ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் தேவை அதிகமாக இருப்பதால், அவற்றிலும் கலப்படம் செய்ய ஆரம்பித்துவிட்டனர் உர வியாபாரிகள். கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கிளம்பி வந்த சூழ்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலூகாவில் உள்ள நாகலாபுரத்தில், ஒரு தனியார் உரக்கடையில் போலியான டி.ஏ.பி உரம் விற்பனை செய்யப்பட்டதை விவசாயிகள் கையும் களவுமாகப் பிடித்திருக்கின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ் மாநில விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் நாராயணசாமி, “எங்க சங்கத்தைச் சேர்ந்த சில விவசாயிகள் நாகலாபுரத்திலுள்ள ‘பொன்ராம் ஏஜென்ஸி’ங்கிற உரக்கடையில் ‘ஸ்பிக்’ நிறுவனத்தோட உர மூட்டைகளை வாங்கியிருக்காங்க. அந்த உரத்தை கையில எடுத்துப் பார்த்தப்போ வழக்கமான பதத்துல இல்லாம, வித்தியாசமான வாசனையோட இருந்திருக்கு. இதப்பத்தி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்கள்ல புகார் கொடுத்தோம்.

ஆனா, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கல. நாங்களும் கொஞ்ச நாள் பொறுத்துப் பார்த்தோம். மாவட்ட நிர்வாகம் கண்டுக்காம விட்டதால, நாங்களே களத்துல இறங்கலாம்னு முடிவு பண்ணினோம்.

போன அக்டோபர் 14-ம் தேதி அந்தப் பகுதி விவசாயி ஒருத்தர் மூலமா ஒரு மூட்டை காம்ப்ளக்ஸ் உரத்தையும் ஒரு மூட்டை டி.ஏ.பி உரத்தையும் வாங்கினோம். ரெண்டு மூட்டையிலயும் குத்தூசி வெச்சுக் குத்தி உரத்தைக் கையிலெடுத்துப் பார்த்தப்போ சாம்பலும் களிமண்ணுமா இருந்துச்சு.

உடனே, இது போலினு தெரிஞ்சது. டி.ஏ.பி உரத்தை ஸ்பிக் கம்பெனி பெயர்ல பேக்கிங் பண்ணிருந்தாங்க. காம்ப்ளக்ஸ் உர மூட்டையில இரட்டை யானை படம் இருந்துச்சு. அது கொச்சின்ல இருக்கிற ஒரு கம்பெனியோட லோகோ. அந்த கம்பெனியை மூடியே ரெண்டு வருஷமாச்சாம்” என்ற நாராயணசாமி தொடர்ந்தார்... “கடை வாசல்ல இருந்துகிட்டே வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் சொன்னோம். அவங்க ஒரு மணிநேரம் கழிச்சு வந்து, உரத்தைப் பார்த்து சாம்பிள் எடுத்துக்கிட்டு அந்தக் கடைக்குச் சீல் வெச்சாங்க. ‘டெஸ்டுக்கு அனுப்புறோம். ரிப்போர்ட் வந்ததும் நடவடிக்கை எடுக்கிறோம்’னு சொன்னாங்க. பத்தே நாள்ல ஆய்வறிக்கை முடிவு வந்தும், அதை எங்களுக்குத் தெரியப்படுத்தவேயில்லை. அப்புறம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக ஆய்வறிக்கை முடிவை வாங்கினோம்.

அதுல போலியான உரம்னு தெரிஞ்சும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கல. இப்போ வழக்குத் தொடுத்திருக்கிறதா சொல்றாங்க. அந்த உரக்கடைக்காரரையும் அவருக்கு அனுப்புன டீலரையும் கைது பண்ணலைன்னா பெரியளவுல போராட்டம் நடத்தலாம்னு இருக்கோம்” என்றார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு அதிகாரி அடைக்கலத்திடம் இந்தப் போலி உரம் குறித்துப் பேசினோம். “இதுல சம்பந்தப்பட்டிருக்கிற கந்தவேல், குமரேசன் ரெண்டு பேருமே, எங்க கம்பெனி டீலர் கிடையாது. அவங்களுக்கு எங்க உரங்களை சப்ளை பண்றதில்ல. குமரேசன், இந்த உர மூட்டைகளைப் பெங்களூருவிலிருந்து வாங்கினதா சொல்றார். ஆனால், அவர்கிட்ட அதுக்கான பில் உள்பட எந்த ஆதாரமும் இல்லை.

எங்க கம்பெனி பெயர் போட்ட பழைய சாக்குகளை எடுத்துப் பயன்படுத்தினாங்களா, இல்ல எங்கள் கம்பெனி பெயர் போட்டுப் போலியா சாக்கு தயார் பண்ணுனாங்களானு தெரியல. நாங்களும் இதப்பத்தி, வேளாண்மைத்துறை தரக்கட்டுப்பாட்டுப் பிரிவுல புகார் கொடுத்திருக்கோம். அந்த உரக்கடையில விற்பனைசெய்யப்பட்டது எங்களோட கம்பெனி தயாரிப்பு கிடையாதுங்கிற விளக்கத்தையும் கொடுத்திருக்கோம்” என்று முடித்துக் கொண்டார்.

வழக்குத் தொடுத்திருக்கிறோம்!

தூத்துக்குடி வேளாண்மைத்துறை தரக்கட்டுப்பாட்டு அலுவலர் பழனி வேலாயுதத்திடம் இதுகுறித்துக் கேட்டபோது, “பரிசோதனை அறிக்கையில ‘அந்த உரத்தில் சத்துக்கள் இல்லை. தரம் குறைவா இருக்கு’னு சொல்லியிருந்தாங்க.

அதனால, அந்த உரத்தை விற்பனை செஞ்ச உரக்கடைக்காரர் கந்தவேல், அவருக்கு உரத்தை சப்ளை செஞ்ச டீலர் குமரேசன் ரெண்டு பேர் மேலயும் ‘விவசாயிகளை ஏமாற்றி மோசடி செய்தல்’ங்கிற பிரிவுல வழக்குத் தொடுத்திருக்கோம்.

நான், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வேலைகள்ல பரபரப்பா இருக்கேன். அப்புறம் பேசுங்க” என்று அவசரகதியில் பேசி செல்போன் இணைப்பைத் துண்டித்தார்.