Published:Updated:

இயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்!

இயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்!

மாநாடுத.ஜெயகுமார்

இயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்!

மாநாடுத.ஜெயகுமார்

Published:Updated:
இயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்!

சென்ற இதழ் தொடர்ச்சி...

புதுடெல்லி அடுத்துள்ள கிரேட்டர் நொய்டாவில் ‘இந்தியா எக்ஸ்போ மார்ட்’ என்னுமிடத்தில்... கடந்த நவம்பர் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற்ற ‘ஆர்கானிக் வேர்ல்டு காங்கிரஸ்-2017’ எனும் ‘19-வது இயற்கை விவசாய மாநாடு’ குறித்த செய்தியைக் கடந்த இதழ்களில் பதிவு செய்திருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கே இடம்பெறுகிறது.

இந்தியாவில் இயற்கை விவசாயத்தைச் செயல்படுத்துவதில் பல மாநிலங்கள் ஆர்வமாக உள்ளன. அவற்றில் ஒன்று கேரளா. இந்த இயற்கை மாநாட்டில் கேரள மாநிலத்தின் அரங்கு, சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. கிழங்கு வகைகள், வாழை ரகங்கள், தென்னை என்று களைகட்டி இருந்தது அரங்கு. அரங்கில் இருந்த கேரள வேளாண்மைத்துறையின் துணை இயக்குநர் பேபி கிரிஜாவிடம் பேசினோம்.

இயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்!

“கடந்த 2010-ம் ஆண்டு, எங்கள் மாநிலத்தில், ‘இயற்கை விவசாயக் கொள்கை’ அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு ‘பட்ஜெட்’ தாக்கலின்போதும் இயற்கை விவசாயத்துக்கென்று கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு (2017-18) பத்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தென்னை, வாழை, நெல், கிழங்கு வகைகள், காய்கறிகள்தான் கேரளாவின் முக்கியப் பயிர்கள். ஜீவாமிர்தம், இலைதழை உரம், நுண்ணுயிர் உரங்கள், பயோ உரங்கள் ஆகியவற்றைத்தான் நாங்கள் பரிந்துரைக்கிறோம். மாநிலத்தில் ஆளும் மக்கள் பிரதிநிதிகளும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால், இயற்கை விவசாயம் குறித்த வேளாண்மைத்துறையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்!

அதனால்தான் இவ்வளவு பிரமாண்டமாக அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, பூச்சிக்கொல்லி இல்லா விவசாய முறையைப் பரவலாக்கிக்கொண்டும் இருக்கிறோம். இயற்கை விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 15 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் இயற்கை விவசாயத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன” என்றார்.

மாநாட்டில் கலந்துகொண்ட கேரள மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார், கேரளாவிலிருந்து வந்திருந்த இயற்கை விவசாயிகளோடு கலந்துரையாடினார். அப்போது பேசிய சுனில்குமார், “இயற்கை விளைபொருள்களே நமது மாநிலத்தின் சிறப்பம்சம். தென்னை, தேன், சிறுதானியங்கள் இயற்கையான முறையிலேயே விளைகின்றன. அதனால், அந்தப் பொருள்களுக்குச் சந்தையில் சிறப்பான வரவேற்பு இருக்கிறது.

இயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்!

ஏற்கெனவே ரசாயனமில்லா விவசாயம் என்பதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். அதற்காக மாடித்தோட்டம், வேளாண் பயிர்கள் என்ற திட்டங்களின்மூலம் இயற்கைக் காய்கறிகள் உற்பத்தி நடக்கிறது. இவற்றை விற்பனை செய்வதற்காக இயற்கை விவசாயிகள் அடங்கிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சில நடைமுறை சிக்கல்களைக் களைந்தால், விரைவில் சிக்கிமைப்போல,கேரளாவும் முழு இயற்கை விவசாய மாநிலமாக மாறிவிடும்” என்று நம்பிக்கையை விதைத்துச்சென்றார்.

