலத்தைக் காய்கறிகள் போடுறதுக்காகத் தயார்படுத்தி வெச்சிருக்கேன்” என்ற சுப்பிரமணியம் செல்வம் ஆனைக்கொம்பன் வெண்டை குறித்துச் சொன்னார்.

அரை ஏக்கர்...  150 நாள்கள்...  ரூ. 60 ஆயிரம் லாபம்! - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை!

“இந்த வெண்டைக்காயின் நுனிப்பகுதி யானையின் தந்தம்போல வளைஞ்சு இருக்குறதால, இதை ஆனைக்கொம்பன்னு சொல்றாங்க. இது நீளமாவும் அளவுல பெரிசாவும் இருக்கும். இதனால, நல்லா எடை நிக்கும். இதுல பிசுபிசுப்புத் தன்மை இருக்காது. சமைக்கிறப்போ சுருங்காது.

ஆரம்பத்துல இதைச் சந்தைக்குக் கொண்டு போனப்போ, ரொம்பக் குறைவான விலைக்கு என்கிட்ட வாங்கின வியாபாரிங்க, அதிகமான விலைக்கு விற்பனை செஞ்சு லாபம் பார்த்தாங்க. அதனால, இதை நானே நேரடியா விற்பனை செய்யலாம்னு முடிவு செஞ்சேன்.

கடுக்கரை, அழகிய பாண்டியபுரம், தெரிசனங்கோப்பு, புத்தேரி, சுசீந்திரம்னு பக்கத்துல இருக்குற ஊர்களுக்குப் போய், அங்கிருக்கிற நண்பர்கள், உறவினர்கள்கிட்ட முதல்ல விற்பனையை ஆரம்பிச்சேன். வாங்கத் தயங்கினவங்களுக்கு இலவசமாவும் கொடுத்தேன். எல்லோருக்கும் இயற்கை விவசாயத்துல விளைஞ்ச வெண்டைக்காயோட சுவை பிடிச்சுப் போகவும், தொடர்ந்து வாங்க ஆரம்பிச்சாங்க. இப்போ கிட்டத்தட்ட 200 வீடுகளுக்கு வாடிக்கையாகக் கொடுத்திட்டிருக்கேன். நான் கிலோ கணக்குல எடைபோட்டு விற்பனை செய்றதில்லை. கூறு போட்டுத்தான் விற்பனை செய்றேன். மார்க்கெட்ல விற்பனையாகுற விலையைப் பொறுத்து, கூறுல இருக்குற காய்களோட எண்ணிக்கையைக் கூட்டிக் குறைச்சுக்குவேன்” என்ற சுப்பிரமணியம் செல்வம் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

அரை ஏக்கர்...  150 நாள்கள்...  ரூ. 60 ஆயிரம் லாபம்! - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை!

“நடவு செஞ்ச 60-ம் நாள்ல இருந்து காய் பறிச்சுட்டிருக்கேன். பறிக்க ஆரம்பிச்சதுல இருந்து 92 நாள்கள் வரை நல்ல மகசூல் இருந்துச்சு. அதுக்கப்புறம் மகசூல் குறைஞ்சுடுச்சு. அதனால, இப்போ கிடைக்கிற காய்களை விற்பனைக்குக் கொண்டு போறதில்லை. வீட்டுத்தேவைக்கே வெச்சுக்குறேன். அப்பப்போ வத்தல் போட்டும் விற்பனை செய்றேன். மொத்தம் 50 சென்ட் நிலத்துல 92 நாள்கள்ல 1,224 கிலோ வெண்டைக்காய் பறிச்சிருக்கேன். அதைக் கூறு கட்டி விற்பனை செஞ்சதுல 80,820 ரூபாய் கிடைச்சது. 12 கிலோ வத்தல் விற்பனை செஞ்சது மூலமா 3,000 ரூபாய் கிடைச்சது. மொத்தம் 83,820 ரூபாய் வருமானம். அதுல 23,000 ரூபாய் செலவு போக 60,820 ரூபாய் லாபமாக் கிடைச்சது” என்ற சுப்பிரமணியம் செல்வம் நிறைவாக,

அரை ஏக்கர்...  150 நாள்கள்...  ரூ. 60 ஆயிரம் லாபம்! - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை!

