பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்திக்குப் பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது ஏற்பட்ட பாதிப்பால், கிட்டத்தட்ட இருநூறு பேர் மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பியுள்ளனர்.

வேளாண்மைத்துறை பரிந்துரைத்துள்ள பூச்சிக்கொல்லி அளவு, அதைக் கலக்கும் முறை, அதைத் தெளிக்கும்போது மேற்கொள்ளப்படவேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட எந்தத் தகவல்களும் இப்பகுதி விவசாயிகளில் பெரும் பாலானோருக்குத் தெரிய வில்லை என்பதுதான் வேதனை. பல விவசாயிகள் எச்சரிக்கையோடு பூச்சிக் கொல்லிகளைக் கையாள்கிறார்கள். இருந்தாலும், இவர்களின் உயிரோடு விளையாடியிருக்கிறது மோனோ குரோட்டாபாஸ்.

மரணப் போராட்டத்திலிருந்து மீண்டு வந்துள்ள விவசாயி பிரபாகரன், “மூக்குக்குத் துணி, தலைக்கு ஹெல்மெட், உடம்புக்கு ரெயின் கோட் என்று எல்லா கவசத்தையும் போட்டுக்கிட்டுத்தான் பூச்சிக்கொல்லி தெளிச்சேன். பாதிப்பு வராம இருக்கிறதுக்காகப் பூச்சிமருந்து தெளிச்ச பிறகு வாழைப்பழமும் சாப்பிட்டேன். ஆனாலும் வாந்தி, பேதி, தலைசுற்றல் வந்து மயங்கி விழுந்துட்டேன். அரசு மருத்துவமனையில, ‘காப்பாத்த முடியாது’னு என்னை அனுப்பிட்டாங்க. தனியார் ஆஸ்பத்திரியில நாலு நாள் தங்கி 57 ஆயிரம் ரூபாய் செலவு செஞ்சுதான் உயிர் பொழச்சிருக்கேன்” என்றார் திகில் விலகாத கண்களோடு.

இன்னோரு விவசாயி மணிகண்டன், “நான் 4 ஏக்கர் நிலத்துல பி.டி பருத்தி போட்டிருக்கேன். பயிர் உயரமா வளந்திருக்கிறதால அண்ணாந்து பார்த்துத்தான் பூச்சிக்கொல்லி தெளிச்சேன். அதனால, நெடி மூக்குல ஏறி தலைசுத்தி மயங்கி விழுந்திட்டேன். போராடிதான் உயிர் பொழச்சிருக்கேன்” என்றார்.

இதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல், “எப்பவும் நாங்க வழக்கமா அடிக்கிற பூச்சிக்கொல்லியைத்தான் அடிச்சோம். ஆனா, இந்த வருஷம் மாதிரி எப்பவும் எங்களுக்குப் பிரச்னை வந்ததில்லை. ஒருவேளை, வீரியம் அதிகமான பூச்சிக்கொல்லியைக் கொடுத்துட்டாங்களோ என்னவோ” என்று சந்தேகத்தைக் கிளப்பியவர், “பூச்சிக்கொல்லி தெளிச்ச எங்களுக்குத்தான் பாதிப்பு வந்தது. பயிர்கள்ல இருந்த காய்ப்புழுக்களெல்லாம் அசரவேயில்லை” என்று அதிர்ச்சியூட்டினார்.

இப்பிரச்னை குறித்துப் பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுதர்சனிடம் பேசினோம், “இந்த வருஷம் விவசாயிகள் பயிர் வளர்ச்சி ஊக்கியைப் பயன்படுத்தியிருக்காங்க. அதனாலதான் பயிர்கள் உயரமா வளர்ந்திருக்கு. இருபது லிட்டர் தண்ணீருக்கு 600 மில்லி பூச்சிக்கொல்லினுதான் கலந்து அடிக்கணும். ஆனா, விவசாயிகள் அதிகளவுல பூச்சிக்கொல்லியைக் கலக்குறாங்க. பூச்சிக்கொல்லி அடிக்கும்போது பாதுகாப்புக் கவசங்களையும் போட்டுக்கிறது இல்லை.

பி.டி பருத்திக்கு நாங்க ஆதரவும் இல்லை. எதிர்ப்பும் இல்லை. அதைச் சாகுபடி செய்யச்சொல்லி வேளாண் துறை பரிந்துரை செய்யறதில்ல. அதிக மகசூலுக்காக விவசாயிகள் அவங்களாத்தான் பி.டி பருத்தியை விரும்பிச் சாகுபடி செய்றாங்க” என்றார்.

நாட்டுப் பருத்தியில் பிரச்னை இல்லை!

இப்பகுதியில் நாட்டுப்பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயி குரு, “பி.டி பருத்தியில் ஆரம்பத்துல ஏக்கருக்கு 12 குவிண்டால் வரை மகசூல் கிடைச்சது. அப்புறம் படிப்படியா மகசூல் குறைஞ்சுடுச்சு. எட்டுக் குவிண்டால் எடுக்கிறதே பெரிய விஷயமாயிடுச்சு. அதனால, நான் இந்தத் தடவை ‘கருங்கண்ணி’ங்கிற நாட்டுப்பருத்தியைத்தான் சாகுபடி செஞ்சேன். இதுக்கு ரசாயன உரம், பூச்சிக்கொல்லினு எதுவும் தேவையில்லை. எவ்வளவு மகசூல் எடுத்தாலும் கிடைக்கிறது முழுக்க லாபம்தான்” என்று சொன்னார்.