Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

ஆடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்பர் 12-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 19-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

தண்டோரா

முருங்கை மதிப்புக்கூட்டல்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் டிசம்பர் 12-ம் தேதி ‘முருங்கையில் மதிப்புக்கூட்டல்’, 13-ம் தேதி ‘மானாவாரி பயிர் உழவு முறைகள்’, 14-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

தேனீ வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் டிசம்பர்  12-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 14-ம் தேதி ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’, 19-ம் தேதி ‘காடை வளர்ப்பு’, 21-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’, 28-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.

தண்டோரா

பாரம்பர்ய நெல் கருத்தரங்கு

திருவாரூர் செல்வீஸ் ஹோட்டலில், டிசம்பர் 23-ம் தேதி, தேசிய உழவர் மற்றும் நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, ‘பாரம்பர்ய நெல் கருத்தரங்கு’ நடைபெறவுள்ளது. அம்பலவாணன், ‘நெல்’ஜெயராமன்... போன்ற முன்னோடி விவசாயிகள் கருத்துரை வழங்கவுள்ளனர். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 94433 20954.

 அசோலா உற்பத்தி

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் டிசம்பர் 12, 13-ம் தேதிகளில் ‘அசோலா உற்பத்தி’, 19, 20-ம் தேதிகளில் ‘தென்னை சாகுபடிகேற்ற மண் மேலாண்மை முறைகள்’, 21, 22-ம் தேதிகளில் ‘நன்னீர் மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி 044 27452371

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.