Published:Updated:

பாரம்பர்யப் பருத்தியை மீட்டெடுத்த ‘துலா’! - விளையும் விலையும்! - 17

பாரம்பர்யப் பருத்தியை மீட்டெடுத்த ‘துலா’! - விளையும் விலையும்! - 17
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்யப் பருத்தியை மீட்டெடுத்த ‘துலா’! - விளையும் விலையும்! - 17

சந்தைக்கு வழிகாட்டும் தொடர்சந்தைஅனந்து, தொகுப்பு: க.சரவணன்

பாரம்பர்யப் பருத்தியை மீட்டெடுத்த ‘துலா’! - விளையும் விலையும்! - 17

சந்தைக்கு வழிகாட்டும் தொடர்சந்தைஅனந்து, தொகுப்பு: க.சரவணன்

Published:Updated:
பாரம்பர்யப் பருத்தியை மீட்டெடுத்த ‘துலா’! - விளையும் விலையும்! - 17
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்யப் பருத்தியை மீட்டெடுத்த ‘துலா’! - விளையும் விலையும்! - 17

வெகுஜனச் சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைகளுக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது...

கூட்டுறவு முறையில் பல சிறு கடைகள் ஒன்றாக இணைந்து, வெற்றிகரமாக இயங்கிவரும் ஓ.எஃப்.எம் கூட்டுச் செயல்பாடு பற்றிச் சென்ற இதழில் பார்த்தோம். இதில் பங்கேற்றுள்ள இளைஞர்களின் கூட்டு முயற்சியால் வெற்றிகரமாக இயங்கிவருகின்றன அந்தச் சிறு கடைகள். இந்த இளைஞர்களுக்குக் கிடைக்கும் அதிகபட்ச லாபம் 20 சதவிகிதம்தான். லாபம் மட்டுமே நோக்கமாக இல்லாமல், சமூக அக்கறையும் பொறுப்பும் சேர்ந்தே இவர்களின் செயல்பாடு அமைந்துள்ளது.

தமிழகத்தில் இவர்கள் நடத்தும் ஓ.எஃப்.எம் இயற்கைச் சிறு அங்காடிகள், தற்போது சென்னையில் மட்டும்தான் செயல்படுகின்றன. முதலீடு அதிகம் தேவைப்படாத அறம் சார்ந்த வணிகத்தை முன்னிறுத்தும் இந்தக் கூட்டமைப்பு, இந்தியளவில் ஒரு புது முயற்சி.

பாரம்பர்யப் பருத்தியை மீட்டெடுத்த ‘துலா’! - விளையும் விலையும்! - 17

இதேபோல இன்னுமொரு முயற்சிதான் ‘கோ ஆர்கானிக் லைஃப்’ (Go Organic Life) எனும் விநியோகமுறை. இது சுருக்கமாக ‘கோல்’ (GOL) என்று அழைக்கப்படுகிறது. பல சிறு இயற்கை அங்காடிகள், தரமான மற்றும் நம்பகமான பொருள்கள் கிடைக்காமல் தடுமாறுகின்றன.

இன்னொரு பக்கம் இயற்கைக்கு மாறிய விவசாயிகள், நல்ல சந்தை இல்லாமல், நேர்மையான விலை கிடைக்காமல் தவிக்கின்றனர். இயற்கை விளைபொருள்களைக் கொள்முதல் செய்து, பல்வேறு சிறு அங்காடிகளுக்கு விநியோகம் செய்யும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘கோல்’. இது விளைபொருள்களைக் கொள்முதல் செய்து சுத்தப்படுத்தி, பேக்கிங் பண்ணி விநியோகித்து வருகிறது. இப்போது விவசாயிகளையும் முதலீட்டாளர்களாகச் சேர்க்கும் திட்டத்தோடு இயங்கிவருகிறது.

