பாரம்பர்ய நெல் ரகங்களைச் சேகரித்து அதைப் பலருக்கும் கொடுத்துப் பரப்பிவந்தவர், புதுச்சேரி மாநிலம், குருவிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ‘நெல்’ கிருஷ்ணமூர்த்தி. அறுபத்து நான்கு வயது நிரம்பிய கிருஷ்ணமூர்த்தி, கடந்த நவம்பர் 15-ம் தேதி இயற்கை எய்திவிட்டார்.

‘மட்கிய இலைதழைகள்தான் மண்ணுக்கான இயற்கைச் சத்து’ என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இயற்கை விவசாயம் மேற்கொண்டு வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. ஆரம்பகாலங்களில் உரக்கடை நடத்திவந்தார். பத்தாண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி மாநிலம் பாகூரில், புதுச்சேரி அறிவியல் கழகத்தோடு இணைந்து ‘பசுமை விகடன்’ நடத்திய ‘இனியெல்லாம் இயற்கையே’ பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சி எடுத்தவர். அந்தப் பயிற்சியின்போது இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரிடம் அறிமுகமாகி, அவரின் கோட்பாடுகளைப் பின்பற்றத் தொடங்கினார் கிருஷ்ணமூர்த்தி. தொடர்ந்து பாரம்பர்ய நெல் ரகங்களையும் சேகரித்துப் பரப்ப ஆரம்பித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில், நம்மாழ்வாரைக்கொண்டு முதன்முதலாக ‘பாண்டிச்சேரி இயற்கை விவசாயிகள் சங்க’த்தை ஆரம்பித்துப் பல பணிகளை மேற்கொண்டு வந்தார். இவருடைய சேவைகளுக்காக, மத்திய அரசின் ‘கிரிஷி கர்மாண் புரஸ்கார் விருது’ உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து பாரம்பர்ய நெல் ரகங்களை மட்டுமே தன் நிலத்தில் சாகுபடி செய்துவந்தார். ‘இலவசமா கொடுத்தா மதிப்பு இருக்காது’ என்று சொல்லிப் பாரம்பர்ய விதைகளை விலைக்குத்தான் விற்பனை செய்வார் கிருஷ்ணமூர்த்தி. ஆனாலும் சூழல் அறிந்து பலருக்கு இலவசமாகவும் விதைகளை வழங்கி, பாரம்பர்ய நெல் சாகுபடியை ஊக்குவித்திருக்கிறார். பாரம்பர்ய நெல்லைக் கைகுத்தல் அரிசியாக்கி பல இயற்கை அங்காடிகளுக்கும் அனுப்பியிருக்கிறார்.

கிருஷ்ணமூர்த்தி குறித்துச் சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார், ‘நமது நெல்லைக் காப்போம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ‘நெல்’ ஜெயராமன். “எங்கே நெல் திருவிழா நடந்தாலும் பத்து, இருபது விவசாயிகளை அழைத்துக்கொண்டு வந்துவிடுவார். கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்றுவந்த பாரம்பர்ய நெல் விதைகள் மீட்பு பிரசாரத்தில் முக்கியப்பங்கு வகித்திருக்கிறார். பாரம்பர்ய நெல் ரகத்தை மதிப்புக்கூட்டித்தான் விற்க வேண்டும் என்ற கொள்கையுடையவர். பல அமைப்புகள் நெல் திருவிழாவை முன்னெடுத்தற்கு உறுதுணையாக இருந்தவர். இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் நாம், அதைச் சார்ந்த இயற்கை முறையிலான வாழ்க்கை முறையையும் மேற்கொள்ள வேண்டும் என்று கடைசி வரை வாழ்ந்தவர். அவரின் இறப்பு பாரம்பர்ய நெல் சேகரிப்பாளர்களுக்குப் பெரும் இழப்புதான்” என்றார் ஜெயராமன்.

அவர் மறைந்தாலும், அவர் பரவலாக்கிய பாரம்பர்ய ரக நெல் மணிகள், அவரை நினைவில் நிறுத்திக் கொண்டேதான் இருக்கும்.