காலையிலேயே தோட்டத்துக்கு வந்துவிட்ட ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி நாளிதழ்களை வாசித்துக் கொண்டிருந்தார். வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், வேலையை முடித்துவிட்டு வருவதற்கும் காய்கறிகளை விற்றுவிட்டு ‘காய்கறி’ கண்ணம்மா வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது.

காய்கறியும் ஏரோட்டியும் அமர்ந்து சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டதும், ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார் வாத்தியார்.

“இந்த வருஷ தொடக்கத்துல தமிழ்நாட்டுக்குள்ள சீமைக்கருவேல மரத்தை ‘அடியோடு அழிக்கணும் வேரோடு ஒழிக்கணும்’னு அந்த மரத்துக்கு எதிரா பெரிய எதிர்ப்பலை உருவாச்சு. அரசாங்கமே, சீமைக்கருவேல மரத்தை அழிக்க களத்துல இறங்குச்சு. ‘ முறையாக ஆய்வு செய்யாமல், சீமைக்கருவேல மரத்தை அழிக்கக் கூடாது’னு சென்னை உயர் நீதிமன்றத்துல பொதுநல வழக்கு தொடுக்கப் பட்டது. அந்த வழக்குல சீமைக் கருவேலமரத்தை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து அறிக்கைக் கொடுக்க 12 பேர் கொண்ட குழு அமைச்சாங்க. முதன்மை வனப் பாதுகாவலர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவுல, வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர், கால்நடைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், வேளாண்துறை அதிகாரிகள் இருந்தாங்க. இந்தக் குழு ‘சீமைக்கருவேல மரத்தால், நிலத்தடி நீர்மட்டத்துக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. உயிர்ச்சூழலுக்கு ஆதரவாகத்தான் சீமைக்கருவேல மரம் உள்ளது’னு அறிக்கை தாக்கல் செய்திருக்காங்க’’ என்றார் வாத்தியார்.

“அப்படின்னா... சீமைக்கருவேல மரங்களுக்கு ஆதரவுகூட ஆரம்பிச்சிருச்சு” என்ற காய்கறி, தான் கொண்டு வந்திருந்த வேகவைத்த மரவள்ளிக்கிழங்குத் துண்டுகளை, ஆளுக்கு இரண்டாகக் கொடுத்த காய்கறி, “இந்த மாசம் மரவள்ளிக்கிழங்கு சீசன் ஆரம்பிச்சிருச்சு. அதனால, தமிழ்நாடு முழுக்க ஜோரா விற்பனையாகுது. இதைக் குச்சிக்கிழங்குனும் சொல்வாங்க. சில்லறை விலையில ஒரு கிலோ நாற்பது ரூபாய்னு விற்பனையாகுது. அவிச்சு சாப்பிட்டா நல்ல சுவையா இருக்கும். உடம்புக்கும் நல்லது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டா எலும்பு இறுகும். குறிப்பா பெண்கள் இதை அதிகமா சாப்பிடணும். தஞ்சாவூர் பக்கம் கிராமங்கள்ல யாருக்காவது எலும்பு உடைஞ்சுடுச்சுனா கட்டுப் போட்டுட்டு... இந்தக்கிழங்கை மஞ்சள்தூள் சேர்த்து வேகவெச்சு,தாளிச்சு சாப்பிடக்கொடுப்பாங்க. வேகவெச்ச தண்ணியையும் சூப் மாதிரி குடிப்பாங்க. இதைச் சாப்பிடுறவங்களுக்குச் சீக்கிரமே எலும்பு கூடிடும்” என்றார்.

“மழை நேரத்துக்குச் சூடா சாப்பிட்டா நல்லாருக்கும். கொஞ்சம் ஆறிப்போச்சு. பரவாயில்லை, நல்லாதான் இருக்கு” என்று சொன்ன ஏரோட்டி, கிழங்கைச் சாப்பிட்டுக் கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல சொன்னார்.

“கார்த்திகை மாசம் ஆரம்பிச்சுட்டதால, நிறைய பேர் சபரிமலைக்குப் போறதுக்காக விரதத்தை ஆரம்பிச்சுட்டாங்க. அதனால, அசைவ ஹோட்டல்கள், இறைச்சிக் கடைகள்லாம் காத்தாட ஆரம்பிச்சுருக்கு. ஆனா, ஆடு, கோழி விலை மட்டும் குறையல. அதே மாதிரி இறைச்சி விலையும் குறையல. மீன் விலை குறைஞ்சுருக்கு. அதே நேரத்துல காய்கறி விலை அதிகரிச்சுடுச்சு. ஏற்கெனவே மழை, பனியால பயிர்கள் பாதிக்கப்படுறதால சந்தைக்குக் காய்கறி வரத்துக் குறைஞ்சிருக்கு. அதேநேரத்துல தேவை அதிகரிக்கிறதால விலையும் அதிகரிச்சுடுச்சாம். இந்த சீசன்ல இது வழக்கமானதுதான். ஆனா, போன மூணு நாலு வருஷங்களைக் காட்டிலும், இந்த வருஷம் காய்கறி விலை ரொம்ப அதிகரிச்சிருக்குதாம்” என்றார் ஏரோட்டி.

அதைத் தலையாட்டி ஆமோதித்த வாத்தியார், “காய்கறி விலை மட்டுமில்லை... தேங்காய், வாழைப்பழம்னு எல்லாமே விலை ஏறிப்போச்சு. விலை ஏறினதுக்குக் காரணம் வறட்சியால உற்பத்தி குறைஞ்சு போனதுதான். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பக்கத்துல இருக்கிற எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துல நவம்பர் 19-ம் தேதி தேங்காய் ஏலம் நடந்துச்சு. அங்க, ஒரு டன் தேங்காய் 50 ஆயிரம் ரூபாய் வரை ஏலம் போயிருக்கு. ஒரு வாரத்துல டன்னுக்குக் கிட்டத்தட்ட 5 ஆயிரம் ரூபாய் வரை விலை ஏறியிருக்கு. சில்லறை விலையில ஒரு தேங்காய் 40 ரூபாய் வரை விற்பனையாகுது.

அதே மாதிரி கொப்பரை, எள் எல்லாத்துக்குமே நல்ல விலை கிடைச்சுட்டிருக்கு. கரூர் மாவட்டம், சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துல, சமீபத்துல நடந்த ஏலத்துல கொப்பரை கிலோ 124 ரூபாய் வரை ஏலம் போயிருக்கு. சிவப்பு எள் அதிகபட்சமா கிலோ 88 ரூபாய்க்கும், வெள்ளை எள் 72 ரூபாய்க்கும் ஏலம் போயிருக்கு. கொப்பரை, எள் மாதிரியான விளைபொருள்களை இருப்பு வெச்சு, எடுத்துட்டு வந்து விற்பனைசெய்ற விவசாயிகளுக்கு, நிறைவான விலை கிடைக்கிறதால சந்தோஷமா இருக்கிறாங்க.

பொள்ளாச்சி பக்கத்துல ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துலயும் கொப்பரைக்கு நல்லவிலை கிடைச்சுட்டிருக்குது” என்றார்.

அந்த நேரத்தில் வயலில் களை எடுத்துக் கொண்டிருந்த ஆள்கள் சத்தம்போட்டு அழைக்க... வேகமாக எழுந்து ஓடினார் ஏரோட்டி. அதோடு மாநாடும் முடிவுக்கு வந்தது.