அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘பரம்பராகட் கிரிஷி விகாஸ் யோஜனா’

-இந்த வார்த்தைகளை எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இதை ‘பாரம்பர்ய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்’ என்று தமிழில் மொழிபெயர்க்கலாம். சரி, இப்போதாவது கேள்விப்பட்டதுபோல இருக்கிறதா?

பெரும்பான்மையோரின் பதில் ‘இல்லை’ என்பதாகத்தான் இருக்கும்.

‘ஆர்கானிக் ஃபார்மிங்’ என்றழைக்கப்படும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வு, உலக அளவில் வேகமெடுத்துக்கொண்டே வருகிறது. இதை இந்தியாவிலும் ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் இந்த ‘பரம்பராகட் கிரிஷி விகாஸ் யோஜனா (PKVY-Paramparagat Krishi Vikas Yojana).

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி புரிந்தபோது கொண்டுவரப்பட்ட திட்டம்தான் இது. ஆனால், அவ்வளவாக விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கப்படவே இல்லை. அவ்வளவு ஏன், புதுடெல்லியில் கடந்த நவம்பர் 9-ம் தேதி அன்று சர்வதேச இயற்கை விவசாய மாநாட்டில், மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் இதைப் பற்றிப் பேசும்வரையிலும்கூட இயற்கை விவசாயிகளின் காதுகளுக்கு இது வந்து சேர்ந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. தற்போது, சில மாற்றங்களுடன் 2015-ம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்தைப் பா.ஜ.க அரசு செயல்படுத்தி வருவதை மேடையில் பேசிய அமைச்சர், “விவசாயக் கூட்டுக்குழுமங்கள், இயற்கை விவசாயப் பயிற்சி, அங்கக நிலங்களாக மாற்ற நிதியுதவி, இடுபொருள்கள், இயற்கை விவசாயச் சான்றிதழ் என்று பலவும் வழங்கப்படுகின்றன. இதுவரை 3.6 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை, அடுத்த ஆண்டில் இருமடங்காக உயர்த்தப்படும்’’ என்றெல்லாம் சொல்லி, இன்ப அதிர்ச்சியூட்டினார்.

நல்லதொரு திட்டத்தைச் செயல்படுத்திவரும் மத்திய அரசு, இப்போதாவது இதைப்பற்றி உரக்கச் சொன்னால், இயற்கையின் பக்கம் ஏராளமானோர் திரும்புவார்களே!

- ஆசிரியர்