அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று கத்திரிக்காய். கூட்டு, வதக்கல், கொத்ஸு, சாம்பார், புளிக்குழம்பு... எனப் பல வகையான உணவுகள் கத்திரிக்காய் கொண்டு சமைக்கப் படுகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் மண்ணின் தன்மை, சூழல் ஆகியவற்றைப் பொறுத்து அப்பகுதிக்கெனப் பிரத்யேகமான நாட்டு ரகக் கத்திரிக்காய்கள் விளைவிக்கப்படுகின்றன.

அவற்றில் ஒரு ரகம்தான் மணப்பாறை கத்திரிக்காய். இந்த ரகத்தை மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்கிறார்கள். மிகவும் சுவையான இந்தக் கத்திரியைப் பலரும் விரும்பி வாங்குவதால் சந்தை வாய்ப்பும் நன்றாக இருக்கிறது.

இந்த மணப்பாறை கத்திரியை இயற்கை முறையில் சாகுபடிசெய்து வருகிறார்கள் புதுக்கோட்டை மாவட்டம், முதுகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் பிரகாஷ். உறவினர்களான இவர்கள் இருவரும் இணைந்து, இரண்டு ஏக்கர் நிலத்தில் கத்திரிச் சாகுபடியில் ஈடுபட்டு நல்ல லாபம் எடுத்து வருகிறார்கள். 25.5.2017-ம் தேதியிட்ட இதழில் ‘பரிசு வாங்கிக்கொடுத்த நிலக்கடலை’ என்ற தலைப்பில் வெளியான மகசூல் கட்டுரை மூலம் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள்தான் இவர்கள்.

ஒரு காலைவேளையில் வயலில் பணியில் இருந்த ஐயப்பன், பிரகாஷ் ஆகியோரைச் சந்தித்தோம். பிரகாஷ் பணிகளைத் தொடர நம்மிடம் கத்திரிச் சாகுபடி குறித்துப் பேச ஆரம்பித்தார் ஐயப்பன்.

“நாங்கள் சாகுபடி செய்வது, எங்க உறவினருக்குச் சொந்தமான நிலம். எங்க நிலத்துல தண்ணீர் வசதி இல்லாததால, இந்த மூணு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்றோம். முதல்ல மக்காச்சோளம் போட்டோம். அடுத்து, நிலக்கடலைச் சாகுபடி செஞ்சோம். அதுக்கப்புறம் கத்திரிக்காய் சாகுபடி செய்யலாம்னு முடிவு செஞ்சோம். எந்த ரகத்துக்கு மார்க்கெட் இருக்குதுனு தெரிஞ்சுக்கிறதுக்காகத் தொடர்ச்சியா ஒருவாரம் தஞ்சாவூர் காய்கறி மார்க்கெட்டுக்குப் போனோம். அங்க மணப்பாறை கத்திரி ரகத்துக்கு நல்ல மவுசு இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டோம். உடனே இந்தக் கத்திரியைத்தான் சாகுபடி செய்யணும்னு முடிவு செஞ்சு மணப்பாறையில் இருந்து நாற்றுகள வாங்கிட்டு வந்து, 2 ஏக்கர் நிலத்துல நடவுசெஞ்சோம்.

இதை ‘பாலித்தீன் ஷீட்’ கொண்டு பார்களை மூடி, சொட்டுநீர் பாசனம் செய்றதால, குறைஞ்ச அளவு தண்ணீரே போதுமானதா இருக்கு” என்ற ஐயப்பன், நம்மை வயலுக்குள் அழைத்துச்சென்று காட்டியபடியே பேசினார்.

“போன தடவை அடியுரமா ஆட்டு எரு, மாட்டு எரு போட்டோம். இந்தத் தடவைப் பக்கத்திலேயே கோழிப்பண்ணை இருந்ததால, ஏக்கருக்கு 7 டன் வீதம் கோழி எரு போட்டோம். கோழி எரு போட்டதுல கத்திரியில் நல்ல விளைச்சல் கிடைச்சது.

கத்திரியில் தண்டுப்புழு, செம்பேன், காய்ப்புழு, அடுக்கு இலை நோய்னு அடுத்தடுத்து வந்துகிட்டே இருந்துச்சு. அப்பப்போ அக்னி அஸ்திரம், வேப்பங்கொட்டைக் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டினு பயன்படுத்திக் கட்டுப்படுத்தினோம். அரப்புமோர்க் கரைசல், நிலக்கரிச் சாம்பல் திரவம், பஞ்சகவ்யானு இடுபொருள்களைப் பயன்படுத்துறதால, நோய் எதிர்ப்புசக்தி கிடைச்சு செடிகள் திடகாத்திரமாக வளருது. காய்கள் சொத்தை இல்லாமல் பளபளப்பா இருக்கு” என்ற ஐயப்பன், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“இப்ப கத்திரிச் செடிகளுக்கு 115 நாள்கள் ஆகுது. நடவுசெஞ்ச 55-ம் நாள்ல இருந்து காய்கள் பறிச்சிட்டிருக்கோம். காய்ப்புக்குத் தக்கபடி ரெண்டு நாள் அல்லது நாலு நாளுக்கொரு முறை காய் பறிக்கிறோம். இதுவரைக்கும் மொத்தம் 5,800 கிலோ கத்திரிக்காய் மகசூல் எடுத்திருக்கோம். குறைஞ்சபட்சமா கிலோ 40 ரூபாய்னும் அதிகபட்சமா கிலோ 80 ரூபாய்னும் சந்தையில் விற்பனையாச்சு. அந்த வகையில் மொத்தம் 3,48,170 ரூபாய் வருமானமா கிடைச்சது. இதுவரைக்கும் ரெண்டு ஏக்கருக்கும் சேர்த்து 1,00,200 ரூபாய் செலவு பண்ணிருக்கோம். இதுபோக 2,47,970 ரூபாய் கையில லாபமா நிக்குது.