நுகர்வோரிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக, ரீஸ்டோர் மற்றும் ஓ.எஃப்.எம் ஆகியவை இணைந்து உருவாக்கியதுதான் ‘பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு’. தமிழகத்தில் பாதுகாப்பான உணவின் முக்கியத்துவம், நஞ்சுணவின் தீமைகள், மரபணு மாற்றப்பட்டப் பயிர்களின் தீமைகள், அவற்றுக்குப் பின்னாலிருக்கும் அரசியல் குறித்த பிரசாரம், விவசாயிகளின் நிலை, விவசாயிகள் தற்கொலை... போன்ற விஷயங்களைப் பற்றி, இந்தக் கூட்டமைப்பு பல்வேறு நிகழ்ச்சிகளையும் பரப்புரைகளையும் மேற்கொண்டுவருகிறது. இந்தக் கூட்டமைப்பில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், விவசாயிகள், நுகர்வோர், கல்வியாளர்கள் எனப் பலர் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இக்கூட்டமைப்பு தொடர்பாக நடந்த ஒரு சந்திப்பில், விவசாயிகள் தற்கொலை பற்றிப் பேச்சு வந்தது. ‘இயற்கை வேளாண்மையும் நிலைத்த தற்சார்பான நடவடிக்கைகளுமே தற்கொலைகளுக்குத் தீர்வாக இருக்கும்’ என்று பேசிக்கொண்டிருந்தோம். அப்போது தன்னார்வலர் ஒருவர், ‘இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் பெரும்பான்மையோர் பருத்தி விவசாயிகள் தான். நாம் ஏன் பருத்தி விவசாயிகளுடன் வேலை செய்யவில்லை’ என்று கேட்டார். அந்தக் கேள்வி அனைவரையும் ஆழமாக யோசிக்க வைத்தது. அதனடிப்படையில் சிந்தித்து உருவாக்கியதுதான் ‘துலா’ எனும் அமைப்பு. துலா என்றால் ‘தராசு’ என்று பொருள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாரம்பர்யப் பருத்தியை மீட்டெடுத்த ‘துலா’! - விளையும் விலையும்! - 17

பருத்தியை இயற்கையாக விளைவிக்கும் விவசாயிகளிடம் நல்லவிலை கொடுத்துக் கொள்முதல் செய்வது, அதை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது என முடிவெடுத்தோம். இதற்காகச் சில நூல் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களைச் சந்திக்கச் சென்றோம். நாங்கள் சந்தித்த நெசவாளர்கள், மிகவும் மோசமான நிலையில் இருந்தனர். பலர் அந்தத் தொழிலைவிட்டே விலகும் நிலையில் இருந்தனர். சமூகம் அந்த அற்புதக் கலைஞர்களை மதிக்கத் தவறியதால், அவர்களின் கைவினைப் பொருள்களுக்கான மரியாதையும் விலையும் கிடைக்கவில்லை. அதனால்தான், அவர்கள் மோசமான பொருளாதாரச் சூழ்நிலையில் இருந்து வந்தனர்.

இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணம், பருத்தியின் மதிப்புச் சங்கிலி, பெருமுதலாளிகளின் ஆலைகளால் விழுங்கப்பட்டிருந்ததுதான். இப்படிப்பட்ட ஆலைகள், நூற்பு, சாயமேற்றுதல், நெசவு... என அத்தொழிலில் ஈடுபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்ததோடு சூழலையும் வெகுவாக மாசுபடுத்திவருகின்றன. ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்பது போல நொய்யல் ஆறு ஒன்றே சூழல் கேட்டுக்கான நேரடிச் சாட்சி.

பாரம்பர்யப் பருத்தியை மீட்டெடுத்த ‘துலா’! - விளையும் விலையும்! - 17

இப்படியான பிரச்னைகள் நிறைந்த பருத்தியின் மதிப்புச்சங்கிலியை மாற்ற... அதைக் கையால் நூற்று, அழகிய கைத்தறி ஆடைகளாகக் கொண்டு வர முடிவுசெய்தோம். அப்படிச் செய்தால், அண்மைப் பொருளாதாரம் வளமடையும். ஊரக வளர்ச்சியும் உள்ளூர் பொருளாதாரமும் பெருகும். கிராமங்கள் நிறைந்த நம் நாட்டுக்கு, வளர்ச்சிக்கான சரியான பாதை இதுவாகத்தான் இருக்க முடியும். அதனால்தான், இயற்கையுடன் இணைந்த, அறம் சார்ந்த பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு கொண்ட பருத்தியின் மதிப்புச் சங்கிலியைக் கட்டமைக்கத் துலாவைத் தொடங்கினோம். இதுவும் லாப நோக்கில்லாத ஒரு சமூக நிறுவனம்தான்.

