கடந்த நவம்பர் 19-ம் தேதியிலிருந்து 21-ம் தேதி வரை நாடு முழுவதுமிருந்து அலையலையாக வந்து இறங்கிய விவசாயிகளால் திணறிப்போனது டெல்லி ரயில் நிலையம். இருபத்தைந்து மாநிலங்களைச் சேர்ந்த 184 விவசாய அமைப்புகள், ‘அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு’ என்ற பெயரில் ஒன்றிணைந்து... டெல்லியில் போராட்டம் நடத்தின.

நவம்பர் 20-ம் தேதி காலை ராம்லீலா மைதானத்திலிருந்து, நாடாளுமன்ற வீதிக்குப் பேரணியாகச் சென்ற போராட்டக் குழுவினர், ‘விவசாயிகள் விடுதலை நாடாளுமன்ற’த்தை நடத்தினர்.

இருபது மாநிலங்களிலிருந்து வந்திருந்த 545 பெண் விவசாயிகளைக்கொண்ட நாடாளுமன்றம், சமூகச் செயல்பாட்டாளர் மேதா பட்கரைத் தலைவராகக்கொண்டு நடைபெற்றது. பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பேசிய விஷயங்கள், விவசாயத்தின் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையை அப்பட்டமாகப் படம் பிடித்துக்காட்டின.

தெலங்கானா மாநிலத்திலிருந்து வந்திருந்த கவிதா, தன்னுடைய கணவர் பி.டி பருத்தியைச் சாகுபடி செய்ததால் ஏற்பட்ட நஷ்டத்தில், தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரின் இறப்புக்கு அரசுதான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.

இதே மாநிலத்திலிருந்து வந்திருந்த மனிஷா, “கந்துவட்டிக்குக் கடன் வாங்கிய என்னுடைய பெற்றோர், கடன்காரர்களின் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டனர். வங்கிகள் குத்தகை விவசாயிகளான எங்களுக்குக் கடன் கொடுக்கவில்லை. அதனால்தான் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கினோம். நீங்கள் எங்களுக்கு உதவாவிட்டால், வேறு யார்தான் எங்களுக்கு உதவுவார் எனப் பிரதமரிடம் கேட்கத்தான் நான் டெல்லிக்கு வந்துள்ளேன்” என்றார். கர்நாடகா மாநிலத்திலிருந்து வந்திருந்த பிரபாவதி, “என்னுடைய சகோதரர் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்துகொண்டார். கட்டுப்படியான விலையின்மை, இடுபொருள்களின் விலை உயர்வு போன்றவைதான் அவரின் இறப்புக்குக் காரணம்” என்றார். மகாராஷ்டிராவிலிருந்து வந்திருந்த கந்தாபாய், “மகளின் கல்விக்கட்டணத்தை எங்களால் செலுத்த முடியவில்லை. இந்த கஷ்டத்தைப் பார்த்த எங்கள் மகள், இனி பெத்தவங்களுக்குத் தொல்லை கொடுக்க கூடாது என்று முடிவு செய்து தற்கொலை செய்து கொண்டாள்” என்று சொல்லி அழுதபோது அனைவரும் கண் கலங்கினர். ஒவ்வொரு பெண்ணும் இப்படி நெஞ்சை உருக்கும் சோகங்களைத் தங்கள் வார்த்தைகளால் வடிக்க, நாடாளுமன்ற வீதியே துக்கத்தால் கனத்தது.

தெலங்கானா மாநிலத்தில் புவனகிரி, நலகொண்டா, வாரங்கல், அடிலாபாத் ஆகிய பகுதிகளிலிருந்து தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட 40 விவசாயிகளின் குடும்பங்களைச் சார்ந்த பெண்களை ‘ரைத்து ஸ்வராஜ்ய வேதிகா’ என்ற அமைப்பு அழைத்து வந்திருந்தது.

“ஆந்திராவிலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்து வந்ததிலிருந்து இதுவரை 3,300 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இறந்த விவசாயிகளின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 6 லட்ச ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி அரசாணை பிறப்பித்தும், இதுவரை யாருக்கும் வழங்கவில்லை” என்று ரைத்து ஸ்வராஜ்ய வேதிகா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கொண்டல் ரெட்டி சொன்னார்.

குஜராத்திலிருந்து வந்திருந்த ஜீலாபென் வசவா, “காட்டிலிருந்து சேகரிக்கும் பொருள்களுக்குச் சந்தையில் விலை கிடைப்பதில்லை. பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்கள் கொள்ளையடிக்கப் படுகின்றன. இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் நாசமானால், இழப்பீடு முறையாகக் கிடைப்பதில்லை. மீன்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்கவில்லை” என்றார்.

ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வந்திருந்த ரமாதேவி, “மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்து பிழைக்க முடியாத காரணத்தால், இளம் பெண்கள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார்கள்” என்று வேதனைப் பட்டார்.

