Published:Updated:

மூடுவிழாவுக்குத் தயாராகும் ஆராய்ச்சி நிலையங்கள்... - கொந்தளிப்பில் விவசாயிகள்!

மூடுவிழாவுக்குத் தயாராகும்  ஆராய்ச்சி நிலையங்கள்... - கொந்தளிப்பில் விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
மூடுவிழாவுக்குத் தயாராகும் ஆராய்ச்சி நிலையங்கள்... - கொந்தளிப்பில் விவசாயிகள்!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன், படங்கள்: தே.தீட்ஷித்

மூடுவிழாவுக்குத் தயாராகும் ஆராய்ச்சி நிலையங்கள்... - கொந்தளிப்பில் விவசாயிகள்!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன், படங்கள்: தே.தீட்ஷித்

Published:Updated:
மூடுவிழாவுக்குத் தயாராகும்  ஆராய்ச்சி நிலையங்கள்... - கொந்தளிப்பில் விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
மூடுவிழாவுக்குத் தயாராகும் ஆராய்ச்சி நிலையங்கள்... - கொந்தளிப்பில் விவசாயிகள்!

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையம், சென்னையில் உள்ள உவர்நீர் மீன் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றைத் தமிழகத்தில் இருந்து வெளியேற்றி, வேறு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். மத்திய அரசின் இச்செயல்பாட்டுக்கு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேளாண்மை சார்ந்த 103 ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இவற்றுக்கான செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்த ‘நிதி ஆயோக்’ அமைப்பு, இந்தியாவில் 43 ஆராய்ச்சி நிறுவனங்களை மூடிவிடலாம் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. இவற்றில் தமிழகத்தில் இயங்கக்கூடிய மூன்று ஆராய்ச்சி மையங்களும் அடக்கம். முதல்கட்டமாக, இந்த ஆராய்ச்சி மையங்களின் சுய அதிகாரத்தைப் பறித்து, சாதாரண கிளை நிறுவனமாக மாற்றி, செயல்பாடுகளை முடக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மூடுவிழாவுக்குத் தயாராகும்  ஆராய்ச்சி நிலையங்கள்... - கொந்தளிப்பில் விவசாயிகள்!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தோடு திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்தையும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கரும்பு ஆராய்ச்சி மையத்தோடு கோயம்புத்தூர் கரும்பு ஆராய்ச்சி மையத்தையும், கேரளா மாநிலத்தில் உள்ள கடல்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தோடு சென்னை உவர்நீர் மீன் ஆராய்ச்சி மையத்தையும் இணைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்துத் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சிலரிடம் பேசினோம். ‘பெயர் வெளியிட வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்ட அவர்கள், “வருஷத்துக்குப் பத்தாயிரத்துக்கும் அதிகமான வாழை விவசாயிகள் எங்கள் மையத்தைத் தொடர்புகொண்டு பலன் அடையுறாங்க. வேளாண் அறிவியல் மையங்கள் மூலமாகவும் விவசாயிகளைச் சந்திச்சு ஆலோசனைகள் கொடுக்கிறோம். இதுவரைக்கும் புதிய 4 வாழை  ரகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இன்னும் 6 ரகங்களைப் புதுசா அறிமுகப்படுத்த இருக்கிறோம்.  வாழையைத் தாக்கக்கூடிய பூச்சிகள், நோய்களைத் தடுப்பதற்கு நாங்கள் கண்டுபிடித்த தடுப்பு முறைகள் எல்லாமே, விவசாயிகளுக்கு நல்ல பலன் கொடுத்துக்கிட்டு இருக்கு. எங்கள் ஆராய்ச்சி மையத்தை வேறு மாநிலத்தில இருக்கிற மையத்தோடு இணைச்சா எங்களோட செயல்பாடுகள் எல்லாமே முடங்கிடும். தமிழகத்துல ஒரு விவசாயி, வாழைச் சாகுபடில ஏதாவது பிரச்னைனு எங்களை அழைச்சா... உடனடியா அவரோட தோட்டத்துக்குப் போக முடியாது. அதுக்கான அனுமதி வாங்க காத்திருக்க வேண்டியிருக்கும். அதோடு தமிழ்நாட்டு விவசாயிகளுக்குத் தேவையான ஆராய்ச்சிகளைச்செய்ய நாங்க முடிவெடுக்க முடியாது. தேவையான நிதியும் கிடைக்காது. தலைமை நிறுவனம் சொல்ற ஆராய்ச்சிகளைத்தான் மேற்கொள்ள முடியும்” என்றனர்.

மூடுவிழாவுக்குத் தயாராகும்  ஆராய்ச்சி நிலையங்கள்... - கொந்தளிப்பில் விவசாயிகள்!

இப்பிரச்னை குறித்து நம்மிடம் பேசிய திருச்சியைச் சேர்ந்த முன்னோடி வாழை விவசாயியும் தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணிச் செயலாளருமான ‘புலியூர்’ நாகராஜன், “உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முந்நூற்றுக்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய உதயம், ஜி-9 ஆகிய வாழை ரகங்கள் விவசாயிகளுக்குப் பல வகையில் உறுதுணையாக இருக்கின்றன. தேனி மாவட்டத்தில் ஜி-9 வாழை, பெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘பனானா சக்தி’ என்ற இடுபொருள் மிகவும் சிறப்பானது. நெல் உமி சாம்பலின் மகத்துவத்தையும் இந்த நிறுவனம்தான் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியது. உலக அளவில் இந்த நிறுவனம் விருது வாங்கியுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் வாழைச் சாகுபடி அதிகம். இதற்கான ஆராய்ச்சி நிறுவனம், இங்கேயே சுய அதிகாரம் பெற்ற அமைப்பாகச் செயல்பட்டால்தான், எங்களுக்குப் பலன் உள்ளதாக இருக்கும். இந்த ஆராய்ச்சி மையத்தின் தன்னாட்சி அதிகாரம் குறைக்கப்பட்டால் விவசாயிகளைத் திரட்டிப் போராட்டங்களில் இறங்குவோம்” என்றார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயியும் இந்திய விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவருமான விருத்தகிரி, “கோயம்புத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையம், பூச்சி மற்றும் நோய்கள் தாக்காத, அதிகச் சர்க்கரை கட்டுமானம் உள்ள ஏராளமான கரும்பு ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரகங்கள்தான் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கோ-205, கோ-419 போன்ற ரகங்கள் புகழ்பெற்றவை. மற்ற மாநிலங்களைவிடத் தமிழ்நாட்டில்தான் அதிக நாள்கள் சர்க்கரை அரவை நடைபெறுகிறது. அதிகளவில் கரும்புச் சாகுபடி செய்யப்படும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. நம்முடைய மண்ணுக்கும் நீருக்கும் ஏற்ற ஆராய்ச்சிகள் நடைபெற, இங்குள்ள நிறுவனங்கள் சுய அதிகாரத்தோடு தன்னிச்சையாகச் செயல்பட வேண்டியது அவசியம்” என்றார்.

மூடுவிழாவுக்குத் தயாராகும்  ஆராய்ச்சி நிலையங்கள்... - கொந்தளிப்பில் விவசாயிகள்!

சென்னையில் உள்ள உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் பேசியபோது, “இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் உவர்நீர் மீன் வளர்ப்புக்கான ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய இறால் வளர்ப்பு முறையின் மூலம் இந்திய அளவில் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலும், தமிழ்நாட்டில் 1,200 கோடி ரூபாய் அளவிலும் இறால் வியாபாரம் நடக்கிறது. இறால் குஞ்சுகள் உற்பத்தி, தீவன உற்பத்தி, மதிப்புக்கூட்டிய பொருள்கள் தயாரிப்பு ஆகியவையும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. கொடுவா மீன் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு ஆகியவற்றையும் நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

மூடுவிழாவுக்குத் தயாராகும்  ஆராய்ச்சி நிலையங்கள்... - கொந்தளிப்பில் விவசாயிகள்!

கழிமுகப் பகுதியில் வளரக்கூடிய மீன்களுக்கான ஆராய்ச்சி நிறுவனம் இது. இதைக் கேரளாவில் உள்ள கடல்நீர் மீன்களுக்கான ஆராய்ச்சி நிலையத்துடன் இணைப்பது மிகவும் அபத்தமானது. அப்படி இணைத்தால், உவர்நீர் உயிரினங்கள் வளர்ப்பு குறித்தான ஆராய்ச்சிகள் பெருமளவு குறைக்கப்படும்” என்றார். தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஜ்ய சபா உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பாரபட்சம் இல்லாமல் ஒருங்கிணைந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி, இந்த ஆராய்ச்சி நிலையங்களைத் தமிழகத்திலேயே தொடர வைக்க வேண்டியது அவசியம்.