இயற்கை ஆர்வலர் பாமயனின் குழுவிலிருந்த மதுரை, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 15 இயற்கை விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து 30 ஏக்கர் நிலத்தில், மரபணு மாற்றம் செய்யப்படாத, பாரம்பர்யப் பருத்தியை மானாவாரியில் விளைவிக்க ஊக்குவித்தோம். அந்தப் பருத்தியை வாங்கி, திண்டுக்கல் காந்திகிராமத்தில் கொடுத்து நூற்று, கைத்தறியாக நெய்து, இயற்கைச் சாயமிட்டோம். இதன் முதலீட்டுக்குத் தேவையான 15 லட்ச ரூபாயை, 15 நண்பர்களிடம் தலா 1 லட்ச ரூபாய் எனக் கடனாகப் பெற்றோம். இம்முயற்சியில் 15 விவசாயிகள், 40 கை நூற்பாளர்கள், 10 நெசவாளர்கள், 5 வண்ணமேற்றுபவர்கள், 5 தையல் நிபுணர்கள் என 75 பேரின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டது.

பருத்தி வெறும் மூலப்பொருளாகச் சந்தைக்குச் செல்லாமல், துணியாக விற்பனைக்கு வந்தது. அதற்கு நண்பர்களிடமும் நுகர்வோரிடமும் பெரிய வரவேற்பு கிடைத்தது. துலா ஆடைகளை அணியும் ஒவ்வொருவரும் சாமான்யர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளோம் என்ற பெருமையுடன் உலா வரலாம். இந்தப் பூமியிலேயே சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத மற்றும் நேர்மையான வணிகம் நிறைந்தவை துலா ஆடைகள். மனித ஆற்றல் (Human Energy) தவிர வேறு ஆற்றல் பயன்படுத்தப்படாத, மாசற்ற துணிகள் இவை.

துலா ஆரம்பித்த அடுத்த ஆண்டில், 15 லட்ச ரூபாய் கொண்டு கர்நாடகா மாநிலத்தில் இயங்கிவரும் ‘சஹஜ சம்ருதா’ அமைப்பின் விவசாயிகளிடம் இயற்கைப் பருத்தியைக் கொள்முதல் செய்தோம். அவர்கள், நம்முடைய பாரம்பர்யப் பருத்தி வகைகளில் மட்டுமே கவனம் செலுத்தினர். அவர்களின் பங்களிப்பு துலாவின் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருந்தது. அதைத் தொடர்ந்து துலா மூலம் இத்தொழிலில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

பாரம்பர்யப் பருத்தியை மீட்டெடுத்த ‘துலா’! - விளையும் விலையும்! - 17

மூன்றாம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், விதர்பாவுக்குள் நுழைந்தோம். இந்தப் பகுதிதான் அதிகப் பருத்தி விவசாயிகளைத் தனக்குள் புதைத்துக்கொண்ட பூமி. அங்குள்ள விவசாயிகளுடன் கைகோத்து மேலும் வளர்ந்தது துலா. குறைந்த முதலீட்டிலும் நேர்த்தியான நிதி மேலாண்மை மற்றும் வேலை ஒழுங்கு ஆகியவற்றால் குறுகிய காலத்தில் வளர்ந்தது. தற்போது ஸ்ரீநாத் என்ற இளைஞர்தான் துலாவை ஒருங்கிணைத்துச் செயல்படுத்திவருகிறார்.  இவர் நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டு, ஐ.டி. கம்பனி வேலையைத் துறந்துவிட்டு வந்தவர்.

இவரைப்போலவே சுவாமிநாதன் என்ற இளைஞர் தமிழக வேளாண் பல்கலைக் கழகத்தின் உதவியுடன் நம்முடைய பாரம்பர்ய ரகமான கருங்கண்ணிப் பருத்தியை மீட்டெடுத்துப் பரப்பி வருகிறார். இவர்களைப் போன்ற இளைஞர்கள்தான் நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகின்றனர்.

தொடர்புக்கு: ஸ்ரீநாத்,
செல்போன்: 91764 19562


-விரிவடையும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism