Published:Updated:

சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம்! உதவிக்கு வரும் உயிரியல் - 17

சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம்!  உதவிக்கு வரும் உயிரியல் - 17
பிரீமியம் ஸ்டோரி
சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம்! உதவிக்கு வரும் உயிரியல் - 17

இ.எம் தொழில்நுட்பம் வணிகமல்ல... சேவை!இடுபொருள்முனைவர் அ.உதயகுமார்தொகுப்பு: ரா.கு.கனல்அரசு, படங்கள்: வீ.சிவக்குமார்

சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம்! உதவிக்கு வரும் உயிரியல் - 17

இ.எம் தொழில்நுட்பம் வணிகமல்ல... சேவை!இடுபொருள்முனைவர் அ.உதயகுமார்தொகுப்பு: ரா.கு.கனல்அரசு, படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:
சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம்!  உதவிக்கு வரும் உயிரியல் - 17
பிரீமியம் ஸ்டோரி
சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம்! உதவிக்கு வரும் உயிரியல் - 17

ந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். நாங்கள்தான், உலகை ஆட்டிவைத்துக்கொண்டிருக்கிறோம் என எண்ணிக் கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தன்னுடைய அனைத்துப் படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொரு வாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, சில நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது.

கடந்த பதினாறு இதழ்களாக உங்களுடன் எழுத்து வடிவில் உரையாடிக்கொண்டிருந்த நான், பணிச்சுமை காரணமாக விடைபெற இருக்கிறேன். இந்தத் தொடர், நான் எதிர்பார்த்ததைவிடப் பலமடங்கு விவசாயிகளிடம் சென்று சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பசுமை விகடனின் வாசகர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள் என்பதை எனக்கு உணர்த்தியது இத்தொடர். இன்னும் சில விளக்கங்களைச் சொல்லி நிறைவுசெய்கிறேன்.

சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம்!  உதவிக்கு வரும் உயிரியல் - 17

இ.எம் திரவம் பற்றி இன்றைக்குத் தமிழக விவசாயிகளிடம் விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது. சிலர் இ.எம் திரவத்தைப் பப்பாளி, பரங்கிக்காய் மூலமாகத் தயாரிக்கலாமா எனக் கேட்கிறார்கள். நாம் எந்தப் பொருளையும் நொதிக்க வைத்தால் அதில் நுண்ணுயிர்கள் பெருகும். ஆனால், அதுதான் இ.எம் என்று சொல்ல முடியாது. அதற்கு, நாம் ஏதாவது ஒரு பெயரை வைத்துக்கொள்ளலாம். பப்பாளி-பரங்கிக் கரைசல் எனப் பெயர் வைத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்கும் இ.எம் திரவத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில் இ.எம் மூலமாகச் சிலர் ஆதாயம் பார்க்கத் தொடங்கியிருப்பது வருத்தமாக இருக்கிறது.

இதைக் கண்டுபிடித்த ஜப்பான் நாட்டு விஞ்ஞானியின் கனவு, இதை உலகம் முழுவதும் கொண்டுசெல்வதைச் சேவையாகச் செய்ய வேண்டும் என்பதுதான். ‘இதைக் கொடுக்கும்போது, விரிவுபடுத்திப் பயன்படுத்தும் முறையையும் கற்றுக்கொடுங்கள். இல்லையென்றால் இந்தத் தொழில்நுட்பம் அழிந்துவிடும்’ என்று அவர் சொன்னது இன்னமும் என் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. இ.எம் திரவத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்லுங்கள். இதை வணிகமாக மாற்றாமல், சேவையாகச் செய்ய வேண்டும்’ என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு அதுவும் வணிகமாகிவிட்டது. இந்தியாவில் அறிமுகமாகும்போது ஒரு லிட்டர் 90 ரூபாய் என்ற விலையில் விற்பனைசெய்யப்பட்ட இ.எம், தற்போது விவசாயிகளிடையே ஏற்பட்டிருக்கும் விழிப்பு உணர்வைப் பயன்படுத்தி, அதிகபட்சமாக ஒரு லிட்டர் 536 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம்!  உதவிக்கு வரும் உயிரியல் - 17

தற்போது, ஒரு லிட்டர் இ.எம் தாய் திரவத்திலிருந்து 20 லிட்டர் விரிவுபடுத்தப்பட்ட இ.எம் தயாரிக்கலாம் எனச் சிலர் சொல்கிறார்கள். இது நிறுவனங்களுக்குச் சாதகமானது. ஆனால், ஒரு லிட்டர் இ.எம் தாய் திரவத்திலிருந்து 100 லிட்டர் செறிவூட்டப்பட்ட இ.எம் தயாரிக்கலாம் என்று நான் சொல்லிவருகிறேன்.