சிக்கிம், கேரளா ஆகிய மாநிலங்களை அடுத்து மிசோரம், நாகாலாந்து, மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டிவருகின்றன. இந்த மாநிலங்கள், இயற்கை விவசாயத்தை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்து வருகின்றன. இதுகுறித்துப் பேசிய மிசோரம் மாநில வேளாண் விற்பனைத்துறை அதிகாரி லல்ரோதுலங்கி, “எங்கள் மாநிலத்தில் 1996-ம் ஆண்டே இயற்கை விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதைச் சார்ந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

இயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்!

2004-ம் ஆண்டில் சட்டசபையில், இயற்கை விவசாய மசோதா கொண்டு வரப்பட்டது. இயற்கை விவசாயத்தின் முக்கிய இடுபொருளான மண்புழு உரம், அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டுமென்பதால், அரசாங்கமே மண்புழு உரத்தைத் தயாரித்து மிகக் குறைந்த விலைக்கு விற்பனைசெய்கிறது.

இயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்!

இயற்கை விவசாயிகளை இணைத்துக் குழுக்களை உருவாக்குவது, அவர்களின் விளைபொருள்களுக்கு விற்பனை வாய்ப்பளிப்பது போன்ற செயல்களைச் செய்துவருகிறோம். மொத்தமுள்ள 7 மாவட்டங்களில் 179 விவசாயக் குழுக்கள் உருவாக்கப் பட்டுள்ளன. மொத்தம் 4,050 ஹெக்டேர் பரப்பில் 5,735 விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

இப்போது ‘மிசோரம் ஆர்கானிக் மிஷன்’ (மாம்-MOM Mizoram Organic Mission) என்ற திட்டத்தைச் செயல்படுத்திவருகிறோம். இதன்படி நல்ல விற்பனை வாய்ப்புள்ள, அதேசமயம் அதிகளவில் விளையும் மிளகாய், இஞ்சி, மஞ்சள் ஆகிய பொருள்களை இயற்கை முறையில் விளைவிக்க வழிகாட்டி வருகிறோம். இந்தப் பொருள்களுக்கு நாடு முழுவதும் நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கிறது. எங்கள் மாநில நாட்டு மிளகாய் ரகமான ‘பறவைக்கண் மிளகாய்’ (Bird Eye Chilli) நல்ல காரம் கொண்டது. சிறிய அளவில் இருக்கும் இந்த மிளகாயை இந்திய நறுமணப் பொருள்கள் வாரியம் ‘நாட்டின் சிறந்த காரமான மிளகாய்’ என்று அறிவித்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் முழுமையான இயற்கை விவசாய மாநிலமாக மிசோரம் மாறிவிடும்” என்றார்.

இயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்!

மாநாட்டை ஒருங்கிணைத்த இந்திய இயற்கை விவசாயக் கூட்டமைப்பின் இயக்குநர் கிளாடு ஆல்வாரிஸ், “மாநாடு நடந்த மூன்று நாள்களும் 110 நாடுகளிலிருந்து வந்திருந்த வெளிநாட்டினருக்கும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயத்தில் விளைந்த உணவு வகைகள்தான் பரிமாறப்பட்டன.

இயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்!

இவற்றில் சிறுதானியங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. இந்த மாநாட்டின் மூலமாக வெளிநாட்டினர், இந்திய விவசாயிகள் கற்றுக்கொண்ட பாடத்தைவிட, அரசுகள்தான் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஊடகங்கள் இங்கு பேசப்பட்ட விஷயங்களை அதிக அக்கறைகொண்டு மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டும். இங்கு நடைபெற்ற விஷயங்கள் அனைத்தையும் 12 மொழிகளில், இணையத்தில் பதிவேற்ற இருக்கிறோம். இந்த மாநாடு சிறப்பாக நடைபெறப் பங்களித்த அபீடா நிறுவனம், மத்திய வேளாண் அமைச்சகம், சிக்கிம், கேரளா, உத்திரப் பிரதேச மாநில அரசாங்கங்கள் ஆகியவற்றுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த இயற்கை விவசாய மாநாடு, 2020-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. அங்கு சந்திப்போம்” என்றார்.