“வெண்டையில இந்த அளவுக்கு லாபம் கிடைச்சதுக்கு முக்கியக் காரணம் நேரடி விற்பனைதான். அடுத்தது மதிப்புக்கூட்டல். சிலசமயம் காய்கள் விற்பனை ஆகலைன்னா, அதை வத்தலாக்கி விற்பனை செய்வேன். நாம பாடுபட்டு விளைவிச்சாலும் சந்தையில அடிமாட்டு விலைக்குத்தான் கேக்குறாங்க. அந்த நிலையை மாத்தணும்னு கொஞ்சம் மெனக்கெட்டு நேரடியா விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். அது மூலமா எனக்கும் நிறைவான லாபம் கிடைக்கிது. நுகர்வோருக்கும் குறைவான விலையில காய் கிடைக்கிது. எல்லா விவசாயிகளும் இப்படி மாறிட்டா நஷ்டத்தைத் தவிர்க்க முடியும்” என்றவர் கைநிறைய வெண்டைக்காயை அள்ளிக்காட்டியபடி விடைகொடுத்தார்.
   
தொடர்புக்கு:
சுப்பிரமணியம் செல்வம்,
செல்போன்: 93456 72375

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

ஐம்பது சென்ட் நிலத்தில் ஆனைக்கொம்பன் ரக வெண்டைக்காயைச் சாகுபடி செய்யும்முறை குறித்துச் சுப்பிரமணியம் செல்வம் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

ஆனைக்கொம்பன் ரக வெண்டைச் சாகுபடிசெய்ய வைகாசிப் பட்டம் ஏற்றது. தேர்வு செய்த நிலத்தை, ஆனி மாதத்தில் ஓர் உழவு ஓட்டிப் பத்து நாள்கள் காயவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு, 6 அடி இடைவெளி விட்டு, ஒரு கனஅடி அளவில் குழிகள் எடுத்து, இரண்டு நாள்கள் காய விட வேண்டும். ஐம்பது சென்ட் நிலத்தில் 600 குழிகள் வரை எடுக்கலாம்.

பிறகு, ஒவ்வொரு குழிக்குள்ளும் அரைக்கிலோ மட்கிய சாணம், 1 கிலோ குளத்து மண் போட வேண்டும். மறுநாள், ஒரு குழிக்கு 2 விதை என்ற கணக்கில் ஊன்றித் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சினால் போதும். ஐம்பது சென்ட் நிலத்தில் விதைக்க கால்கிலோ அளவு விதை தேவைப்படும்.

விதைத்த 5-ம் நாளுக்குமேல் விதைகள் முளைப்பு எடுக்கும்.  30-ம் நாளிலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தம் என்ற கணக்கில் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 35-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் ஜீவாமிர்தம் எனக் கலந்து கைத்தெளிப்பான்மூலம் தெளிக்க வேண்டும்.  40-ம் நாள், ஒவ்வொரு செடியின் தூரிலும் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை வைத்து, மண் அணைத்துவிட வேண்டும். 40-ம் நாளுக்குமேல் பூவெடுத்து 50-ம் நாளுக்குமேல் பிஞ்சுகள் உருவாக ஆரம்பிக்கும். 60-ம் நாளுக்குமேல் காய்களைப் பறிக்கலாம்.

அரை ஏக்கர்...  150 நாள்கள்...  ரூ. 60 ஆயிரம் லாபம்! - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை!