விவசாயத்தில் இ.எம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் மாற்றம் இருப்பது உண்மைதான். அதற்காக இவ்வளவு விலை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உலகம் முழுவதும் இ.எம் ஒரு வகைதான் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் மட்டும்தான் ஐந்து வகையான இ.எம்-ஐ சந்தைப்படுத்துகிறார்கள். கோழிப்பண்ணை, மீன் பண்ணை, மாட்டுப் பண்ணை, சுற்றுச்சூழல், விவசாயம் என ஐந்து விதமாக இ.எம்-ஐ விற்பனை செய்கிறார்கள். இது மிகப்பெரிய ஏமாற்று வேலை. உரக்கடைகளில் கூட இ.எம் விற்பனை செய்கிறார்கள். இதை விற்பனை செய்பவர்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்லி, விவசாயிகளிடம் விற்பனை செய்ய வேண்டும்.

நீங்கள்தானே இ.எம் நல்லது என்று சொன்னீர்கள், இப்போது இப்படிச் சொல்கிறீர்களே என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். இப்போதும் சொல்கிறேன், இ.எம் திரவம் அருமையானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதை வணிகமாக்குகிறார்கள் என்றுதான் சொல்கிறேன். அப்போ இ.எம்-க்கு மாற்று என்ன?

அதையும் இதே தொடரில் பதிவு செய்திருக்கிறேன். பொக்காஷி, பயோ என்.பி.கே என்ற பெயரில் தயாரிக்கப்படும் தாவரக் கரைசல் அனைத்தும் இ.எம்-க்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். குறிப்பாகப் பயோ என்.பி.கே, இ.எம் செய்யும் அத்தனை பணிகளையும் செய்கிறது.

பயோ என்.பி.கே அடியுரமாகக் கொடுக்கலாம். இதைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் போது பூச்சி, நோய் எதிர்ப்புத் தன்மை கிடைக்கும். இதை அதிகச் செலவில்லாமல், இலைதழைக் கழிவுகளைக் கொண்டு விவசாயிகளே சொந்தமாகத் தயாரித்துக் கொள்ளலாம். அடுத்த சில ஆண்டுகளில் இந்த பயோ என்.பி.கே உலகம் முழுவதும் விவசாயத்தில் முக்கியப் பங்காற்றும். இது தொடர்பாக விவசாயிகளுக்குப் பயிற்சிகளை அளிக்கவும் தயாராக இருக்கிறேன். பசுமை விகடன் மூலமாக அந்தப் பயிற்சிகள் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டும். இதை ஒரு வேண்டுகோளாகப் பசுமை விகடன் குழுவினரிடம் முன்வைக்கிறேன்.

இ.எம் எங்கு கிடைக்கும் என்று வாசகர்கள் கேட்கிறார்கள். தற்போது பெரும்பாலான  மாவட்டங்களில் இ.எம் கிடைக்கிறது. இணையத்தில் இ.எம் முகவர்களின் முகவரிகள் இருக்கின்றன. இதையும் தாண்டி, இ.எம் கிடைக்காதவர்கள், என்னைத் தொலைபேசியில் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் பகுதியில் கிடைக்கும் இடங்களைத் தெரிவிக்கிறேன். எதிர்கால விவசாயத்தில் நுண்ணுயிர்களின் பங்கு அதிகமாக இருக்கும். தற்போது பயோ என்.பி.கே பயன்பாட்டில், சீனா முக்கிய இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் நுண்ணுயிர் உரங்கள், பயோ என்.பி.கே போன்ற செலவு குறைந்த தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்ல வேண்டும். அரசு இதில் ஈடுபட்டால், விவசாயிகளின் இடுபொருள் செலவு வெகுவாகக் குறையும். ரசாயன உரங்களுக்கான ஆராய்ச்சிகள், மானியங்கள் எனக் கோடிக்கணக்கில் செலவழிக்கும் அரசாங்கம், இதைப்போன்ற இடுபொருள் விஷயத்திலும் கவனம் செலுத்தினால், விவசாயிகள் வாழ்வில் விடியல் ஏற்படும்.

சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம்!  உதவிக்கு வரும் உயிரியல் - 17

என் அருமை விவசாயச் சொந்தங்களே! நான் விவசாயத்தில் முனைவர் பட்டம் பெற்றவன் என்பதைவிட, ஒரு விவசாயி வீட்டுப்பிள்ளை என்று சொல்லிக் கொள்வதையே விரும்புகிறேன். இத்தனை ஆண்டுகாலம், எனக்குக் கிடைத்த அனுபவம், அறிவு அனைத்தும் விவசாயிகளுக்குச் சென்று சேர வேண்டும் என்று விரும்பினேன். அந்தநேரத்தில் பசுமை விகடன் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்தத் தொடர் மூலமாக, முகம் தெரியாத எத்தனையோ விவசாயிகளிடம் பேசியிருக்கிறேன். அவர்களின் சந்தேகங்களுக்குத் தெரிந்தவரையில் விளக்கங்களைக் கொடுத்திருக்கிறேன். இனியும், தொடர்ந்து விளக்கமளிக்கத் தயாராகவே இருக்கிறேன். நான் சிலசமயம் கூட்டங்களில் இருக்கும்போது உங்கள் அழைப்பை ஏற்க முடியாமல் போகலாம். அதற்காக என்மீது வருத்தப்படாதீர்கள். இந்த வாய்ப்பை அளித்த பசுமை விகடனுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

- நிறைவுற்றது

தொடர்புக்கு,

முனைவர். அ.உதயகுமார், செல்போன்: 95977 82155.

100 லிட்டர் இ.எம் தயாரிப்பு!

செறிவூட்டப்பட்ட இ.எம் தயாரிப்பது குறித்துப் பார்ப்போம். பொதுவாக, எவ்வளவு லிட்டர் செறிவூட்டப்பட்ட இ.எம் தயாரிக்க இருக்கிறோமோ, அந்த அளவில் பிளாஸ்டிக் டிரம்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். டிரம்முக்குள் அதிக காலி இடம் இருக்கக் கூடாது. 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்மில், 100 லிட்டர் இ.எம் தயாரிக்கக் கூடாது. அப்படிச் செய்யும்போது, டிரம்மில் உள்ள காலி இடத்தில் வாயுக்கள் உருவாகும். இது இ.எம் கரைசலின் வீரியத்தைப் பாதிக்கும்.

சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம்!  உதவிக்கு வரும் உயிரியல் - 17

டிரம்களை நன்றாகச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். டீசல் மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்திய டிரம்களைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல செறிவூட்டப்பட்ட இ.எம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர், குளோரின் கலக்கப்படாத சுத்தமான தண்ணீராக இருக்க வேண்டும். குளோரின் கலந்த கார்ப்பரேஷன் தண்ணீர் மட்டுமே கிடைக்கும் சூழ்நிலையில், அந்தத் தண்ணீரை நான்கு நாள்கள் வைத்திருந்து பிறகு பயன்படுத்தலாம்.

100 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பிளாஸ்டிக் டிரம்மை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 94 லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும். ஐந்து கிலோ வெல்லத்தைச் சேர்க்க வேண்டும். வெல்லத்துக்குப் பதிலாக 5 கிலோ மொலாசஸ் அல்லது கழிவுச் சர்க்கரையைக் கரைத்து ஊற்றலாம். இவையிரண்டும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்தாலோ கிடைப்பது அரிதாக இருந்தாலோ, வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம். இதில், ஒரு லிட்டர் இ.எம் தாய் திரவத்தைக் கலக்க வேண்டும். இந்தக் கரைசலை நன்கு கலக்கி, வெளிக்காற்று உள்ளே போகாமல் இருக்குமாறு, மூடி வைக்க வேண்டும். இந்த டிரம்மீது நேரடியாக வெயில்படக் கூடாது. மாட்டுக்கொட்டகை, திண்ணை போன்ற நிழலான இடங்களில் வைத்துக்கொள்ளலாம். தினமும் மூடியைத் திறந்து, உடனே மூடி விட வேண்டும். கலக்கத் தேவையில்லை. ஏழு நாள்கள் இப்படிச் செய்தால் போதும். எட்டாவது நாள் பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும்.

நாம் தயாரித்துள்ள செறிவூட்டப்பட்ட இ.எம்., பயன்பாட்டுக்கு உகந்ததுதானா என்பதைச் சில அறிகுறிகள் மூலமாக அறிந்துகொள்ளலாம். எட்டாவது நாளில் டிரம்மில் உள்ள செறிவூட்டப்பட்ட கரைசலிலிருந்து நல்ல மணம் வரும். அப்படி வந்தால் அது பயன்பாட்டுக்கு ஏற்றது. மாறாக, துர்நாற்றம் வீசினால் அதைப் பயன்படுத்தக் கூடாது.

எத்தனை நாள்கள் இருப்பு வைக்கலாம்?

ஒருமுறை தயாரித்த செறிவூட்டப்பட்ட இ.எம் திரவத்தை 90 நாள்கள் வரை வைத்திருக்கலாம். அதற்கு மேலும், இ.எம் மீதம் இருந்தால், இருப்பைப் பொறுத்து வெல்லம் சேர்த்து, மீண்டும் பயன்படுத்தலாம். 20 லிட்டர் செறிவூட்டப்பட்ட இ.எம்-க்கு ஒரு கிலோ என்ற அளவில் வெல்லம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை ஏழு நாள்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். ஆனால், ஒருமுறை தயாரித்த செறிவூட்டப்பட்ட இ.எம்-ஐ 90 நாள்களுக்குள் பயன்படுத்தும் போதுதான், அதன் முழுமையான பலன் கிடைக்கும். மீண்டும் மீண்டும் செறிவூட்டிக்கொண்டே போகும்போது, அதன் வீரியம் குறைய வாய்ப்பிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism