‘தற்போது உள்ளது போலவே நீர் ஆதாரச் சுரண்டல் தொடர்ந்தால், எதிர்காலத்தில் இந்தியா கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சந்திக்க நேரிடும்’ எனச் சில ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தார் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். கடந்தாண்டில் பருவமழைகளும் பொய்த்துப்போன சூழ்நிலையில், அனைவருமே தண்ணீர்ச் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்துள்ளோம். தண்ணீர்ப் பயன்பாட்டைக் குறைப்பது ஒரு பக்கம் இருந்தாலும், கிடைக்கும் மழைநீரைச் சேகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதுகுறித்த விழிப்பு உணர்வு பெருகிவரும் சூழ்நிலையில், பலரும் மழை நீர்ச் சேமிப்பில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர்.

இந்த மழைநீரைச் சேமிக்கும் முறைகள் குறித்துத் திண்டுக்கல் மாவட்ட நீர்வடிப்பகுதி வேளாண்மைப் பொறியாளர் பிரிட்டோ ராஜிடம் பேசினோம். மலைச்சரிவுப் பகுதிகளிலிருந்து சமவெளிப்பகுதி வரை தொடர்ச்சியாக அமைக்க வேண்டிய நீர்ச் சேகரிப்பு அமைப்புகள் குறித்து அவர் சொன்ன தகவல்கள் இங்கே...

கல் வரப்புகள்

மலைப்பகுதியிலுள்ள நிலங்கள் சரிவாக இருக்கும். அதனால், சரிவுப்பகுதியில் குறுக்காகக் கல் வரப்பு அமைத்து, மழைநீரைத் தேக்கிப் பூமிக்குள் அனுப்பலாம். கல் வரப்பின் அகலம் இரண்டு அடி இருக்க வேண்டும்.

நிலத்தில் உள்ள கற்களைக் கொண்டே வரப்பு அமைக்கலாம். நிலத்தின் உயரமான பகுதியில், வரப்பின் உயரம் 2 அடி இருக்க வேண்டும். நிலத்தின் பள்ளமான பகுதியில் 4 அடி உயரம் இருக்க வேண்டும்.

சம உயரக் குழிகள்

மலைப்பகுதி நிலங்களில் 6 அடி நீளத்தில் குழிகள் எடுத்து, மழைநீரைத் தேக்கிப் பூமிக்குள் அனுப்பும் முறை இது. உயரமான பகுதியில் இரண்டரை அடி ஆழமும் பள்ளமான பகுதியில் ஒன்றரை அடி ஆழமும் இருக்க வேண்டும். இதுபோல 5 அடி இடைவெளியில் வரிசையாகக் குழிகள் எடுக்க வேண்டும்.

நிலத்தில் காலியாக உள்ள பகுதிகளில் ‘ஜிக்ஜாக்’ முறையில், இதுபோல குழிகள் எடுத்தால் அதிகளவு மழைநீர் சேமிக்கப்படும். குழிகளுக்கான இடைவெளியை நிலத்தின் அமைப்பு, பொருளாதாரச் சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்துக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.

படிக்கட்டு அமைப்பில் விவசாயம்

மலைப்பகுதிகளில் படிக்கட்டுப் போன்று நிலத்தைச் செதுக்கி, படிகளின் நுனிப்பகுதியில் வரப்பு அமைத்து விவசாயம் செய்யும்போது, ஒவ்வொரு படியிலும் மழைநீர் தேங்கி, அடுத்த படிக்கு இறங்கும். இதன்மூலம் மழைநீர் வழிந்தோடும் வேகத்தைக் கட்டுப்படுத்திப் பூமிக்குள் இறங்கச் செய்யலாம்.

வெற்றுக்கல் தடுப்பணைகள்

மலைப்பகுதிகளில் உள்ள ஓடைகளில் ஆங்காங்கே கிடக்கும் சிறு கற்களைக்கொண்டு தடுப்பணைகள் அமைக்க வேண்டும். 5 அடி அகலம், 3 அடி உயரம் கொண்ட தடுப்பணைகளை அடுத்தடுத்து அமைக்கும்போது ஓடையில் வரும் மழைநீர் தேங்கிப் பூமிக்குள் இறங்கும். இதனால், மலையடிவார நிலங்களில் ஈரப்பதம் காக்கப்படும்.

கம்பிவலைத் தடுப்பணைகள்

மலைச்சரிவுகளில் இரண்டு மூன்று சிற்றோடைகள் இணைந்து ஓடிவரும்போது, நீரின் வேகமும் மண் அரிமானமும் அதிகமாக இருக்கும். ஆங்காங்கே உள்ள உடைந்த பாறைக்கற்களைக்கொண்டு கம்பி வலைத்தடுப்பணையை அமைத்து, மண் சரிவைத் தடுக்கலாம். ஓடைக்குக் குறுக்கே 5 அடி அகலம், 4 அடி உயரத்துக்குக் கற்களை அடுக்கி 10 மில்லிமீட்டர் இடைவெளி கொண்ட கம்பிவலைமூலம் சுற்றி, கட்டிவிட வேண்டும். இது ‘கேபியான் தடுப்பணை’ என்று அழைக்கப்படுகிறது. இதன்மூலம் நீரின் வேகம் குறைந்து மண் அரிப்பு தடுக்கப்படுவதோடு, தேக்கப்படும் மழைநீர் பூமிக்குள் இறங்கவும் ஏதுவாகும்.

சிமென்ட் தடுப்பணைகள்

ஓடைகளில் ஆங்காங்கு சிமென்ட் கட்டுமானம்மூலம் தடுப்புகளை ஏற்படுத்தி, நீர் வழிந்துசெல்ல வழியை ஏற்படுத்த வேண்டும். இதை அமைக்கச் செலவு அதிகமாகும். வனத்துறைமூலம் இதுபோன்ற தடுப்பணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தங்களுடைய நிலத்துக்கு அருகிலுள்ள ஓடைகளில் உறுதியான சிமென்ட் தடுப்பணைகளை அமைத்தால், நீர் தேங்கி நிலத்தில் ஈரப்பதம் காக்கப்படும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

கசிவுநீர்க் குட்டைகள்

மலை அடிவாரத்தில் உள்ள தடுப்பணையில் இருந்து வெளியேறும் நீரைச் சேமிக்க பெரிய அளவில் (சுமார் ஒரு ஏக்கர் முதல் மூன்று ஏக்கர் வரை) அமைக்கப்படும் குளங்கள்தான் கசிவுநீர்க் குட்டைகள். செம்மண், சரளை மண் ஆகியவற்றைக்கொண்டு கரைகள் அமைக்க வேண்டும். இக்குட்டைகளில் மழைநீரைத் தேக்கும்போது, பூமிக்கடியில் செங்குத்தாக நீர் உள்ளிறங்கும். இதன்மூலம் சுமார் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

குளங்கள்

கசிவுநீர்க் குட்டையிலிருந்து வெளியேறும் நீர், கால்வாய்கள் வழியாகச் சமவெளிப் பகுதிகளுக்கு வந்து, அங்குள்ள குளங்களில் சேரும். இக்குளங்கள் மற்றும் அவற்றுக்கு நீர் வரக்கூடிய வாய்க்கால்களை அவ்வப்போது தூர்வாரி வைக்க வேண்டும். அப்போதுதான் கிடைக்கும் மழைநீரை முழுமையாகச் சேமிக்க முடியும். இக்குளங்கள்மூலம் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடிநீர் செறிவூட்டப்படும். பண்டைய காலங்களில் குடிமராமத்து முறை மூலம் வாய்க்கால்கள், குளங்கள் ஆகியவற்றைத் தூர்வாரி வைத்திருந்ததால் பிரச்னை இல்லாமல் இருந்தது. கசிவுநீர்க் குட்டையிலிருந்து வரும் நீர் ஆங்காங்குள்ள சிறிய குளங்களில் நிரம்பி, அடுத்து பெரியளவிலான குளங்களில் நிரம்புமாறு வாய்க்கால்கள் வெட்டப் பட்டிருக்கும்.

பெரிய குளங்களிலிருந்து வெளியேறும் நீரை வாய்க்கால்கள் மூலமாகப் பாசனத்துக்குப் பயன்படுத்துவார்கள். இக்குளங்களில் நிரம்பி வெளியேறும் நீர், ஆற்றில் கலக்குமாறு வாய்க்கால்கள் இருந்ததால் வெள்ளப்பெருக்கு தடுக்கப்பட்டது.

மேற்கண்ட முறைகள் பொதுவாகத் தண்ணீரைச் சேமிக்கும் முறை. கசிவுநீர்க்குட்டைகள், குளங்கள் ஆகியவை அரசு நிலங்களில் இருப்பதால் வனத்துறை, பொதுப்பணித்துறை, பஞ்சாயத்து நிர்வாகங்கள் போன்றவைதான் அவற்றைப் பராமரித்து வருகின்றன. இவற்றைத் தூர்வாரும் பணிகளையும் அரசுத்துறைகள்தான் மேற்கொள்ள முடியும். அடுத்து, பட்டா நிலங்களில் நீர் சேமிக்கும் முறை குறித்துப் பார்ப்போம்.

குழி வரப்புகள்

மலையடிவாரங்களிலுள்ள நிலங்களில் மழைக்காலங்களில் மேல்மண் அடித்துச் செல்லாமல் இருக்க, வரிசையாகக் குழிகள் எடுத்து வரப்பு அமைக்க வேண்டும். 60 அடி நீளம் 3 அடி அகலம் 3 அடி ஆழம் என்ற அளவில் 5 அடி இடைவெளியில் வரிசையாகக் குழிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மழைநீரின் வேகம் குறைக்கப்பட்டு மண் அரிமானம் தடுக்கப்படும். குழிகள் தோண்டும்போது எடுக்கப்படும் மண்ணைக்கொண்டு கரைகள் அமைக்க வேண்டும். இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

சம உயர வரப்புகள்

மூன்று சதவிகித அளவு சரிவுள்ள பகுதிகளில் ஆங்காங்கு 4 அடி அகலம் 3 அடி உயரத்தில் நாற்கர வடிவில் வரப்புகள் அமைக்க வேண்டும். குறிப்பாக, மானாவாரி நிலங்களில் இப்படி அமைக்கும்போது, மழைநீர் அப்படியே பூமிக்குள் இறங்கும். ‘ப’ வடிவில்கூட வரப்புகளை அமைத்துத் தண்ணீரைத் தேக்கலாம்.

பண்ணைக்குட்டை

அனைத்து நிலங்களிலும் பண்ணைக் குட்டை அமைத்து நீரைச் சேமிக்க வேண்டியது அவசியம். மழைநீர் வழிந்தோடும் பகுதியை, வாய்ப்பகுதியாக இருக்குமாறு குட்டை வெட்ட வேண்டும். ஒரு பண்ணைக்குட்டை குறைந்தபட்சம் 20 அடி நீளம், 20 அடி அகலம், 5 அடி ஆழம் இருக்க வேண்டும். நிலத்தின் அளவைப் பொறுத்துப் பண்ணைக்குட்டையின் அளவையும் எண்ணிக்கையையும் கூட்டிக்கொள்ளலாம். பண்ணைக்குட்டை அமைக்க மானியம் கிடைக்கிறது. பண்ணைக்குட்டைமூலம் நிலத்தில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக்கிணறுகள் ஆகியவற்றில் நீர் ஊற்றெடுக்கும்.

பொதுவாக, கடலோரப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் அதிக உப்புத்தன்மை கொண்டவையாக இருக்கும். இதனால், பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். இதுபோன்ற இடங்களில் பண்ணைக்குட்டை எடுக்கும்போது நிலத்தடி நீரில் உள்ள உப்புத்தன்மை குறையும்.

கிணற்றில் நீர்ச் சேகரிப்பு

பண்ணைக்குட்டை அமைக்க வழியில்லாத நிலங்களில், கிணறுகளில் மழைநீரைச் சேமிக்கலாம். மேட்டு நிலங்களிலிருந்து வழிந்தோடி வரும் நீரை வடிகட்டி, கிணறுகளில் சேமிக்க வேண்டும். கிணற்றிலிருந்து 10 அடி தொலைவில் 10 அடி நீளம், 8 அடி அகலம், 5 அடி ஆழத்தில் வடிகட்டும் குழி எடுக்க வேண்டும். இக்குழியின் அடிப்பகுதியில் 4 அங்குல விட்டமுள்ள பி.வி.சி குழாயைப் பொருத்தி, அதன் மறுமுனை கிணற்றுக்குள் இருக்குமாறு அமைக்க வேண்டும்.

குழாயின் முனையில் கொசுவலை அல்லது கம்பிவலையைக் கட்டிவிட வேண்டும். பிறகு குழிக்குள் இரண்டரை அடி ஆழத்துக்கு உடைகல்லைப் போட வேண்டும். அதன்மேல் ஓர் அடி உயரத்துக்கு ஒன்றரை அங்குல ஜல்லிக்கற்களைப் போட வேண்டும். மேட்டுப்பகுதியிலிருந்து வரும் மழைநீர் இக்குழிக்குள் விழுமாறு பாதைகள் அமைத்துக் கொடுத்தால், மழைபெய்யும் சமயங்களில் மழைநீர் வடிகட்டப்பட்டுக் கிணற்றுக்குள் சேகரமாகும்.

தொடர்புக்கு,
பிரிட்டோராஜ்,
செல்போன்: 99444 50552

பண்ணைக்குட்டைப் பாசனம்

தன்னுடைய பண்ணையில் குழி வரப்புகள் மற்றும் பண்ணைக்குட்டை அமைத்து மழைநீரைச் சேகரித்து வருகிறார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மான்சிங். சிவகாசியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வாடியூரில் உள்ளது இவரது இயற்கை விவசாயப் பண்ணை. பண்ணையின் மேலாளர் மதுரைவீரனிடம் மழைநீர்ச் சேமிப்பு குறித்துப் பேசினோம். “மொத்தம் 20 ஏக்கர் நிலம் இருக்கு. ரெண்டு வருஷமாத்தான் விவசாயம் செய்றோம். பத்து ஏக்கர் நிலத்துல தென்னையும் ரெண்டு ஏக்கர் நிலத்துல தீவனச்சோளமும் ரெண்டு ஏக்கர் நிலத்துல குதிரைவாலியும் ஒரு ஏக்கர் நிலத்துல தினையையும் விதைச்சிருக்கோம். மீதி 5 ஏக்கர் நிலத்தில் சிறுதானியங்களை விதைக்கிறதுக்காகத் தயார்படுத்தி வெச்சிருக்கோம். பண்ணையில் குழிகள் எடுத்து வரப்பு அமைத்து, வரப்புல நிரம்புற மழைநீர், பண்ணைக்குட்டைக்கு வர்ற மாதிரி அமைச்சிருக்கோம்.

வேலியிலிருந்து 25 அடி தொலைவில் 10 அடி நீளம், 5 அடி ஆழம், 3 அடி உயரத்தில் நிலத்தைச் சுத்தி அகழி மாதிரி குழி வரப்பு அமைச்சிருக்கோம். பண்ணைக்குட்டை 150 அடி நீளம், 70 அடி அகலம், 7 அடி ஆழம் கொண்டது. மழை பெய்றப்போ கொஞ்சமும் வீணாகாம வரப்புல தேங்கி அப்படியே பண்ணைக்குட்டைக்கு வந்துசேந்துடும். இதனால, நிலம் ஈரப்பதமாவே இருக்குது. நிலத்தடி நீரும் உயருது. முன்பு, கிணற்றுத் தண்ணீர் உப்புத் தன்மையோட இருந்தது. இப்போ நல்ல சுவையான தண்ணியா மாறிடுச்சு. போன மாசத்துல விட்டுவிட்டுப் பெய்த மழையால் கிணற்றுல 5 அடி வரை தண்ணீர் ஊறியிருக்கு” என்றார்.
தொடர்புக்கு, மதுரைவீரன், செல்போன்: 95852 44893