அவர்களைத் தொடர்ந்து பேசிய மேதா பட்கர், “இந்த நிகழ்ச்சியில், இந்திய விவசாயத்துக்குத் தேவையான ஆழமான மற்றும் விரிவான லட்சியத்தைக் காட்டியுள்ளனர் இந்தப் பெண்கள். இது அரசின் கொள்கைகளில் பிரதிபலிக்க வேண்டும். கணவர், சகோதரர் எனக் குடும்பத்தினரை இழந்தும் இப்பெண்கள் போராடி வாழ்க்கை நடத்துவதைப் பாராட்ட வேண்டும். விவசாயத்தில் பெண்கள், உயிர் பன்மயம், தற்சார்பு மற்றும் வளங்குன்றாத் தன்மை ஆகியவற்றில்தான் கவனம் செலுத்துகின்றனர். விவசாயத்தில் பெண்கள் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கண்டுகொள்ளப்படுவதில்லை” என்றார்.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர், கடந்த மாதம் 19 மாநிலங்களில் 10 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து, விவசாய அமைப்புக்களை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் கூட்டணியிலிருந்து விலகி, விவசாய இயக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ராஜீ ஷெட்டி, ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகள் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அம்ரா ராம், அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வி.எம். சிங்கால் ஆகியோருக்கு இக்கூட்டத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

கூட்டத்தில், ‘கிசான் சங்கர்ஷ் சமிதி’ அமைப்பைச் சேர்ந்த டாக்டர் சுனிலம், ‘லோக் சங்கர்ஷ் மோர்ச்சா’ அமைப்பைச் சேர்ந்த பிரதிபா ஷிண்டே, ‘அகில இந்திய கிசான் மகாசபை’ அமைப்பைச் சேர்ந்த ராஜாராம் சிங், ‘சுவராஜ் அபியான் இயக்க’த்தைச் சேர்ந்த யோகேந்திர யாதவ், ‘ஜெய் கிசான் அந்தோலன்’ அமைப்பைச் சேர்ந்த அவிக் ஷா, ‘அகில இந்திய கிசான் மஸ்தூர் சபா’வைச் சேர்ந்த டாக்டர் ஆசிஷ் மிட்டல், ‘பாரதிய கிசான் யூனியன் (டகோண்டா)’ அமைப்பைச் சேர்ந்த டாக்டர் தர்ஷன் பால், ‘கர்நாடக ராஜ்ய ரைத்த சங்க’த்தைச் சேர்ந்த கோடிஹள்ளி சந்திரசேகர், புட்டனையா, ‘கிசான் மகாபஞ்சாயத்து’ அமைப்பைச் சேர்ந்த ராம்பால் ஜாட், ‘தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க’த்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு, ‘ஆஷா’ அமைப்பைச் சார்ந்த கவிதா குருகந்தி, ‘ரைத்து ஸ்வராஜ்ய வேதிகா’ அமைப்பைச் சேர்ந்த கிரண் விசா ஆகியோர் பங்கேற்றனர்.

போராட்டம் இயக்கமாகத் தொடரும்!

கடந்த நவம்பர் 21-ம் தேதி நடந்த இறுதி நிகழ்வில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த தலைவர்கள் பேசினர். கூட்டத்தில் பேசிய சுவராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், “சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் அருகில் பாரதத் தாய் இல்லை. பசியைப் போக்குகிற விவசாயிகளிடமும் அவர்களின் குழந்தைகளிடமும் நேற்று இங்கே தங்களின் துக்கத்தைப் பகிர்ந்துகொண்ட என் சகோதரிகளிடமும் நான் பாரதத் தாயைப் பார்க்கிறேன்.

அந்த அடிப்படையில் நாம் ‘பாரத மாதாகி ஜே!’ என்று சொல்வோம். இங்கு வந்துள்ளவர்கள் இந்திய பிரஜைகள் இல்லை. அவர்கள் இந்தியாவின் ராஜாக்கள், ராணிகள். மோடிஜி தேர்தலில் உற்பத்தி விலையுடன் 50% அதிகமாக விலை நிர்ணயம் செய்வதாகச்சொன்னார். இதுவரை செய்தபாடில்லை. வெறும் வாய் ஜாலங்களால் வயிறு நிரம்பாது என்று மோடிஜிக்குத் தெரிய வேண்டும். நாங்கள் கேட்கும் கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றவில்லை. அதனாலேயே நாங்கள், இங்கு எங்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றினோம். எங்களுக்கு எதுவும் தெரியாது என்ற காலம் முடிந்துவிட்டது. எங்களுக்கும் சட்டம் தெரியும். அதை வடிவமைக்கத் தெரியும். இந்தச் சட்டங்களை நிறைவேற்றுங்கள். பீகாரின் அமைச்சர் ஒருவர், ‘மோடிஜியை நோக்கிச் சுட்டுவிரல் நீட்டினால், அந்த விரலைத் துண்டிப்பேன்’ என்றார்.

நான் சுட்டுவிரலை உயர்த்துகிறேன். இங்குள்ள அனைவரும் சுட்டுவிரலை உயர்த்துவோம் (எல்லோரும் உயர்த்துகிறார்கள்). இங்கு, நாங்கள் வைக்கும் கோரிக்கை நிறைவேறும் வரை, அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய இந்த விவசாயிகள் விடுதலை பாராளுமன்றம், இந்தியா குடியரசான ஜனவரி 26-ம் தேதி வரை விவசாயிகள் விடுதலை இயக்கமாகத் தொடரும்” என்றார்.

இறுதியில் மேதா பட்கர் தலைமையில் அகிம்சை வழிப் போராட்டம், நிலத்தை அபகரிக்க விடமாட்டோம், சமத்துவ வாழ்வு போன்ற உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.