விதைக்கு அலைய வேண்டாம்

“செடியில் காய்க்கும் திரட்சியான காய்களைப் பறிக்காமல், அப்படியே காய விட வேண்டும். காயானது காய்ந்தபிறகு லேசாக வெடிக்கத் தொடங்கும். அந்தச் சமயத்தில் காய்களைப் பறித்து, காய்களின்மீது நூலைச் சுற்றி, 3 நாள்கள் இளம்வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நூலைச் சுற்றாவிட்டால் காய் வெடித்து விதைகள் சிதறிவிடும். தேவைப்படும் சமயத்தில் நூலைப் பிரித்து விதைகளைச் சேகரிக்க வேண்டும். விதைக்கும் நாளில், விதைகளைத் தண்ணீரில்போட்டு, அதில் மூழ்கிய விதைகளை மட்டும் எடுத்து விதைக்க வேண்டும்” என்கிறார் சுப்பிரமணியம் செல்வம்.

பூச்சிகள்... கவனம்!

வெண்டையில் பூ பூக்கும் நேரத்தில் சிவப்பு நிற வண்டுகள் மற்றும் சிவப்பு எறும்புகள் ஆகியவற்றின் தாக்குதல் இருக்கும். இந்தச் சமயத்தில், பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். மூன்று கிலோ வேப்பங்கொட்டை, தலா அரைக்கிலோ பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த மூன்றையும் தனித்தனியே உரலில் இடித்து, மொத்தமாகச் சேர்த்து ஒரு துணியில் கட்டி, 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் இரண்டு நாள்கள் வரை ஊற வைத்து, அதை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் 100 கிராம் காதி சோப்பைக் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். 300 மில்லி வேப்பங்கொட்டைக் கரைசல், 50 மில்லி காதி சோப் கரைசல் இரண்டையும் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, கைத்தெளிப்பான்மூலம் மாலை வேளையில் செடிகள்மீது தெளிக்க வேண்டும்.

வெண்டையில் காய்கள் காய்க்க தொடங்கிய பிறகு இலைசுருட்டுப் புழுக்கள் தாக்கக்கூடும். இப்புழுக்களைப் பத்து இலைகளைக்கொண்ட கஷாயம்மூலம் கட்டுப்படுத்தலாம். வேப்பிலை, புங்கன், சீத்தா, ஆமணக்கு, ஊமத்தை, துளசி, பப்பாளி, ஆடாதொடை, கொய்யா, வில்வம் ஆகியவற்றின் இலைகளைத் தலா 2 கிலோ அளவில் எடுத்து, துண்டு துண்டாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு 200 லிட்டர் கொள்ளளவுள்ள ‘பிளாஸ்டிக் டிரம்’மில் 150 லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் நறுக்கிய இலைகள், 5 கிலோ பசுமாட்டுச் சாணம், 10 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர், 100 கிராம் மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து 25 நாள்கள் ஊறவைக்க வேண்டும். தினமும் காலையிலும் மாலையிலும் வலப்புறமாக  வேப்பங்குச்சியால் கலக்கி விட வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் கஷாயம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். இந்தக் கஷாயத்தை 6 மாதங்கள் வரை நிழலில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

அரை ஏக்கர்...  150 நாள்கள்...  ரூ. 60 ஆயிரம் லாபம்! - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை!

வெண்டைக்காய் வற்றல்!

“வெண்டைக்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு கலந்த புளித்த மோரில் போட்டு, ஒருநாள் முழுவதும் ஊற வைத்து எடுக்க வேண்டும். இதை ஓலைப்பாயில் கொட்டிப் பரப்பி, 6 நாள்கள் வெயிலில் காய வைத்து எடுத்தால் வற்றல் தயாராகிவிடும்.

ஒரு கிலோ வெண்டைக்காய்க்கு ஒன்றரை லிட்டர் மோர், 50 கிராம் உப்பு ஆகியவை தேவைப்படும். ஒரு கிலோ வெண்டைக்காயிலிருந்து 150 கிராம் வற்றல் கிடைக்கும். ஒரு கிலோ வற்றல் 250 ரூபாய் வரை விற்பனையாகிறது. வெண்டைக்காய்க்கு விலை கிடைக்காத சமயத்தில், அடிமாட்டு விலைக்கு விக்காமல், வற்றலாக்கி வித்தால் ஓரளவு லாபம் பார்க்க முடியும்” என்கிறார் சுப்பிரமணியம் செல்வம்.