இன்னும் ரெண்டு மாசத்துக்குக் காய் பறிக்கலாம். அது மூலமா 1,500 கிலோ காய் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். ஒரு கிலோ 50 ரூபாய்னு விற்பனையானாலே அது மூலமா 75,000 ரூபாய் வருமானம் கிடைச்சுடும். அதுல அறுவடை, போக்குவரத்து, பராமரிப்பு எல்லாம் சேர்த்து 25,000 ரூபாய் செலவானாலும் மீதி 50,000 ரூபாய் லாபமா நிக்கும்னு எதிர்பார்க்கிறோம். அந்தவகையில ரெண்டு ஏக்கர் கத்திரி மூலமா மொத்தம் 2,97,970 ரூபாய் லாபம் கிடைச்சிடும்” என்றார் மகிழ்ச்சியாக.

தொடர்புக்கு,
ஐயப்பன்,
செல்போன்: 89405 55086

இப்படிதான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கர் நிலத்தில் கத்திரி சாகுபடிசெய்யும் முறை குறித்து ஐயப்பன் சொல்லிய விஷயங்கள் பாடமாக இங்கே...

தேர்வுசெய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 7 டன் கோழி எருவைப் பரப்பி, 3 சால் உழவு ஓட்டிவிட வேண்டும். பிறகு ஒன்றரை அடி இடைவெளியில் 2 அடி அகலம், அரையடி உயரம்கொண்ட பார்களை அமைக்க வேண்டும். பாரின் நடுவே சொட்டுநீர்க் குழாய் அமைத்து, ‘பாலித்தீன் ஷீட்’ கொண்டு மூட வேண்டும்.

பாரின் மையப்பகுதியில் இருந்து முக்கால் அடி தூரத்தில் பாரின் இரு ஓரங்களிலும் மூன்றடி இடைவெளியில் பாலீத்தின் ஷீட்டில் ‘ஜிக்ஜாக்’ (முக்கோண நடவு) முறையில் துளையிட்டு நாற்றுகளை நடவுசெய்ய வேண்டும். இப்படி நடவுசெய்வதால் செடிகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளாமல் போதிய காற்றோட்டம், சூரியஒளி கிடைத்து நன்கு வளரும். நடவுசெய்தபின் நான்கு நாள்களுக்கு ஒருமுறை சொட்டுநீர்மூலம் தண்ணீர் கொடுக்க வேண்டும். 10-ம் நாளில் இருந்து 20 நாள்களுக்குள் ஒருமுறை வேப்பங்கொட்டைக் கரைசலை (5 கிலோ வேப்பங்கொட்டையைக் குருணைபோல் அரைத்து, 20 லிட்டர் தண்ணீரில் 24 மணிநேரம் ஊற வைத்து வடிகட்டிய கரைசல்) சொட்டுநீர் மூலமாகக் கொடுத்து வர வேண்டும்.

நடவுசெய்த 12 மற்றும் 40-ம் நாள்களில் 4 லிட்டர் நிலக்கரிச் சாம்பல் திரவத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, சொட்டுநீர் மூலம் கொடுக்க வேண்டும். 45-ம் நாள் 2 லிட்டர் நிலக்கரிச் சாம்பல் திரவத்தை 130 லிட்டர் தண்ணீர் கலந்து செடிகள்மீது தெளிக்க வேண்டும். செடிகளில் பூக்கள் பூக்கத் தொடங்கிய பிறகு, 10 நாள்களுக்கு ஒரு தடவை 3 லிட்டர் பஞ்சகவ்யாவை 150 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

50-ம் நாள் ஒன்றரை லிட்டர் அக்னி அஸ்திரத்தை 130 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 60-ம் நாள் 1 லிட்டர் மீன் அமினோ அமிலத்தை 130 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதேநாளில் 2 லிட்டர் மீன் அமினோ அமிலத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து சொட்டுநீர் மூலமாகக் கொடுக்க வேண்டும்.

65-ம் நாளில் இருந்து வாரம் ஒருமுறை, 6 லிட்டர் அரப்பு மோர்க் கரைசலை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 55-ம் நாளுக்குமேல் காய்கள் பறிக்கலாம். தொடர்ந்து நான்கு மாதங்கள் காய்ப்பு இருக்கும்.