- நிறைவுற்றது. 

மரபணு மாற்று விதைகள் 2.0

“உணவைப் பொருளாதாரப் பார்வையில் பார்க்க வேண்டாம். அவற்றை உணவு என்ற அடிப்படையிலேயே பாருங்கள்” என்று வேண்டுகோள் வைத்துள்ளார், ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஏஞ்சலிக்கா ஹில்பெக். மாநாட்டின் முதல் நாளில் பேசிய ஹில்பெக், “1995-ம் ஆண்டிலிருந்து மரபணு மாற்று விதைகள் அமெரிக்காவில் இருந்து வருகின்றன. வர்த்தக ரீதியாகப் பயிரிடப்படும் பருத்தி, சோயாபீன், மக்காச்சோளம், கனோலா (எண்ணெய்வித்துப்பயிர்) ஆகியவை மரபணு மாற்றம் செய்யப்பட்டவை. இதன்மூலம் அமெரிக்காவில் கேன்சர் போன்ற நோய்கள் பெருகியது. இவற்றால் தொழிற்சாலைமயமாக்கம் தான் (இன்டஸ்ட்ரியலைசேஷன்) வந்ததே ஒழிய, விவசாயிகளுக்கு எந்த மாற்றமும் வரவில்லை.

இயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்!

இதெல்லாம் தெரிந்தும், 2002-ம் ஆண்டில் பி.டி பருத்தி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால், ‘விளைச்சல் அதிகரித்ததா... பூச்சிகள் கட்டுப்பட்டனவா... விவசாயிகளின் வருமானம் உயர்ந்ததா? என்றெல்லாம் கேட்டால், ‘இல்லை’ என்கிற பதில்தான் கிடைக்கும். பி.டி கத்திரிக்காய் கொண்டுவரப்பட்டபோது, கடும் எதிர்ப்பின் காரணமாகப் பின்வாங்கப்பட்டது. இந்தியாவில் ஒரு பயிரைக் கொண்டு வருகிறோம் என்றால், அது பசியைப் போக்குவதாகவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி் செய்வதாகவும், இந்திய சீதோஷ்ண நிலையில் வளரக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

ஏற்கெனவே அறிமுகப்படுத்திய ஜி.எம் பயிர்களும் அதைச் சார்ந்து அரசுகள் அளித்த உறுதிமொழிகளும் பொய்யாகிக் கிடக்கும் நிலையில்... ‘ஜெனிட்டிக் இன்ஜினீயரிங் கமிட்டி’, மீண்டும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைக் கொண்டுவரத் துடிப்பது, பன்னாட்டு நிறுவனங்கள் பயனடைவதற்காகத்தான். இதைத்தான் ‘வெர்ஷன் 2.0’ என்கிறேன். இதனால், ஏழை மக்களுக்கு உணவிட முடியாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது” என்றார்.

பயோ டைனமிக்  மட்கிய உரம்!

‘சார்க் விகாஸ் சமிதி’ என்ற அமைப்பின் சார்பாகப் ‘பயோ டைனமிக்’ முறையில் தொழுவுரத்தைத் தயார்செய்யும் மாதிரி அமைப்பை மாநாட்டில் அமைத்திருந்தார்கள். இதுகுறித்து விளக்கிய அந்த அமைப்பின் இயக்குநர் சஞ்சய் ராமன், “மூன்று அடி அகலம், 9 அடி நீளம் என்ற அளவில் காய்ந்த நெல் வைக்கோல் அல்லது கோதுமைத்தாள்களைத் துண்டுகளாக்கிப் பரப்ப வேண்டும்.

இயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்!

அதன்மீது சாணக்கரைசலைத் தெளித்துப் பச்சையான இலைதழைகளைப் பரப்ப வேண்டும். இப்படி வைக்கோல், சாணக்கரைசல், இலைகள் என அடுக்குகளாக அடுக்கி, மேல்புறம் சாணத்தைக்கொண்டு மெழுகி 3 மாதங்கள் வைத்திருந்தால் அதிகச் சத்துகள்கொண்ட இயற்கை உரம் கிடைக்கும். இதை வயலில் தூவிவிட்டால், மண்ணில் மண்புழுக்கள் அதிகமாகப்பெருகி மண் வளமாகும். மகசூலும் அதிகரிக்கும்” என்றார்.

பண்ணைச் சுற்றுலாவில் ‘பஞ்சகவ்யா!’

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாநாட்டில் கலந்து கொண்டவர்களை அருகில் உள்ள இயற்கை விவசாயப் பண்ணைக்குச் சுற்றுலாவும் அழைத்துச் சென்றார்கள். உத்திரப் பிரதேச மாநிலம்,  நொய்டா நகருக்கு அருகில் உள்ள ‘ரீவையில்டு லைஃப் பயோ டைவர்சிட்டி ஃபார்ம்’ என்ற பண்ணைக்குப் பேருந்து சென்றது. சர்வதேச அளவில் நடத்தப்படும் நிகழ்வு என்பதால், இயற்கை விவசாயம்மூலம் பயிர்களின் வளர்ச்சியை, களத்தில் சென்று அறிந்து கொள்ளவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்!

பண்ணைச் சுற்றுலாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், பல நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டிருந்தனர். அப்போது, ‘‘தமிழ்நாட்டைச் சேர்ந்த கொடுமுடி டாக்டர் கே.நடராஜன்’’ என்று சொல்லி முடிக்கும் முன்பு, பண்ணைச் சுற்றுலாவுக்கான பொறுப்பாளரும், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயியுமான சர்வோத்தம் பட்டேல், டாக்டர் நடராஜனை நோக்கி ஓடிவந்து, கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார். உடனே குழுவினரை நோக்கி ‘‘இந்தக் குழுவில் உள்ள அனைவரும் அதிஷ்டசாலிகள். இந்தக் குழுவில், இந்தியாவின் இயற்கை விவசாய வளர்ச்சிக்கு, பக்கபலமாக இருக்கும் ‘பஞ்சகவ்யா’ என்ற அற்புதத்தைக் கண்டறிந்த டாக்டர் நடராஜன் இடம் பெற்றுள்ளார்...’’ என்று அறிவித்தவுடன் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டு, பஞ்சகவ்யா குறித்து விசாரிக்கத் தொடங்கினார்கள் பங்கேற்பாளர்கள்.

இந்தப் பண்ணையில் தற்போது, ஒரு மாத காலத்துக்கு முன்புதான் இயற்கை விவசாயப் பணிகள் தொடங்கப்பட்டிருந்தன. கீரை வகைகள், காய்கறிகள் போன்றவை செழிப்பாக வளர்ந்திருந்தன. இயற்கை விவசாயம் செய்தால், ஆரம்பத்தில் பயிர்கள் சரியாக வளராது எனச் சொல்பவர்கள் உண்டு. அந்தக் கருத்து உண்மையல்ல என்பதை நிரூபித்தது, இந்தப் பண்ணைச் சுற்றுலா.

ரெடிமேடு மண்புழு உரத்தொட்டி

சிமென்ட், மணல் கலந்து கட்டப்படும் தொட்டியில்தான் பெரும்பான்மையான விவசாயிகள் மண்புழு உரத்தைத் தயார் செய்துவருகிறார்கள். தற்போது தார்ப்பாலின் ஷீட்மூலம் மண்புழு உரத்தொட்டியை உருவாக்கியிருக்கிறது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம்.

இயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்!

இத்தொட்டியின் விலை 8 ஆயிரம் ரூபாய். இத்தொட்டியின் மூலம் 1 டன் அளவில் தொழுவுரம், மண்புழு உரத்தைத் தயாரிக்கலாம். இதை எளிதாக இடம் மாற்றவும் முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism